பாலியல் வல்லுறவுகள், தொடர்கின்றன 7 மாதங்கள் எடுக்கப்பட்ட காணொளி.



இன்று மாலை 7.00 மணிக்கு சனல் 4, மற்றும் அல்ஜசீரா தொலைக்காட்சியில் இலங்கை போர்குற்றம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவுள்ளது. ஐ.நா நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக இது அமையவுள்ளதாக அறிகிறது. ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிராக சிங்களம் சுமார் 10 லட்சம் கையெழுத்துக்களை திரட்ட ஆரம்பித்துள்ளது.

ஆனால் தமிழ் மக்கள் இன்னும் விழிப்படையாது அப்படியே உள்ளனர் என்பது வேதனைக்குரிய விடையமாக உள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி, மற்றும் அல்ஜசீரா போன்ற சர்வதேச தொலைக்காட்சிகள் தொடர்ந்தும் இலங்கை குறித்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருவதால், ஐ.நா வுக்கான அழுத்தங்கள் அதிகரித்துவருகிறது. இச் சந்தர்ப்பத்தை தமிழ் மக்களும் சரிவர கையாளவேண்டும். தமிழர்கள் ஐ.நா வுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர்களின் அலுவலகங்களை தமிழர்கள் முற்றுகையிடவேண்டும்.

லிபியாவுக்கு உடனடி நடவடிக்கை எடுத்ததுபோல, இலங்கைக்கும் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி மக்கள் வீதிக்கு இறங்கவேண்டும். அதற்கான காலமும் நேரமும் கூடியுள்ளது என்றே கூறவேண்டும். ஐ.நா அறிக்கை குறித்து அல்ஜசீரா தொலைக்காட்சி கோத்தபாய ராஜபட்க்ஷவிடம் கேட்டபோது, அவர் மிகவும் காட்டமாகப் பதிலளித்துள்ளார் இன்று ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சிகளில், இதுவும் வெளியாகவுள்ளது. சர்வதேச ஊடகங்கள் தமிழர் பக்க நியாயங்களைப் பற்றிப்பேச ஆரம்பித்துள்ள நிலையில் தமிழர்கள் மெளனாக இருப்பது பயன்தராது.

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நடைபெற்றவேளை தமிழர்கள் எவ்வாறு வீதிக்கு இறங்கிப் போராடினார்களோ, அவ்வாறானதொரு போராட்டம் உடனடியாக, உலகளாவியரீதியில் நடாத்தப்படவேண்டும். அதற்கான தரணமும் இதுவே ! இதனை விடுத்தால் தமிழர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது. ஐ.நாவின் பரிந்துரைகளை இலங்கை ஏற்கவேண்டும் இல்லையேல், அதனை ஏற்கவைக்க ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே தமிழர்களின் ஒருமித்த கோரிக்கையாக இருக்கவேண்டும்.

அதிர்வு

Comments