அமெரிக்க செனற் சபை தீர்மானம்: சிறிலங்காவிற்கான ஐ.நாவின் போர்க் குற்ற வல்லுநர்கள் குழுவினை ஆதரிக்கும்
சிறிலங்காவினது போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான விசாரணையினை மேற்கொள்ளும் வகையில் அனைத்துலக சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து சுதந்திரமாகச் செயற்படுமோர் விசாரணைக் கட்டமைப்பினை உருவாக்கவேண்டுமென்பதை வலியுறுத்தி ஐக்கிய அமெரிக்காவின் செனற் சபை தீர்மானமொன்றை நிறைவேற்றியிருக்கிறது.
செனற்சபை உறுப்பினரான றொபேட் கசே [Senator Robert Casey] அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இந்தத் தீர்மானம் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. செனற் சபையில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானம் கீழ்கண்டவாறு அமைகிறது:
மே 19 2010 அன்றுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான 26 ஆண்டுகாலப் போர் முடிவுக்கு வந்து ஆண்டொன்று கடந்துவிட்ட அதேநேரம்,
பெப்ரவரி 2002 தொடக்கம் மே 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற ஏதேனும் சம்பவங்களுக்கு தனிநபரோ அன்றி குழுவோ அன்றி ஏதாவது நிறுவனமோ நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ பொறுப்பாக இருந்திருக்கிறதா என்பதைக் கண்டறிந்து அறிக்கையிடுவதற்கும்,
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் தவிர்ப்பதோடு நாட்டினது அனைத்து இனங்கள் மத்தியில் தேசிய ஒருமைப்பாட்டினையும் இன நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்தும் வகையிலான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் சிறிலங்கா அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற ஒன்றினை அமைத்திருக்கும் அதேநேரம்,
இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புச் சொல்லும் செயற்பாட்டினை முன்னெடுப்பேன் என்ற அதனது உறுதிப்பாட்டினைச் சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பன் கீ மூன் அவர்கள் இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மாசுகி டருஸ்மன், தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் இனநல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் ஒருவரான யஸ்மின் சூகா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் அனைத்துலக சட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் சட்டங்கள் தொடர்பான சட்ட வல்லுநராக ஸ்ரீவன் ரட்ணர் ஆகிய மூவரையும் உள்ளடக்கிய வல்லுநர்கள் குழுவொன்றினை அமைத்திருக்கும் அதேநேரம்,
சிறிலங்காவிலுள்ள அனைத்து இனக் குழுமங்களினதும் தேவைகளைப் போக்கும் வகையில் செயற்படுவேன் என உறுதியளித்திருப்பதோடு நாட்டில் அமைதியான மற்றும் நீதியானதொரு சமூகத்தின் உருவாக்கத்திற்காக ஓர் அரசியல் தீர்வு முன்வைக்கப்படுவதோடு நல்லிணக்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுவது அவசியமானது என்பதையும் சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கும் அதேநேரம்,
போரின்போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான உள்நாட்டு மற்றும் அனைத்துலக விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படுவதோடு இன நல்லிணக்க முனைப்புக்களும் முறையாக முன்னெடுக்கப்படுவதுதான் ஐக்கிய அமெரிக்கா சிறிலங்காவில் தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வழிசெய்யும்.
ஆதலினால் ஐக்கிய அமெரிக்காவினது செனற் சபையானது கீழ்க்காணும் தீர்மானங்களை எடுக்கிறது.
01. சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புச்சொல்லும் நடைமுறையினைக் கைக்கொள்ளுவேன் என்ற அதனது உறுதிப்பாட்டினைச் சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையினது செயலாளர் நாயகம் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக மூவர் அடங்கிய வல்லுநர்கள் குழுவினை அமைத்ததை செனற்சபை வரவேற்கும் அதேநேரம்,
02. சிறிலங்காவில் இடம்பெற்ற போரின்போது இரண்டு தரப்பினராலும் புரியப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைச் சுதந்திரமாகவும் பக்கச்சார்பின்றியும் விசாரிக்கும் வகையில் அனைத்துலகக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்திடமும் அனைத்துலக சமூகத்திடமும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் அழைப்பு விடுக்கும் அதேநேரம்,
03. மனிதாபிமான அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் என்பன இடம்பெயர்ந்தோர் முகாம்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் சுதந்திரமாகச் சென்று வருவதற்கு அனுமதிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தினைக் கோரும் அதேநேரம்,
04. மனித உரிமைகளை மதித்துச் செயற்படுதல், சனநாயகம், சட்டம் ஒழுங்கு, பொருளாதார நலன்கள் மற்றும் பாதுகாப்புசார் நலன்கள் உள்ளிட்ட விடயங்களில் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு எதுவோ அதனைப் பிரதிபலிக்கும் வகையிலான முழுமையான கொள்கையொன்று வகுக்குமாறு சிறிலங்காவினது அதிபரிடம் இத்தால் அழைப்பு விடுக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

Comments