63 தொகுதியிலும் காங்.கை வீழ்த்தி வரலாறு படைப்போம்-சீமான்

63 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி வரலாற்றில் அதைப் பதிய வைக்கும் மிகப் பெரிய வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்துள்ளது என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

வேலூரில் நடந்த பிரமாண்டமான நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில்,

காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியை தோற்கடிக்கும் லட்சிய உணர்வில் போராடி வருகிறோம். இது எங்கள் மரபணுவில் உள்ள கோபம்.

ஊழலை ஒழிக்க அண்ணா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரதத்திற்கு கிடைத்த ஆதரவு மூலம் இந்தியர்கள் ஊழலுக்கு எதிராக இருப்பதை காண முடிகிறது.

இதுவரை தேர்தல் தேதியை மட்டும் அறிவித்து விட்டு செல்வதுதான் தேர்தல் ஆணையத்தின் வேலையாக இருந்தது. ஆனால் இந்தமுறை தேர்தல் ஆணையம் பணத்தை கொடுக்க விடவில்லை. இப்போதுள்ள இதே நேர்மை, உண்மை மே13-ந் தேதி வரை தொடர வேண்டும்.

108 ஆம்புலன்ஸ், குப்பை லாரி, சேட்டு, மார்வாடி மூலம் பணம் கொடுக்கும் பணியை தொடங்கியுள்ளனர். அது உங்கள் பணம், அதை வாங்கி கொள்ளுங்கள், ஆனால் உங்களிடம் பணம் கொடுப்பவர்களின் கையை பிடித்து கேளுங்கள் இந்த பணம் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று.

63 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து வரலாற்றில் பதியவைக்கும் மிகப்பெரிய வாய்ப்பு உங் களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் இத்தேர்தலில் எழுதப்போகும் தீர்ப்பை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

உலகில் சின்னஞ்சிறு நாடுகள் கூட தடையில்லா மின்சாரத்தை அளிக்கும் போது தமிழ்நாட்டில் மின்சாரமின்றி இருளில் இருக்கும் நிலை உள்ளது. காங்கிரஸ் அரசின் சாதனையே நாட்டை ஊழலில் தலைசிறந்த நாடாக மாற்றியது தான் என்றார் சீமான்.

Comments

rajamelaiyur said…
இதை பார்த்த பின்பும் காங்கிரஸ்க்கு ஒட்டு போடுவிகளா ?
உண்மையான தமிழண்ணா இருந்தா , மனசாட்சி உள்ள மனிதனா இருந்தா இதை பார்த்துவிட்டு ஒட்டு போடுங்கள்

visit : http://rajamelaiyur.blogspot.com/2011/04/blog-post_6847.html
rajamelaiyur said…
காங்கிரஸ் ஒழிஞ்சாத்தான் தமிழன் வாழமுடியும்