ஊடக அறிக்கை
ஈழமுரசுலீக்ஸ்
முள்ளிவாய்க்காலில் முடிவுரை எழுதவிளைந்தவர்கள் யார்..? பாரிய இன அழிப்பின் பின்னால் உள்ள மறுக்கவும் மறைக்கவும் முடியாத உண்மைகளை ஈழமுரசு தொடராக வெளிக்கொண்டுவரவுள்ளது.
வன்னி மக்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகப் பொய்யுரைத்து சிங்கள - இந்திய அரசுகளின் கூட்டுச்சதிக்கு உறுதுணை புரிந்த அரசியல்வாதிகள், பரப்புரையாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோரின் மறுமுகத்தை வெளிக்கொணர்வதே இத்தொடர் கட்டுரைகளின் நோக்காகும்.
நாளை வெள்ளிக்கிழமை பிரான்ஸ், பிரித்தானியா நாடுகளில் வெளிவரும் ஈழமுரசு இதழிலும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கனடாவிலும் வெளிவரும் புலத்தில் இதழிலும் ‘தந்திரிகளின் மறுமுகம்’ என்ற தலையங்கத்தில் இந்தத் தொடர் வெளிவருகின்றது என்பதை வாசகர்களுக்கும், அபிமானிகளுக்கும் அறியத்தருகின்றோம்.
இத்தொடர் தொடர்பாக உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம்.
ஊடக இல்லம்
ஈழமுரசு
பிரான்ஸ்
07.04.2011
Comments