கனடா யேசன் கெனியின் வெறுப்பூட்டும் ஏதிலிகள் பாரம்பரியம்

(மார்ச்சு 31 ஆம் நாள் எம்பசி (Embassy Newspaper) ல் ஜிம் கிறெஸ்கி (Jim Kresky) எழுதிய கட்டுரையின் தமிழ் ஆக்கம்)


கடந்த கிழமை ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மூலம் தடுத்து நிறுத்து மட்டும் குடியுரிமை மற்றும் குடிவரவு திணைக்களத்தில் படு வேகமான மாற்றங்களை யேசன் கெனி செய்து கொண்டிருந்தார். அப்படித்தான் பலராலும் பார்க்கப்பட்டது.

ஸ் ரீபன் கார்ப்பர்தான் குடிவரவு திணைக்களத்தை யேசன் கெனிக்குக் கொடுத்திருந்தார். இந்தத் திணைக்களத்தின் கோட்பாடுகளும் செயற்பாடுகளும் லிபரல் கட்சியாலும் மல்றோனியின் முற்போக்கு பழமைவாதக் கட்சியாலும் பட்டயத்தின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்புகளாலும் பொது மக்களது ஆலோசனைப்படியும் மற்றும் அரசியல் அடிப்படையிலும் - அதிகளவு அரசியல் - வடிவமைக்கப்பட்டது ஆகும். இந்தத் திணைக்களம் பெருமைமிக்க நோக்கங்கள்இ அரசியல் குறிக்கோள்கள்இ கடைப்பிடிக்கப்படாத வாக்குறுதிகள்இ நீண்ட காத்திருப்புக்கள் மற்றும் மேலதிக நேரத்தைச் செலவிடும் பொது ஊழியர்களைக் கொண்டதாக இருந்தது. இந்தப் பொது ஊழியர்களில் சிலர் வியக்கும வண்ணம் இரக்க குணமுள்ளவர்களாகவும் ஏனையோர் சிடுமூஞ்சிகளாகவும் ஆதரிப்பவர்களாகவும் இருந்தார்கள். ஒரு சிலர் ஊழல்வாதிகளாகவும் காணப்பட்டார்கள்.

கனடாவுக்கு வெளியில் இருந்து பார்க்கும் போது கனடாவின் குடிவரவு மற்றும் ஏதிலிகளுக்கான முறைமை உலகத்திலேயே மிகச் சிறந்த ஒன்றாகக் காணப்பட்டது. அதே சமயம் அது செயற்படாத முறைமையாகவும் காணப்பட்டது. அதற்கான காரணங்களில் பிழையான வரவு – செலவுத்திட்டம்இ பிழையான இடங்களில் வெட்டுக்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். பல மட்டங்களில் காணப்பட்ட துன்பமான தலைமைத்துவம் சோர்வு மனப்பான்மை அடைந்ததையும் குறிப்பிடலாம்.

குடியுரிமைஇ குடிவரவு அமைச்சு என்பது ஒரு அரசியல்வாதியின் தொழிலை மிக எளிதாக அல்லது அவ்வளவு எளிதாக அல்லாது அழித்துவிடக் கூடியது. 1968 இல் பிறந்த இளந்தாரியான கெனி நிச்சயமாக அதனைத் தனது அரசியல் நுழைவுக்கு பயன்படுத்திக் கொண்டார்.

ஏதிலிகளைப் பாதுகாக்கும் அமைச்சரவைப் பொறுப்புக்களை அவர் ஏற்றுக் கொண்ட போது அதில் கெனி வாக்குகளை அறுவடை செய்யும் திட்டத்தைக் கண்டார். இதற்கும் ஏதி;லிகளுக்கும் அல்லது ஏதிலிகளது பாதுகாப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் கண்ட திட்டம் அச்சம் என்பதாகும்.

கெனி – தலைமை அமைச்சர் கார்ப்பர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் ரோஸ் (Vic Toews) ஆகியோரது உதவியுடன் - இரண்டு கப்பல்களில் புகலிடம் கோரி வந்த தமிழர்களது வருகையை வைத்து கனடாவை 'போலி' ஏதிலி கோரிக்கையாளர்கள் தாக்கிப் பிடிக்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தை பொதுமக்கள் மனதில் விதைக்க முற்பட்டார்.

கடத்தல்காரர்களைத் தண்டிப்பதாக நடித்துக்கொண்டு - இவர்கள் பெரும்பாலும் கனடிய அதிகாரிகளால் பிடிக்க முடியாத கற்பனைப் பிசாசுகள் - சட்டவரைவு சி – 49 தை முன்வைத்தார். இந்த சட்ட வரைவு கடத்தல்காரர்களை அல்லாது ஏதிலிகளைத் தண்டிக்கும் உறுதியான கோட்பாடுகளை கொண்டதாக இருந்தது.

சி -49 வரைவுச் சட்டம் ஆழமான குறைகளைக் கொண்ட சட்ட வரைவாகும். இந்த வரைவுச் சட்டம் சிறீலங்காவின் கொலைக்கும் முடமாக்குதலுக்கும் தப்பி அந்நிய கனடாவுக்கு ஓடிவந்த அதிட்டக்காரர்களான ஏதிலிகள் கடத்தல்காரர்களின் உதவியை நாடியது அவர்களுடைய துரதிட்டம் ஆகிவிட்டது. அவர்களுக்கு தண்டனையாக குடும்ப மறுசேரல்இ நல்வாழ்வு வசதிகள் மற்றும் சேவைகள் மறுக்கப்பட்டுள்ளன.

இது ஒரு தந்திரமாகும். இதன் மூலம் சாதாரண கனேடியர்கள் சட்டவிரோதமாக வருவோர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து சாதாரண கனேடியர்களது வாக்குகளை அள்ள முடியும். இது முற்றிலும் ஒரு நடிப்பாகும். இதில் குடியுரிமை குடிவரவு அமைச்சர்இ பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்இ ஏன் தலைமை அமைச்சர் ஆகியோர் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் ஓசன் லேடி மற்றும் சன் சீ என்ற இரண்டு துருப்பிடித்த கப்பல்களைப் பயன்படுத்தி 'கனடாவின் குடிவரவு முறைமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தலைத் தடுத்தல்' என்ற சட்டவரைவை முன்னெடுக்கிறார்கள்.

இது அமெரிக்காவில் குடியரசுக்கட்சியின் ஏதிலிகளுக்கு எதிரான பரப்புரை போன்ற அரசியலாகும். இது உண்மையான ஏதிலிகளுக்குக் கேடானது. ஒருவிதத்தில் இவர்கள் குடிவரவு திணைக்களத்தின் பலி ஆடுகள் ஆவர்.

ஏதிலி அடைக்கலம் கோருவோரே குடியுரிமை மற்றும் குடிவரவு திணைக்களத்தின் வல்லமையற்ற கட்சிக்காரர்கள் நேர்மையாக நடத்தப்பட்டால் குடிவரவு அமைச்சகம் நன்றாக மேலாண்மை செய்யப்படுகிறது என்ற சாடைக்குறிப்பு பெறப்படும். கெட்டகாலத்துக்கு அப்படி அவர்கள் நடத்தப்படவில்லை.

கெனி அவர்களுடைய புகலிட அணுகுமுறை மிக ஆழமான ஏமாற்றத்தைத் தருகிறது. .அவரது கண்காணிப்பில் கனடாவில் பாதுகாப்புத் தேடி புகலிடம் கோரி வருபவர்களது எண்ணிக்கை குறிப்பிடத்தக்கவாறு சரிந்துள்ளது.

இந்த வாரம் ஏதிலிகளுக்கான அய்க்கிய நாடுகளது தூதுவராலயம் வெளியிட்ட அறிக்கையில் கனடாவில் புகலிடம் கோரும் விண்ணப்பங்கள் 30 விழுக்காடு வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அய்க்கிய நாடுகளது அறிக்கை குறிப்பிட்ட நாடுகளில் இருந்து கனடாவுக்கு நுழைபவர்களுக்கு இசைவுச் சீட்டு கொடுப்பதில்லை என கனடா குடியுரிமை மற்றும் குடிவரவு அமைச்சு ஆலோசிக்கிறது என்ற பின்புலத்தில் வந்துள்ளது. இது முரண்நகையானது. காரணம் இந்த மாற்றங்கள் கடத்தல் மூலம்; கனடாவுக்குள் நுழைந்துவிட வேண்டும் என நினைப்பவர்களது எண்ணிக்கையை அதிகரிக்கவே செய்யும்.

இதே நேரம் ஏதிலிக் குழுக்கள்பற்றி கெனி பகிரங்கமாக இழிவுபடுத்தி;ப் பேசுவது அவரது திணைக்களத்தால் நியமிக்கப்பட்ட ஏதிலி நடுவர்களும் அமைச்சரது செல்வாக்குக்கு உள்ளாகலாம் என்ற கவலை எழுந்துள்ளது. இந்தக் காரணத்தால் குடிவரவு அமைச்சர் ஒருவரது வாழ்வை அல்லது சாவைத் தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவராக விளங்குகிறார். அது மட்டுமல்ல அவர் பொது மேடைகளில் பேசும்போது கேட்பவர் மத்தியில் அதிகளவு செல்வாக்கைச் செலுத்துகிறார்.

அமைச்சர் இப்படிப் பேசினார் (உண்மையில் அப்படிப் பேசியிருக்கிறார்) என்று வைத்துக் கொள்வோம். அதாவது மெக்சிக்கன் அல்லது செக் றோமா ஏதிலிகள் திட்டமிட்டு குடிவரவு முறைமையை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் அல்லது அமெரிக்க - இராக் போரை எதிர்த்தவர்கள் மோசடிக்காரர்கள் அல்லது 'போலியானவர்கள்' என்று பேசினால் அவரது திணைக்கள நடுவர்களில் எத்தனை பேர் அமைச்சர் சொல்வது பிழை என எண்பிக்கப் போகிறார்கள்?

நியாயமானஇ நடுநிலமையான பல நடுவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். இவர்கள் புகலிடம் கோரும் ஏதிலிகளது நாட்டு நிலமையை நன்கு அறிந்தவர்கள். தாய்நாட்டில் ஏதிலிகளது தனிப்பட்ட அனுபவங்களை நன்கு அறிந்தவர்கள்.

ஆனால் ஏதிலிகள் அவையின் தீர்ப்புகள் பற்றி அண்மைய சட்ட மற்றும் ஊடக விசாரணைகள் நடுவர்கள்இ சாட்சியத்துக்கு மாறாகஇ தோற்றத்தில் நீதி மன்றங்கள் போல் விளங்கும் நீதிமன்றங்களுக்கு முன் தோன்றும் கிட்டத்தட்ட எல்லா புகலிட கோரிக்கையாளரது வேண்டுகோளை நிராகரித்துள்ளது. .இன்னும் பல நடுவர்கள் ஒரு ஏதிலி விண்ணப்பத்தையாவது ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு ஏதிலிகளின் வாக்கு மூலத்தில் ஏதாவது பிழை கண்டு பிடிக்கு மட்டும் (இடுக்கண் நிமித்தம் ஏற்படும் அவர்களது தடுமாற்றம்) கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுக்கிறார்கள்.

மேலே உள்ள சிக்கல் என்னவென்றால் அமைச்சரது பகிரங்கமான சிராய்த்தல் பேச்சு அவரது நடுவர்களின் மிகக் கெட்ட குணத்தை வெளிக்கொணர வைத்துவிடும்.

கெனி அவர்களுடைய கடத்தலுக்கு எதிரான சட்டவரைவும் அவர் பொதுமக்களிடை நடந்து கொள்ளும் விதமும் அவருக்கு எதிராக மரியாதையோடு கூடிய பக்கசார்பற்ற பலத்த கண்டனத்தை உருவாக்கியுள்ளது. வழமையாக பழமைவாதக் கட்சியை ஆதரிக்கும் கிறித்தவ சமயவாதிகளும் மற்றும் பொது சமூகமும் அரசு பிழையான பாதையில் செல்வதாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்களது ஆலோசனைகள் புறம்தள்ளி விடப்பட்டுவிட்டன. அந்த ஆலோசனைகளை 'குடிவரவு கைத்தொழில் வட்டாரத்து சந்தேகிகள்' என கெனி பகிரங்கமாக ஏளனம் செய்துள்ளார்.

மே மாதம் நடைபெற இருக்கும் தேர்தலில் கார்ப்பரது பழமைவாதக் கட்சி பெரும்பான்மை அரசு அமைக்கப் போதிய எண்ணிக்கையோடு தேர்ந்தெடுக்கப்பட்டால் இறந்து பட்ட சட்ட வரைவு சி – 49 இன் சில பதிவுகள் மீண்டும் உயிர்பெற்றுவிடும் சாத்தியம் அதிகமாக உண்டு. பழமைவாதக் கட்சி எண்ணற்ற கிறித்துவ தேவாலயக் குழக்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஏதிலிகள் பற்றிய கொள்கையில் கொஞ்சம் கருணைகாட்டுமாறு கேட்கும் கோரிக்கைக்கு செவிசாய்த்து தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்களா? ;

அப்படிச் செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் கார்ப்பரது அரசின் தடயங்களைப் பார்க்கும் போது பாரிய மாற்றத்தை உருவாக்கினால் மட்டுமே அது சாத்தியமாகும்.

குடிவரவு தொடர்பான விடயங்கள் தேர்தல் பரப்புரைக் காலத்தில் வாக்காளர்களது பட்டியலில் முக்கிய இடத்தை வகிக்கும் என சொல்ல முடியாது. கனடாவுக்குள் உச்ச கட்டமாக அனுமதிக்கப்பட்ட ஏதிலிகளின் எண்ணிக்கை குடிவரவாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது மிகக் குறைவானது. ஆனால் ஏதிலிகள் பற்றிய கொள்கை மற்றும் நடைமுறை வேறு எந்த நடவடிக்கைகளையும் விட ஒரு நாட்டின் ஆத்மாவை வரையறை செய்கிறது.

நான் நினைக்கிறேன் பெரும்பான்மை கனேடியர்கள் தங்களது நாட்டின் ஏதிலிகள் பற்றிய கொள்கை நியாயமாகவும்இ திறமை மிக்கதாகவும் மற்றும் கருணை நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தால் வாக்களிக்கு முன்னர் கடந்த பல ஆண்டுகளாக குடிவரவு முறைமை எவ்வாறு கையாளப்பட்டதென்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

எங்கே எப்படி அதனைச் செய்யலாம்?

ஒரு யோசனை ஏதிலிகளுக்கான கனேடிய அவையின் மிகச் சிறப்பான இணையதளத்தை பார்ப்பதாகும்.

அதைவிடச் சிறப்பானது ஏதிலிகளுக்குத் தனிப்பட்ட முறையில் உதவ கனடா முழுதும் பரந்து கிடக்கும் 170 கும் அதிகமான கிறித்துவ தேவாலயக் குழுக்கள் மற்றும் சமயசார்பற்ற அமைப்புக்கள் ஒன்றில் தொண்டராகப் பணியாற்ற முன்வருவதாகும்.

Comments