" சிறி லங்கா கௌரவிக்க பட வேண்டிய நாடா ?" ஏப்ரல் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை " சிறி லங்காவை புறக்கணிக்கும்" போராட்டம்.
பாரிஸிலிருந்து 260 கிலோ மீட்டர் தூரத்தில் அமைத்துள்ள இந்த 25000 மக்கள் வாழும் ஊருக்கு செல்லும் போது நாம் எமக்கு தெரியாத ஊர் ஒன்றுக்கு செல்லபோகிறோம், அங்கே சிறி லங்காவை அழைத்து நிகழ்வு நடத்த முடிவு எடுத்து இருக்கிறார்கள், அதுவும் அங்கே நடக்கும் நிகழ்வு அந்த ஊரில் 87 வருடமாக , அந்த ஊரின் சரித்திரத்தில், பாரம்பரியத்தில் ஒன்று பட்ட நிகழ்வு, அங்கே எமக்கு என்ன மாதிரியான வரவேற்ப்பு கிடைக்க போகிறது, என்ற சிந்தனையுடன் 35 பேர் அடங்கிய குழு அர்ஜெண்டன் நகருக்கு சென்றது.
இரண்டாம் உலக போரில் ஜெர்மனிக்கு எதிரான போரில் ஆயுதம் ஏந்தி போராடிய போராட்ட குழுக்கள் நிறைந்த ஊராகவும் அவர்களின் தியாகங்களுக்கான நினைவு சின்னம் நிறைத்த ஊரில் எமது வருகையை கண்டு முதல் வித்தியாசமான பார்வையுடன் பார்த்தாலும், நாம் அந்த ஊருக்கு வந்த காரணத்தை அறிந்ததும், நாங்கள் கூறியவற்றை ஆர்வத்துடன் கேட்டார்கள்.
தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமைகளை மிகவும் அதிகமாக அறிந்து வைத்திருக்கும் அந்த மக்கள், தங்கள் ஊரில் நாடாக்கும் நிகழ்வுக்கு சிறி லங்கா அழைகப்பட்டதில், அதற்குரிய காரணத்தை தாமும் அறிய முடியாது இருப்பதாகவும், இது மேல் மட்டத்தில் எடுக்கப்பட்ட அரசியல் முடிவென்றும் கூறியவர்கள் எமது செயல் திட்டத்தை வரவேற்றார்கள்.
சிறி லங்கா போன்ற நாடுகள் தமது குற்றங்களுக்கு முதல் பதில் சொல்லி ஆக வேண்டும் என்றும் தாம் இழைத்த அநீதிகளை ஏற்று கொள்வதே இரண்டு இன மக்களும் ஒன்றாக வாழ வழிவகுக்கும், அந்த அடிப்படையிலேயே இரண்டாம் உலக போருக்கு பின் ஜெர்மனி, பிரான்ஸ் மக்கள் ஒன்றாக வாழ கூடியதாக இருந்ததாகவும் கூறினார்கள்.
அப்படி இருக்க தக்கதாக சிறி லங்காவில் நடப்பது மனித நேயமே ஏற்று கொள்ளமுடியாது என்றும் எமது செயல் திட்டங்களை துரிதப்படுத்தும் படியும் கேட்டு கொண்டார்கள்.
இந்த செயல் திட்டங்களுக்கு அமைய வரும் ஏப்ரல் 17ஆம் திகதி மீண்டும் அந்த நகருக்கு மக்களை சந்திக்க செல்ல இருக்கிறோம். இந்த செயல்பாட்டை தமிழ் மக்கள் அனைவரும் அவர் செய்வார், இவர் செய்வார் என்று பார்க்காமல், எல்லா தமிழ் மக்களும் செய்யும் செயல் திட்டமாக மாறவேண்டும்.
உலக மக்கள் எங்களுக்கு பின்னால் நிற்கிறார்கள், அவர்களை எமக்கு பின்னல் அழைத்து செல்லவேண்டியது எல்லா தமிழ் மக்கள், இளைய சமுதாயத்தினரின் கடமை.
ஏப்ரல் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை " சிறி லங்காவை புறக்கணிக்கும்" போராட்டம் அந்த நகரில் நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் தமிழீழ மக்கள் பேரவையினரால் ஒழுங்கு செயப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பல்லாயிரம் தமிழ் மக்கள் அந்த நகரத்தில் கூடி தமது எதிர்ப்பையும், இனிமேல் இப்படியான நிகழ்வு பிரான்சில் நடக்க கூடாது என்றும் சிறி லங்கா அரசுக்கு எடுத்தும் அடித்தும் சொல்லும் விதமாக சொல்ல வேண்டியது எமது கடமை.
அழிவு என்பது தமிழருக்கு இன்று நேற்று வந்தது அல்ல, 1948 முதல் பல அழிவுகளுக்கு இடையே எழுந்து நின்றவர்கள் தமிழர்கள், இதை நாம் புரிந்து கொண்டு, "விடுதலை போராட்டம் என்பது மக்கள் போராட்டம். பரந்துபட்ட வெகுசனங்கள் ஒன்று திரண்டு, ஒரு ஐக்கிய தேசமாக எழுச்சி கொண்டு போராட்டத்தில் பங்களித்தால்தான் எமக்கு வெற்றி நிச்சயம்" : தலைவர் பிரபாகரன்
ஏப்ரல் 29 ஆம் அர்ஜெண்டன் நகர் நோக்கி செல்வதற்கு வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. முன்கூடியே உங்கள் பெயர் பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையுடன் தொடர்பு பதிவு செய்து கொள்ளுங்கள்.
நாம் சிறி லங்காவை புறக்கணிக்கும் போராட்டம், சிறி லங்காவில் உற்பத்தியாகும், சிறி லங்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு எதிரான போராட்டம், சிறி லங்காவை உலக மயத்திலிருந்து அப்புறபடுத்தும் போராட்டம் எமது விடுதலை பயணத்தில் முக்கியமான கால கட்டங்கள்.
மேலும் தொடர்புகளுக்கு தமிழீழ மக்கள் பேரவையினருடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
-தமிழிழ மக்கள் பேரவை பிரான்சு
தொடர்புகளுக்கு: 06 58 58 92 90
Comments