நாடு கடந்த அரசின் தமிழர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி

இணைய ஊடக அடக்கு முறைக்கு எதிரான இன்றைய நாளில் ஊடகங்கள் முடக்கப்படுவதை பகிரங்கமாகப் பதிவு செய்கிறோம்


ஈழம்ஈநியூஸ் இணையத்தளம் தாக்கப்பட்டதும் எல்லலைகளற்ற ஊடக அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதியான கெதர் பிளேக் (Heather Blake) அவர்கள் எம்மை தொடர்புகொண்டு தமது கவலைகளை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து உறுதியுடன் செயற்படுமாறும் அதற்கான ஆதரவை தொடாந்து வழங்குவதாகவும் எமக்கு அவர்களால் உறுதிதரப்பட்டது.

என்று நாம் உடனேயே கண்டித்திருந்தோம்

சைபர் தாக்குதலுககு எதிரான கண்டன நாளான இன்று எல்லலைகளற்ற ஊடக அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கும் இந்நாளில் இதை நினைவு கூருகிறோம். இந்த இடத்தில் அந்த இக்கட்டான நேரத்தில் எமக்கு ஆதரவு தந்த எல்லைகளற்ற ஊடக அமைப்புக்கு நமது நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.

நிலைமை இவ்வாறிருக்க ஈழம்ஈநியூஸ் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலையும் பகிரங்க கொலைமிரட்டலையும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்ததுடன் – அவதூறுகளையும் சுமத்தி தாக்குதல்தாரிகளை பாதுகாக்கும் முயற்சியிலும் நாடுகடந்த அரசு தீவிரமாக இருப்பதை சைபர் தாக்குதல்தினமான இன்று இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஊடகவியலாளர்கள் ஊடகங்களிற்கான அமைப்பு என்று சொல்லிக்கொள்பவர்கள் சிலர் அரசியல்வாதிகளின் சூழ்சிக்குள் சிக்கி உடக அடக்குமுறைக்கும் அச்சுறுத்தலுக்கும் துணைபோவதையும் இந்த இடத்தில் வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறோம்.

சைபர் தாக்குதல் குறித்து கடந்த 10 ம்திகதி நாடுகடந்த அரசின் ஊடக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூட ஈழம்நியூஸ் குறித்து எந்த குறிப்பும் இல்லை.

நாடு கடந்த அரசின் ஊடகத்துறை அமைச்சின் அறிக்கை !

உலகப் பரப்பெங்கும் வாழும் தமிழர்களிடையே பலமிக்கதொரு தொடர்பாடலையும், ஒன்றிணைவையும் மேற்கொள்கின்ற தமிழ் இணைய ஊடகங்கள் மீது சைபர் தாக்குதல்கள் இடம்பெற்றுவருகின்றன. லங்காசிறி - தமிழ்வின் - பொங்குதமிழ் - அதிர்வு - உட்பட பல தமிழ் இணையங்கள் மீது சைபர் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது.



சில இணையத்தளங்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு திட்டமிட்டு குருர – கபட நோக்கத்துடன் அந்த அறிக்கை தயார்செய்யப்பட்டுள்ளது.

ஊடகங்களை பிரித்தாளும் தந்திரங்கள், ஊடகங்களை உடைக்கும் முயற்சிகள் எல்லாம் எமக்கு புரிகிறது.

நாடு கடந்த அரசின் நோக்கமே தமிழர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிதானே என்று தமிழகத்தைசோந்த மூத்த சிநதனையானர் ஒருவர் சுட்டிக்காட்டியதும் இது ஆட்காட்டி அரசியல் என்றும் கூறியது இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. மாதக்கணக்காக ஈழம்ஈநியூஸ் மீது சைபர் தாக்குதல்தான் நடந்ததென்பதை உறுதிசெய்யமுடியவில்லை என்று “கதை” கூறும் நாடு கடந்த அமைச்சர்கள் சில இணையத்தளங்கள் தாக்கப்பட்டு ஒரு சில மணிநேரங்களிலேயே அறிக்கை வெளியிட்ட வேகத்தை மட்டும் எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.

சிங்கள நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இயங்கும் சிங்கள பெயரிலேயே தமது ஊடகத்தை வைத்திருக்கும் இணையத்தளங்களிற்கு ஆதரவாகக் கண்டனம் வெளியிடும் நாடுகடந்த அரசு தமிழ்த்தேசியத்தை மூச்சாக்கி இயங்கிக்கொண்டிருக்கும் ஊடகங்களை முடக்க எத்தனிப்பதை இணைய ஊடக அடக்கு முறைக்கு எதிரான இன்றைய நாளில் பகிரங்கமாகப் பதிவு செய்கிறோம். ஈழம்ஈநியூஸ் தனித்து நின்றேனும் இந்த அடக்குமுறைக்கு எதிராகப் போராடும். இணைய ஊடக அடக்குமுறைக்கு எதிரான இன்றயை நாளில் இதனை சுட்டிக்காட்டி முன்னரிலும் விட வேகமாகவும் தீவிரத்துடனும் தனது பயணத்தை தொடர்கிறது

ஈழம்ஈநியூஸ்.
நன்றி
ஆசிரியர் குழு

இன்று கொண்டாடப்படும் சைபர் தாக்குதலுக்கு எதிரான உலக நாள் குறித்து எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இணையத்தளங்களின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பது தற்போதைய காலகட்டத்தில் முக்கியமானது. புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இணையத்தளங்கள் அதிக சுதந்திரத்துடன் செயற்பட முடியும்.

பாரம்பரிய ஊடகங்களை நாடுகள் தமது அழுத்தங்களின் கீழ் கொண்டுவர முடியும். ஆனால் இணையத்தளங்கள் அவ்வாறானவை அல்ல. அழுத்தங்களை மீறி தகவல்களை வெளிக்கொண்டுவரும் சக்தி இணையத்தளங்களுக்கு உள்ளது.

மாற்றுக்கருத்துக்களுக்கான வெளியை அவர்கள் இலகுவில் ஏற்படுத்திக்கொடுள்ள முடியும். ஆனால் பல நாடுகள் இணையத்தளங்களை தாக்கியழிக்கவும், அவற்றை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முற்பட்டுவருகின்றன.

சில நாடுகளில் இணையத்தள செய்திகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. சில நாடுகள் இணையத்தளங்களையே தடுத்த வருகின்றன. அதற்கான சட்டங்களையும் அவர்கள் உருவாக்கி வருகின்றனர்.

இணையத்தளங்களில் தமது கருத்துக்களை சுயமாக வெளியிட்ட 117 பேர் உலக நாடுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் சீனா மற்றும் வியட்னாமில் தான இது அதிகம்.

சைபர் தாக்குதலுக்கு எதிரான உலக தினமான இன்று அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். இணையத்தளங்களின் சுயாதீனத் தன்மையை தடுப்பவர்களை நாம் “இணையத்தளங்களின் எதிரிகள்” என தெரிவித்துள்கொள்கிறோம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எமது ஈழம் ஈ நியூஸ் இணையத்தளமும், சிறீலங்கா அரசும், அதனுடன் இணைந்து பணிபுரியும் வெளிநாட்டு சக்திகளினாலும் தாக்கியழிக்கப்பட்டதையும் நாம் இங்கு நினைவுகூருகின்றோம்.

செய்தித் தொகுப்பு: ஈழம் ஈ நியூஸ்.

Comments