ஏழு வயது சிறுமி மீது தென்னிலங்கைவாசி பாலியல் பாலாத்காரம்! இம் மாதம் மட்டும் யாழில் 15 சம்பவங்கள் பதிவு!!

ஏழு வயது சிறுமி ஒருவர் தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவரால் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இச்சிறுமி மேலதிகச் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் சேர்த்து யாழ். மாவட்டத்தில் இம்மாதம் மட்டும் 15 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சிறுவர் பாதுகாப்புக்குழு தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக வடக்கில் பாலியல் வன்புனர்வுச் சம்பவங்கள், கொலைகள், தற்கொலைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் என பல்வேறு சமூகவிரோத சம்பவங்கள் அதிகரித்த வண்ணமேயுள்ளன.

இன்றும் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம் பெறுவதற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்து இச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது கட்டாய கடமையாகும்.

Comments