அறிக்கையை வெளியிடக்கோரி பான் கீ மூனுக்கு கோரிக்கை விடுங்கள்: அனைத்துலக மன்னிப்புச்சபை

போரின் போது சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களையும், போர்க்குற்றங்களையும் தடுப்பதில் ஐக்கிய நாடுகள் சபை தவறிழைத்திருந்தது.

ஆனால் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழுவின் பரிந்துரைகளின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் சந்தர்ப்பம் ஐ.நாவுக்கு கிடைத்துள்ளது.

எனவே இந்த சந்தர்ப்பத்தை ஐக்கிய நாடுகள் சபை தவறவிடக்கூடாது என்பதை வலியுறுத்தி, ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு சமர்ப்பிக்குமாறு கோரி ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு மனுக்களை அனுப்பும்படி அனைத்துலக மன்னிப்புச்சபை வேண்டுகொள் விடுத்துள்ளது.

பின்வரும் இணைப்பின் ஊடாக தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை பதிவு செய்ய முடியும்.

http://amnesty.org/en/appeals-for-action/dear-un-secretary-general-tell-us-what-you-know-sri-lanka

Comments