ஷேர்பினி படுகொலை போலவே ஈழத்தமிழர் மீதும் நிகழ்ந்த படுகொலை சனல் 4 காணொளிகள்

A young Tamil boy stands behind a barbed-wire fence in the Menikfam Vanni refugee camp located near the town of Chettekulam in northern Sri Lanka (Reuters)
ஷேர்பினிகாவில் நிகழ்ந்த படுகொலைகள் போன்றே இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது நடாத்தப்பட்டது என ஐ.நா. சபையின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் சனல் 4 தொலைக்காட்சிக்கு இன்று தெரிவித்துள்ளார்.இன்றைய செய்தி நேரத்தில் கோடன் வைஸ் தெரிவித்துள்ள முக்கிய கருத்துக்கள் என்னவெனில்,




பொஸ்னிய தேசத்தில் ஷேர்பினிக இனத்தவர்கள் எவ்வாறு வகைதொகையின்றிக் கொல்லப்பட்டார்களோ அதே போல இலங்கையிலும் பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் வகைதொகையின்றிக் கொல்லப்பட்டார்கள்.

அந்தப் பகுதிகளில் இடம்பெற்ற கொலைகளை யாரும் பார்க்கக் கூடாது என்று இலங்கை அரசு முன்னரே திட்டமிட்டிருந்தது.

சனல் 4 செய்தியாளரால் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வியொன்றுக்குப் பதிலளித்த கோடன் வைஸ்,

லிபிய விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்ட ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் போர் இடம்பெற்ற வேளை பாராமுகமாக இருந்தது ஏன்?
இந்தியாவும் சீனாவும் ஒன்று சேர்ந்தே இலங்கையைக் காப்பாற்றியது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இறந்தமைக்கு இந்த இரண்டு நாடுகளுமே பதில் கூற வேண்டும்.

மேலும் மஹிந்த ராஜபக்ஸ ஒரு போர்க்குற்றவாளி என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஐ.நாவின் முன்னாள் பேச்சாளரான கோடன் வைஸ்.

Comments