“தேசிய ஊடகங்கள் மீதான தாக்குதலில் நாடுகடந்த அரசின் உருத்திரகுமாரன் அணி?”- EelamEnews

நாடு கடந்த தமிழீ அரசின் அமைச்சர்களினால் பிரான்சிலிலும் கனடாவிலும் இருந்து நாடு கடந்த அரசின் சின்னத்துடன் நடாத்தப்படும் உடக விபச்சார இணையத்தளங்கள் தமிழ் தேசிய ஊடகங்கள் மற்றும் தமிழ் தேசிய செயல்பாட்டாளர்கள் மீது போலிப்பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருவதை தடுக்க முடியாமல் நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் இருக்கும் நிலையில் கடந்த மாதம் 6ம் நாள் EelamEnews இணையத்தளம் மீது நாத்தப்பட்ட தாக்குதல் நாடு கடந்த அரசின் உறுப்பினரகளால் மேற்கொள்ளபட்டதாக சந்தேகித்து EelamEnews அறிக்கை வெளியிட்டுள்ளது.

டென்மார்க்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பரதிநிதிகள் எவரும் இல்லை என நாடு கடந்த தமிழீழ அரசின் உள்ளக அமைச்சர் பாலச்சந்திரன் தெரிவித்தமையை ஆதாரத்துடன் நாடுகடந்த அரசின் விசாரனைக்குழுவிடம் கையளித்த போதும் நடைவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை சனநாயக விரோதபோக்கில் செல்வதால் இன்று 38 மக்கள் பிரதிநிதிகள் சனநாயக அணி ஒன்றை உருவாக்கியுள்ளனர். மக்கள் பிரதிநிதிகளை நீதியற்ற முறையில் நடாத்திய நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை இப்பொழுது மக்களையும் ஊடகங்களையும் தாக்கும் முயர்சியிலும் இறங்கியுள்ளமை கண்டிக்கப்படவேண்டியது.

EelamEnews இணையத்தளத்தின் அறிக்கை

தேசிய ஊடகங்கள் மீதான தாக்குதலில் நாடுகடந்த அரசின் உருத்திரகுமாரன் அணி?

கடந்த மாதம் 6ம் நாள் ஈழம் ஈ நியூஸ் இணையத்தளம் சிறீலங்கா புலனாய்வாளர்களின் கைக்கூலிகளினால் தாக்கப்பட்டதும் அதன் பணியாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல்விடப்பட்டதும் எல்லோரும் அறிந்ததே..

பிரித்தானிய காவல்துறையில் சட்ட நடவடிக்கைகளுக்காக முறைப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் IFJ, RSF உட்பட சர்வதேச ஊடக அமைப்புக்களின் கவனத்திற்கும் இது கொண்டுவரப்பட்டது.

புலம்பெயர்தமிழ் மற்றும் சிங்கள ஊடக - மனித உரிமை அமைப்புக்களின் கவனத்திற்கும் இது கொண்டுவரப்பட்டது. இதை அடுத்து பெரும் முக்கியத்துவம் கொடுத்து புலம்பெயர் தமிழ்ஊடகங்கள் மட்டுமல்ல சிறீலங்கா சிங்கள, ஆங்கில ஊடகங்களும் மக்களின் கவனத்திற்கு கொண்டுசேர்த்ததுடன் தமது கண்டனத்தையும் பதிவு செய்தன. தனிப்பட்ட முறையில் எம்மோடு தொடர்புகொண்டு தமது கவலையையும் பகிர்ந்து கொண்டன. அந்த பட்டியல் நீளமானது. எனவே எல்லோருக்கும் சேர்த்து எமது நன்றியை இந்த இடத்தில் பதிவு செய்கிறோம்.

ஈழம் ஈ நியூஸ் ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறித்த பல இடங்களில் பதிவு செய்தாயிற்று. அடக்குமுறையாளர்களும் வன்முறையாளர்களும் மீண்டும் மீண்டும் எம்மை அது குறித்து கூறுமாறு தூண்டிக்கொண்டே இருக்கிறார்கள். நாமும் சலிக்காமல் எழுதிக்கொண்டே இருக்கிறோம். மே 18 இன் பிற்பாடு தமிழீழ விடுதலைப்போராட்டம் ஒரு பெரும் தேக்கத்தை சந்தித்தது. விளைவாக தமிழ்த் தேசிய ஊடகங்களும் அந்த தேக்கத்தை சந்தித்தன.

இவற்றுள் திடீர் “ஞானதோயம்” பெற்றவர்களாக ஒரு தொகுதியினர் புலிகள் மீது - அதாவது புலிகளின் பிணங்கள் மீது பெரும் தாக்குதலை தொடுத்தனர். அதுவரை புலிகளின் ஊடகவியலாளர்களாக, ஆய்வாளர்களாக பிளந்துகட்டியவர்கள் முள்ளிவாய்க்காலில் விழுந்த புலிகளினதும் மக்களினதும் பிணங்களை ஊடறுத்தார்கள்.

மே 18 இற்கு பிறகான – அதாவது புலிகளுக்கு பின்னான மாற்று அரசியலை கட்டமைக்கிறார்களாம். என்று தமக்கு தாமே கூறிக்கொண்டு பிணந்தின்னி அரசியலை ஊடகங்கள்வழி கட்டமைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.. பிறிதொரு தொகுதியினர் விழுந்த பிணங்கள் உயிர்தெழும் என்று ஒரு “டுபாக்கூர்” அரசியலை ஊடகங்களில் கட்டமைக்க தலைப்பட்டார்கள்.

இந்த இரு அபத்தங்களுக்கும் மாற்றாக வெகுசன உளவியலை கவனமாக உள்வாங்கி எதிர்ப்பு அரசியல் வடிவத்தை முன்வைக்கக்கூடிய ஒரு ஊடகம் இல்லையே என்ற ஆதங்கத்தில் அவசரமாகவும் அவசியமாகவும் காலத்தின் அதிதேவையை உணாந்து உருவாக்கப்பட்டதுதான் ஈழம்ஈநியூஸ்.

போரின் முடிவின் காரணமாக மேலெழ இருக்கும் அவல, அடிபணிவு, ஒப்படைவு, சரணாகதி அரசியலை முற்றாக புறந்தள்ளி பூகோள – பிராந்திய அரசியலை கவனமாக உள்வாங்கி தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் சாத்தியமான எதிர்ப்பு அரசியல் வடிவம் குறித்த உரையாடலை தொடாந்து பேணுவது என்று ஆரம்பத்திலேயே முடிவெடுத்தோம். எந்த கட்டத்திலும் நாம் இந்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்குவதில்லை என்ற முடிவில் நாம் தெளிவாக இருந்தோம் – இருக்கிறோம்- இருப்போம்.

இதனால்தான் தமிழத்தேசிய கூட்டமைப்பினர் தொடக்கம் கே.பத்மனாதன் வரை விமர்சனம் செய்கிறோம். மே 18 இற்கு முன்பு புலிகள் உயிருடன் இருக்கும்வரை வைக்காத விமர்சனங்களை மே18இன் பிற்பாடு புலிகளின் பிணங்களை கூட்டி அள்ளி குவித்து வைத்து விமர்சனம் செய்யும் திடீர் “ஞானோதய” ஊடகங்களையும் கடுமையாக விமர்சிக்கிறோம்.

இவர்கள் எல்லோருமே போருக்கு பின்னான சிங்கள நிகழச்சிநிரலை தெளிவாக வழி நடத்திகொண்டிருக்கிறார்கள். தெரிந்து செய்பவர்கள் பாதி தெரியாமல் செய்பவர்கள் மீதி. இதை நாம் என்றைக்கும் அனுமதிக்க மாட்டோம். எனவே சிங்கள புலனாய்வாளர்களின் இலக்காக ஈழம்நியூஸ் தெரிவு செய்யப்பட்டது. தாக்கப்பட்டது. இதுதான் ஈழம்ஈநியூஸ் தாக்கப்பட்டதன் பின்புல வரலாறு.

சிறீலங்கா புலனாய்வுத்துறை என்பது முன்பு முற்றுமுழுதாக சிங்களவர்களையே கொண்டிருந்தது. அரிதாக இஸ்லாமிய சகோதரர்களும் தமிழர்களும் உள்வாங்கப்பட்டார்கள். ஆனால் துரதிஸ்டவசமாக மே 18 இன் பிற்பாடு அந்த கட்டமைப்பு தமிழர்களால் நிரம்பி வழிகிறது. ஈழம் ஈ நியூஸ் மீதான தாக்குதலை மட்டுமல்ல புலத்தில் நடைபெறும் பல அசாதரண நிகழ்வுகளின் பின்னணியில் இவர்களே இருக்கிறார்கள். நாம் மற்றவர்களைப் போல் ஓடிஒழியப்போவதில்லை. தாக்குதல் சூத்திரதாரிகளை வெகு விரைவில் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வருவோம். ஏறகனவே கிட்டத்தட்ட அவர்களை நெருங்கிவிட்டோம்.

ஆனால் பல முரண்பாடுகள் இருந்தபோதிலும் எதிர்ப்பு அரசியலை ஏதோ ஒரு வகையில் அடையாளப்படுத்துகிறது என்ற ஒரே ஒரு அடிப்படையின் நிமித்தம் நாம் இன்று வரை ஆதரவு கொடுத்து வரும் ஒரு அமைப்பான நாடு கடந்த தமிழீழ அரசு தாக்குதல்தாரிகளுக்கு ஒரு பாதுகாப்பை – கவசத்தை கொடுக்கிறதோ என்ற ஐயம் எமக்கு எழுகிறது.

எம்மீதான தாக்குதல் நடைபெற்றதும் எமது மின்னஞ்சல் முகவரிகளும் கையப்படுத்தப்பட்டிருந்தன. எனவே எம்மோடு நெருங்கிய தொடர்பில் உள்ள ஒரு ஆய்வாளரினூடக காவல்துறையினரிற்கான முறைப்பாட்டை அடுத்து நாம் முதன் முதலில் இந்த தாக்குதல் சம்பவத்தை திரு உருத்திரகுமாரனின் நேரடிக் கவனத்திற்குதான் கொண்டு சென்றோம். அதன் பிற்பாடே வேறு பல அமைப்புக்களிற்கும் ஊடகங்களிற்கும் தெரியப்படுத்தினோம்.

ஒரு முக்கியமான அமைப்பு என்ற அடிப்படையில் இந்த தாக்குதலுக்கு ஒரு கண்டனத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று அந்த ஆய்வாளரினூடாகவே எமது அடுத்த கடிதத்தில் கேட்டிருந்தோம். எமது ஊடக அறிக்கை வெளியானவுடன் ஊடக அமைச்சினூடாக தமது கண்டனத்தை வெளியிட முயற்சிப்பதாக திரு ஊருத்திரகுமாரன் பதில் அனுப்பியிருந்தார். ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசு எந்த கண்டனத்தையும் இதுவரை வெளியிடவில்லை.

நாம் கேட்காமலேயே தமிழர் மனித உரிமைகள் மையம், உலகத்தமிழர் பேரவை, சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் என்று பல அமைப்புக்கள் தமது கண்டனத்தை பதிவு செய்திருந்தன. எமது இணையம் இன்னும் முழுமையாக தனது சேவையை தொடங்காதபடியால் பல அமைப்புக்களின் அறிக்கைகள் வெளியிடப்படாமலேயே உள்ளன. வெகு விரைவில் அவற்றை பதிவேற்றுவோம்.

நாடு கடந்த அரசு எமது ஊடகத்தின் மீதான தாக்குதலை கண்டிப்பதில்லை என்று முடிவெடுத்ததற்கு தம்மளவில் சில நியாhயங்களை வைத்திருக்கலாம். இது அவர்களது நிலைப்பாடு. எமக்கும் இனி நாடுகடந்த அரசு தொடர்பாக எடுப்பதற்கு வேறு நிலைப்பாடுகள் இருக்கும். அது வேறு கதை. பிரச்சினை அதுவல்ல. ஆனால் அதை எமக்கு எழுத்து மூலம் தெரியப்படுதத்தியிருக்க வேண்டும.

மாறாக கடந்த 6 ம் திகதி சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் நாடுகடந்த அரசு தொடர்பாக நடத்திய ஒரு ஊடக கலந்துரையாடலில் ஈழம் ஈ நியூஸ் மீதான தாக்குதலை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு “அமைச்சர்” யாரோ ஒரு மூத்த ஊடகவியலாளரை பற்றி அவதூறு பரப்பியதால் அவரும் அவர் சார்ந்த ஊடகமும் வழக்கு பதிவு செய்தே ஈழம் ஈ நியூஸ் நிறுத்தப்பட்டதாக ஒரு “கதையை” கூறியுள்ளார்.

பொறுப்பான பதவியில் இருக்கிறோம் என்ற எதுவித பிரக்ஞையுமில்லாமல் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார். எம்மீது யாரும் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுவதும் வழக்கு பதிவு செய்யும் வகைக்குள்தான் வருகின்றதா என்பதை ஒரு சட்டவாளராக திரு உருத்திரகுமாரன்தான் எமக்கு விளக்க வேண்டும். அப்பாவிகளான எங்களுக்கு தெரியவில்லை. இணையத்தை கையகப்படுத்தி ஏறத்தாழ 12 மணித்தியாலங்களாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து எமக்கு உதவிபுரிந்த ஆய்வாளர்களை. அவர்களது குடும்பத்தினரைப்பற்றி அவதூறுகளை கொலை அச்சுறுத்தலை இணையத்தில் வெளியிட்டதும் அந்த பெயர் தெரியாத “மூத்த” ஊடகவியலாளரின் “சட்ட” நடவடிககைகளுக்குள்தான் வருகிறதா? தயவு செய்து கொஞ்சம் விளக்கினால் நாமும் தெரிந்து கொள்ளலாம்.

இனி நாம் விடயத்தை பேசுவோம். மேற்படி அமைச்சர் அவர் குறிப்பிடுவது உண்மையாக இருந்தால், அந்த மூத்த ஊடகவியலாளரின் விபரங்களை எமக்கு தரவேண்டும். அத்தோடு அவர் எம்மீது தொடுத்த வழக்கின் பிரதிகளை பெற்று தரவேண்டும். வழக்கின் பிரதிகளை பார்க்காமல் பேச்சுவழியான ஒரு புனைவை நம்பி ஒரு பொது வெளியில் அதை முன்வைப்பதற்கு எமது மக்கள் அவரை வாக்களித்து அமைச்சராகத் தேர்ந்தெடுக்கவில்லை. அவர் வழக்கின் பிரதிகளை எமக்கு தராத பட்சத்தில் பொது வெளியில் எமது ஊடகம் குறித்து ஒரு தவறான கருத்தை விதைத்தற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

அத்தோடு நாம் மேற்குறிப்பிட்டது போன்று சிங்கள புலனாய்வுத்துறையின் வலைக்குள் விழுந்து எமது ஊடகங்களை தாக்கும் நபர்களாக சில தமிழ் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களே இருக்கிறார்கள். எனவே ஈழம் ஈ நியூஸ் தாக்குதல் தொடர்பான “சீனுக்குள்” வந்திருக்கிற “மூத்த” ஊடகவியலாளரை பற்றிய முழுத்தகவல்களும் எமக்கு தரப்பட வேண்டும்.

ஈழம் ஈ நியூஸ் தொடர்பாக தனிப்பட்ட முறையில் 3 வழக்குகள் பிரித்தானிய காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த “மூத்த” ஊடகவியலாளரை காவல்துறையின் “கஸ்டடிக்குள்” கொண்டுவரும்போது புலத்தில் நடைபெறும் அனைத்து அசம்பாவிதங்களும் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்.

நாடு கடந்த அரசு தாம் ஒரு குறிப்பிட்ட சாராருக்கான அமைப்பு என்பதை வலியுறுத்துவதைப் போலவே நடந்து கொள்வது துரதிஸ்டவசமானது. ஈழம் ஈ நியூஸ் தாக்கப்பட்டு அவலத்தில் நின்ற போது அதற்கு கண்டன அறிக்கை விடப்படும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்க அதன் ஊடக அமைச்சர் ஒரு திருட்டு இணையத்தளத்திற்கு 6 ம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதற்கு வாழத்து செய்தி அனுப்புகிறார். இது எவ்வளவு அயோக்கியத்தனமானது. தமிழ் பண்பாட்டிற்கே விரோதமானதல்லவா இது.

இன்று தமிழ்த்தேசியத்தை வரித்துகொண்ட எத்தனை ஊடகங்கள் இருக்கின்றன. ஏன் அவற்றுக்கு வாழ்த்து செய்தி கொடுக்கவில்லை. பிரித்தாளும் தந்திரங்கள், ஊடகங்களை உடைக்கும் முயற்சி எல்லாம் எமக்கு புரிகிறது. எல்லாவற்றிற்கும் எதிராக ஈழம ஈ நியூஸ் தனித்து நின்றேனும் தொடர்ந்து போராடும். கழுத்திலே நஞ்சையும் மார்பிலே குண்டையும் சுமந்த அந்த சந்தன திருமேனிகளைத் தவிர மிகுதி எல்லோரும் எமது பேனாவிற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

எமக்கான கண்டனத்தை வெளியிடாமை, எம் மீதான தாக்குதல் தொடர்பான பொய் செய்திகளை பரப்பியமை எல்லாவற்றையும் நோக்கும் போது நாடு கடந்த அரசின் உறுப்பினர்களுக்கு இத்தாக்குதலின் பின்னணியில் ஏதோ தொடர்பிருப்பதாக எண்ண இடம்வைக்கிறது.

நாம் கேட்ட ஆவணங்களையும் அன்று குறிப்பிட்ட அமைச்சர் பேசியதற்கான விளக்கத்தையும், அந்த “மூத்த” ஊடகவியலாளரின் விபரத்தையும் நாடு கடந்த அரசு தராத பட்சத்தில் எமது தாக்குதலின் சூத்திரதாரிகளாக நாடு கடந்த அரசின் அமைச்சர்களை பிரித்தானிய காவல்துறையில் அடையாளம் காட்ட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.

Verry sorry Mr uruthirakumaran..

நன்றி: ஈழம் ஈ நியூஸ்

Comments