அடேல் பாலசிங்கம் அவர்களின் தாயாரின் இறுதிவணக்க நிகழ்வு

தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார் அடேல் பாலசிங்கம் அவர்களின் தாயார் ‘பெற்றி புளோரன்ஸ் வில்பி’ Betty Florence Wilby அம்மையார் அவர்கள், ஏப்ரல் மாதம் 1ம் திகதி தனது சொந்த இடமான அவுஸ்திரேலியா விக்ரோரிய மானிலத்தின் வரகுலில்(Warragul) தனது 84 வயதில் சாவடைந்துள்ளார். அவருக்கு கண்ணீர் அஞ்சலிகளை செலுத்துவதாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை வருமாறு:

கண்ணீர் அஞ்சலி

“தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார் அடேல் பாலசிங்கம் அவர்களின் தாயார் ‘பெற்றி புளோரன்ஸ் வில்பி’ Betty Florence Wilby அம்மையார் அவர்கள், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தனது சொந்த இடமான அவுஸ்திரேலியா விக்ரோரிய மானிலத்தின் வரகுலில் சாவடைந்துள்ளார் என்பதனை வருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.

“வெள்ளைத் தமிழச்சி” என தமிழ் மக்களால் போற்றப்பட்ட அடேல் பாலசிங்கம் அவர்களின் அன்னையார், தமிழீழ மக்களின் வாழ்வியல் பற்றிய உரிமையில் அதிக கவனமும், தமிழர்களின் விடுதலைப்போராட்டம் பற்றிய ஆழத்தை அறியும் தேடலும் ஒருங்கே கொண்டவர்.

தமிழர்களால் முன்னெடுக்கப்படும் தேசியப் பணிகளில் ஆர்வத்துடன் இணைந்துகொள்ளும் இவர், மெல்பேணில் நடைபெறும் தமிழர் தேசியநிகழ்வுகளில் பங்குகொள்வதிலும் தவறியதில்லை.

பெற்றி அம்மையாரின் இழப்பால் துயருறும் அவரது பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் எமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சாவடைந்த அன்னையாரின் இறுதி நிகழ்வுகள், அவரது சொந்த இடமான Warragul எனும் இடத்திலுள்ள தேவாலயத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை 07 – 04 – 2011 அன்று நடைபெறவுள்ளது.

இறுதிவணக்க நிகழ்வு நடைபெறும் இடம்

Victoria Chapel

Cnr of Victoria & Albert Street

Warragul VIC 3820

இறுதிவணக்க நிகழ்வு நடைபெறும் நேரம் எதிர்வரும் 07 – 04 – 2011 வியாழக்கிழமை காலை 11 மணி

வணக்கமலர்கள் அனுப்பவேண்டிய முகவரி

20 Bowen Street,

Warragul VIC 3820

வணக்க மலர்களை தமிழ் அமைப்புக்கள் ரீதியாக மேற்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். இறுதிவணக்கநிகழ்வுக்குச் செல்லவிரும்புபவர்கள் வாகன வசதி தேவைப்படுமாயின் மெல்பேண் தமிழ்ச் செயற்பாட்டாளர்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா

Comments