'சட்டம் ஒழுங்கு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடு சிறிலங்கா' : சிறிலங்காவுக்கான முன்னாள் ஐ.நா பேச்சாளர்


'சட்டம் ஒழுங்கு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடு சிறிலங்கா' : சிறிலங்காவுக்கான முன்னாள் ஐ.நா பேச்சாளர்

தமிழ்ப் புலிகளுக்கு எதிராகச் சிறிலங்கா அரச படையினர் முன்னெடுத்த போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என ஐ.நா வல்லுநர்கள் குழு தனதறிக்கையில் கூறியிருப்பதையடுத்து சிறிலங்காவினது ஆளும் வர்க்கத்தினர் கடும் கவலைக்கு உட்பட்டிருக்கிறார்கள்.

வல்லுநர்கள் குழுவினது அறிக்கையினால் கோபமடைந்திருக்கும் ராஜபக்ச அனைத்துலக விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற இதுபோன்ற அழைப்புக்கு எதிராக தொழிலார் நாளன்று நாட்டு மக்களை அணிதிரழுமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளினின் தலைவர்கள் கொல்லப்பட்ட அந்தப் போரின் இறுதி நாட்களில் சிறிலங்காவில் ஐ.நாவின் பேச்சாளராக கோர்டன் வைஸ் [Gordon Weiss] பணியாற்றிவந்தார்.

தயவு தாட்சணியமின்றிச் செயற்பட்ட சிறிலங்கா அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ந்த மூர்க்கமான போரின் மத்தியில் சிக்கொண்டு மடிந்துபோன் அப்பாவிப் பொதுமக்கள் தொடர்பாக எழுதும் நோக்கில் ஐநாவில் பிற பதவிகளில் தொடருவதற்கு வழங்கப்பட்ட வாய்ப்பினையும் புறம்தள்ளிய கோர்டன் வைஸ் ஐ.நாவிலிருந்து வெளியேறியிருந்தார்.

அவுஸ்ரேலியாவிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய கோர்டன் வைஸ், The Cage: The Fight for Sri Lanka & the Last Days of the Tigers, என்ற தலைப்பில் அமைந்த புத்தகத்தினை எழுதுவதற்கு ஆரம்பித்தார்.

2009ம் ஆண்டு போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் எனத் தான் முன்னரே குறிப்பிட்ட விடயங்களை வல்லுநர்கள் குழுவினது அறிக்கை உறுதிப்படுத்தியிருப்பதாக அவர் தற்போது கூறுகிறார்.

பயங்கரவாதம்சார் கிளர்ச்சிகளை முறியடிக்கும் தனது பலத்தினை உலகிற்கு காட்டுவதற்குச் சிறிலங்காவினது அதிபர் ராஜபக்ச முனைந்ததொரு காலப்பகுதியில் கோர்டன் வைசினது இந்தப் புத்தகம் வெளிவந்தது.

தனது இந்த படைத்துறைசார் அனுபவத்தினை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளுவதற்கு கொழும்பினது முன்மொழிவினை 'சிறுபிள்ளைத்தனமானது' என உலெக் என்பி [Ullekh NP Economic Time Bureau] யுடனான நோர்காணலின்போது கோர்டன் வைஸ் கூறியிருந்தார்.

இந்த நேர்காணலின்போது தனது புத்தகம், சிறிலங்காவினது அரசியல், பிரபாகரன், இந்தியா, சீனா, பெரும்பான்மைவாதம், சிறிலங்காவில் முளைவிடக்கூடிய எதிர்கால மோதல்களின் அடிப்படை எனப் பல விடயங்களில் தொடர்பாக அவர் கருத்துரைத்ததார்.



தமிழ்ப் புலிகளுக்கு எதிராகச் சிறிலங்கா அரச படையினர் முன்னெடுத்த போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என ஐ.நா வல்லுநர்கள் குழு தனதறிக்கையில் கூறியிருப்பதையடுத்து சிறிலங்காவினது ஆளும் வர்க்கத்தினர் கடும் கவலைக்கு உட்பட்டிருக்கிறார்கள்.

வல்லுநர்கள் குழுவினது அறிக்கையினால் கோபமடைந்திருக்கும் ராஜபக்ச அனைத்துலக விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற இதுபோன்ற அழைப்புக்கு எதிராக தொழிலார் நாளன்று நாட்டு மக்களை அணிதிரழுமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளினின் தலைவர் கொல்லப்பட்ட அந்தப் போரின் இறுதி நாட்களில் சிறிலங்காவில் ஐ.நாவின் பேச்சாளராக கோர்டன் வைஸ் [Gordon Weiss] பணியாற்றிவந்தார்.

தயவு தாட்சணியமின்றிச் செயற்பட்ட சிறிலங்கா அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ந்த மூர்க்கமான போரின் மத்தியில் சிக்கிகொண்டு மடிந்துபோன அப்பாவிப் பொதுமக்கள் தொடர்பாக எழுதும் நோக்கில் ஐநாவில் பிற பதவிகளில் தொடருவதற்கு வழங்கப்பட்ட வாய்ப்பினையும் புறம்தள்ளிய கோர்டன் வைஸ் ஐ.நாவிலிருந்து வெளியேறியிருந்தார்.

அவுஸ்ரேலியாவிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய கோர்டன் வைஸ், The Cage: The Fight for Sri Lanka & the Last Days of the Tigers, என்ற தலைப்பில் அமைந்த புத்தகத்தினை எழுதுவதற்கு ஆரம்பித்தார்.

2009ம் ஆண்டு போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் எனத் தான் முன்னரே குறிப்பிட்ட விடயங்களை வல்லுநர்கள் குழுவினது அறிக்கை உறுதிப்படுத்தியிருப்பதாக அவர் தற்போது கூறுகிறார்.

பயங்கரவாதம்சார் கிளர்ச்சிகளை முறியடிக்கும் தனது பலத்தினை உலகிற்கு காட்டுவதற்குச் சிறிலங்காவினது அதிபர் ராஜபக்ச முனைந்ததொரு காலப்பகுதியில் கோர்டன் வைசினது இந்தப் புத்தகம் வெளிவந்தது.

தனது இந்த படைத்துறைசார் அனுபவத்தினை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளுவதற்கு கொழும்பினது முன்மொழிவினை 'சிறுபிள்ளைத்தனமானது' என உலெக் என்பி [Ullekh NP Economic Time Bureau] யுடனான நோர்காணலின்போது கோர்டன் வைஸ் கூறியிருந்தார்.

இந்த நேர்காணலின்போது தனது புத்தகம், சிறிலங்காவினது அரசியல், பிரபாகரன், இந்தியா, சீனா, பெரும்பான்மைவாதம், சிறிலங்காவில் முளைவிடக்கூடிய எதிர்கால மோதல்களின் அடிப்படை எனப் பல விடயங்கள் தொடர்பாக அவர் கருத்துரைத்தார். அதன் பொருத்தமான பகுதிகள் இங்கே தரப்படுகிறன:

சிறிலங்காவினது இன்றைய நிலைமையினை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்?

அரசாங்கத்தினை ஆதரிக்கும் சிறிலங்காவினது பெரும்பான்மை மக்களின் சார்பில் நின்று நிலைமையினை நோக்கினால் அது சிறப்பாக இருப்பதாகவே உங்களுக்குத் தெரியும். கடந்த ஒன்றரை வருடங்களாக நான் அங்கில்லை. ஆனால் தற்போது சிறிலங்காவில் போர் என்ற ஒன்று இல்லைத்தான். ஒப்பீட்டு ரீதியில் இலங்கைத் தீவு உறுதியுடன் இருக்கிறது, உல்லாசப் பயணிகள் மீண்டும் படையெடுக்கிறார்கள், பொருளாதாரம் செழிப்புற்று வளர்கிறது.

ஆனால் ஒருநாட்டினது சனநாயகத் தூண்களான ஊடகங்கள், நீதி முறைமை மற்றும் நாடாளுமன்றம் என்பன பலமிழந்துவிட்டன. ராஜபக்ச குடும்பத்தினரின் அபிலாசைக்கு ஏற்ப குடும்ப ஆட்சியே அங்கு தொடர்கிறது. போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கணக்கின்றிக் கைவிடப்படும் ஒரு நிலைமை அங்கு ஏற்பட்டிருக்கிறது. ஆரோக்கியமானதொரு சமூகத்தினைக் கட்டியெழுப்புவதற்குச் சிறந்ததொரு வழிமுறை இதுதானா? இது தொடரானதொரு விவாதம்.

ஜே.வி.பி எனப்படும் ஜனதா விமுக்தி பெரமுனவினர் 1971ம் ஆண்டிலும் பின்னர் 87 தொடக்கம் 89 வரையிலும் முன்னெடுத்த அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிகளின் போது சிங்கள இளைஞர்கள் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட சம்பவங்களையும் நான் எனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறேன். சிங்கள இளைஞர்களே இதுபோலப் பெருமளவில் கொல்லப்பட்ட வரலாற்றினைக் கொண்டதொரு நாட்டில் 2009ம் ஆண்டும் பொதுமக்கள் கொல்லப்பட்ட போர்க்குற்றம் இடம்பெற்றிருக்க முடியும் என நான் கருதுகிறேன்.

நாட்டிலுள்ள ஊடகங்கள் எந்தளவிற்கு மோசமாகக் கையாளப்படுகின்றன?

அதியுச்ச திறனுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மற்றும் செய்தித் தொகுப்புகள் ஒரு புறமும் தவறான கருத்துருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்த மிக மோசமான செய்தி ஆய்வுகளின் மறுபுறமுமாக ஒரு கலவையாகவே சிறிலங்காவினது ஊடகங்கள் இருக்கின்றன. அதியுச்ச கல்வியறிவினைப் பெற்ற சிறிலங்காவினது சமூகத்தில் ஊடகங்கள் என்பது பிரச்சினைக்குரியதொரு பக்கமாகவே திகழ்கின்றன. கிறவுண்ட்வியூஸ் Groundviews போன்ற செய்தி இணையங்களின் ஊடாக சிறந்த படைப்புகள் வெளிவருகின்றன. ஆனால் சிறிலங்காவிலுள்ள அதிகளவிலான ஊடகங்கள் அரசாங்கத்தினால் நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவே கட்டுப்படுத்தப்படுகின்றன.

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பத்திரிகைத்துறை மோசமான இழப்புகளைச் சந்தித்து நின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டது தொடர்பில் தங்கள் கருத்து என்ன?

சிறிலங்காவினைப் பொறுத்தவரையில் ஊடகவியலாளரான நீங்கள் ஆட்சியிலுள்ளவர்களுக்கு அதிக 'தொந்தரவினைக்' கொடுப்பீர்களெனில் நீங்கள் கொல்லப்படுவீர்கள். சனநாயக நாடொன்றில் ஊடகங்களில் சுதந்திரமான செயற்பாட்டினைச் சீர்குலைப்பதாக இதுபோன்ற சம்பவங்கள் அமைகிறது. குறித்ததொரு கருத்துருவினை நீங்கள் எதிர்ப்பீர்களானால் நீங்கள் பாதுகாப்பாக இருக்கமாட்டீர்கள் என்ற செய்தியினையே லசந்தவினது கொலை எடுத்துக்கூறுகிறது.

பௌத்தத்தின் வன்முறைசாராப் பண்பு தொடர்பான உங்களது அனுபவம்தான் என்ன?

To encounter extremism in Buddhism strikes an Australian, at least, as a deep contradiction. நான் எனது இருபதாவது வயதில் தலாய்லாமாவின் ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொண்டேன். பௌத்தம் தொடர்பாக ஏராளம் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். பௌத்தத்தின் கோட்பாடுகள் என்னை அதிகம் கவர்ந்தது. எந்தவொரு சித்தாந்தமும் தவறாக அர்த்தம்கொள்ளப்படலாம் என்பதையே சிறிலங்காவினது பிணக்கு தந்த அனுபவம் எங்களுக்குக் கூறுகிறது.

ஆனால், சிறிலங்காவிலுள்ள பௌத்தர்களில் குறிப்பிட்ட சில பகுதியினர் மாத்திரமே இதுபோல தீவிரவாதத்தினைப் பின்பற்றுகிறார்கள் என நான் நம்புகிறேன். பௌத்த சித்தாந்தத்தின் அடிப்படையிலானது எனக் கூறி சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை அங்கு வாழும் பௌத்தர்கள் பலர் ஏற்கவில்லை என்பதை நான் அறிவேன்.

அனைத்துலக ரீதியில் சிறிலங்காவினது முக்கியத்துவம்தான் என்ன?

சிறிலங்காவினது அரசியல் தலைமைத்துவம் தனித்து நின்று குரூரம் நிறைந்த முறையில் நாட்டினது கிளர்ச்சிக்கு முகம்கொடுத்து முறியடித்திருக்கிறது. ஆனால் 'அனைத்துலக சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு முறைமையின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலாகவே' சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்றங்கள் அமைகிறது என ஐ.நாவினது வல்லுநர்கள் குழு தனதறிக்கையில் கூறியிருக்கிறது. மறு வளத்தில் கூறுவதானால் அனைத்துலக அரசியல் கட்டமைப்பு பாதிக்கப்படாமல் இருக்கவேண்டுமெனில், இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட இந்தக் குற்றங்களை எந்தவகையிலும் புறந்தள்ளிவிடமுடியாது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான முட்டிமோதும் நிலை என்று வரும்போது சிறிலங்கா மிகவும் முக்கியமானதொரு தரப்பாக அமைகிறது.

நீங்கள் சிறிலங்காவில் பணிசெய்த அந்தக் காலப்பகுதியில் அனைத்துலக நிறுவனங்களது நிலைமை எவ்வாறு மோசமாக இருந்தது?

பொதுமக்களது பெருந்துயரத்துடன் ஒப்பிடும் போது சிறிலங்காவில் பணியாற்றும் அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் தங்களது பணியின் போது சந்திக்கும் இடர்கள் ஒன்றும் பெரிதல்ல. ஆனால் அங்கு செயற்படும் மனிதாபிமானப் பணியாளர்கள் சிறிலங்கா அரச படையினரதும் அவர்களது துணை அமைப்புகளதும் கைகளில் சிக்கி கைதுசெய்யப்படுகிறார்கள், அடித்துத் துன்புறுத்தப்படுகிறார்கள், அச்சுறுத்தப்படுகிறார்கள், சித்திரவதைக்கு உள்ளாகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். அதேநேரம் விடுதலைப் புலிகளது கட்டப்பாட்டுப்பகுதிக்குள் பணியாற்றிய உள்ளூர் மனிதநேயப் பணியாளர்களை அங்கிருந்து வெளியேறவிடாமல் தடுத்த விடுதலைப் புலிகள் அவர்களைப் படையில்கூடத் திரட்டியிருந்தார்கள்.

சிறிலங்காவில் அனைத்துத் தரப்பினராலும் உதைக்கப்படும் ஒரு தரப்பாக தொண்டு நிறுவனங்கள் மாறியமை துன்பகரமானது. உலகிலுள்ள நாடுகளில் மனிதாபிமானப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு அதிக அபாயமுள்ள நாடுகளில் சிறிலங்காவே முதன்மையானது என 2008ம் ஆண்டு ஐ.நா மனித உரிமைச் சபையின் அப்போதைய தலைவர் ஜோன் ஹோம்ஸ் அப்போது கூறியிருந்து இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது.

தற்போது நிலைமைகள் மாறிவிட்டதா?

ஆம், பாதுகாப்பு நிலைமைகள் என்று வரும்போது குறிப்பிட்டுக் கூறக்கூடிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஐ.நாவின் அறிக்கைக்கு எதிராக சிறிலங்கா காட்டும் எதிர்ப்பு எதிர்பார்த்ததொன்றே. இதுபோன்ற காழ்ப்புணர்ச்சி, கோபம், அச்சுறுத்தல் போன்ற நிலைமைகள் முன்னரும் ஏற்பட்டது நினைவிற்கொள்ளத்தக்கது. எவ்வாறிருப்பினும், சிறிலங்காவிற்கு எதிராகச் சுமத்தப்பட்டிருக்கும் போர்க் குற்றங்கள் அந்த நாட்டினது மூத்த தலைவர்கள் வரை சுமத்தப்பட்டிருப்பதுதான் இதற்கான காரணம்.

அங்கோலா, பொஸ்னியா, குவாட்டமாலா, கெய்றி, இந்தோநேசியா, இஸ்ரேல், சூடான் போன்ற நாடுகளில் நீங்கள் பணியாற்றியிருக்கிறீர்கள். அங்குள்ள நிலைமைக்கும் சிறிலங்காவில் நிலவுகின்ற நிலைமைக்கும் நீங்கள் என்ன வேறுபாட்டைக் காணுகிறீர்கள்?

நான் பணிசெய்த நாடுகளில் சட்டம் ஒழுங்குமுறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடு சிறிலங்காதான். தாங்கள் அதிக வினைத்திறன்கொண்ட சட்ட முறையினைக் கொண்டிருக்கின்றதாக இவர்கள் கூறுகின்றபோதும் உண்மை நிலைமை தலைகீழாகவே உள்ளது. சட்டம் ஒழுங்கு முறையினை நிலைநாட்டுவதிலுள்ள குறைபாடுகள் தொடர்பாக அனைத்துலக சட்டம்சார் அமைப்புகள் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

சிறிலங்காவினைப் போன்ற நிலைமையினைக் கொண்ட நாடுகளில் விசாரணைகள் ஒப்பீட்டு ரீதியில் வெளிப்படைத்தன்மையுடனும் சிறப்புடனும் இடம்பெறுவதாகவே நான் கருதுகிறேன். சிறிலங்காவில் சட்டத்துறைசார் வல்லுநர்கள் பலர் இருக்கின்றபோது சட்டத்துறை சீரழிந்திருப்பது வருந்துதற்குரியதே.

இடம்பெற்ற இனக்கொலைக்கு அதிபர் மகிந்த ராஜபக்ச சட்ட விசாரணையினை எதிர்கொள்ளவேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா?

இந்த வாதத்தினை நான் ஆதரிப்பேனெனில் என்னையொரு முட்டாளாகத்தான் பார்ப்பார்கள். எவ்வாறிருப்பினும் சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை அனைத்துலக ரீதியில் முறையாக விசாரிக்கவேண்டும் என நான் கருதுகிறேன். இனக்கொலை என்பது பெரியதொரு சொல். எனது புத்தகத்தில் இனக்கொலை என்ற பதத்தினை நான் பயன்படுத்தமாட்டேன்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஓர் diabolical alchemist என நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்களே. இந்த மனிதர் எந்தளவிற்கு மர்மமானவர்? அவர் எங்கு தவறிழைத்தார்?

பிரபாகரனைப் பின்பற்றிச் செயற்பட்டவர்களைப் பொறுத்தவரையில் தீர்க்கதரிசனம் கொண்டதொரு மனிதர் அவர். பெரும்பாலான அம்சங்களில் சாதாரண மனிதர் போலவே வாழ்ந்து முடிந்த ஒருவர் அவர். அவர்வாழ்ந்த சூழமைவுதான் இந்த நிலைமையினை ஏற்படுத்தியது. தமிழர்களை வழிநடத்தும் பொறுப்பினை தமதாக்குவதற்கு பலர் முயன்றனர். ஆனால் கருணை என்பதற்கே இடமற்ற வழியினைப் பின்பற்றிய பிரபாகரன் இந்த நிலையினை அடைந்திருந்தார்.

1983ம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின் பின்னர் தங்களது பழியினைத் தீர்த்துக்கொள்ள விரும்பிய தமிழர்களுக்கும் தங்கள் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு புகலிடம் தேடிய தமிழர்களுக்கும் ஆறுதல் தந்த ஒரு நபராக விளங்கிய பிரபாகரன் முதல்தர கெரில்லாத் தலைவர் ஆனார். தனக்குச் சரியெனப்பட்டது எதுவோ அதற்கமையப் பிரபாகரன் செயற்பட்டமைதான் அமைதி முயற்சிகள் தோல்வியடைவதற்கும் ஈற்றில் அவரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் உயிரிழப்பதற்கும் வழிசெய்தது.

புலிகளின் தோல்வி கற்றுத்தரும் அரசியல் மற்றும் படைத்துறைசார் பாடம்தான் என்ன?

பயங்கரவாதம்சார் கிளர்ச்சியினை முறியடிக்கும் தனது அனுபவத்தினை வியாபாரப்படுத்துவதில் சிறிலங்கா முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. திறம்படப் போரிடும் ஆயுதப் படையினர் தங்களது அடிப்படை இலக்கு எதுவோ அதனை அடைந்துவிட்டார்கள். ஆனால் இங்கு நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதே.

ஆப்கானிலோ அன்றி ஈராக்கிலோ உள்ளதைப் போன்ற நிலைமை சிறிலங்காவில் இல்லை. சிறிலங்காவினது கிளர்ச்சி வேறுபட்ட பண்புகளைக் கொண்டது. இரண்டாவதாக, கிளர்ச்சியினை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நவீன வழிமுறையினை நோக்குமிடத்து அது மக்களிலிருந்து கிளர்ச்சியாளர்களைப் பிரிப்பதையே அடிப்படையாகக் கொண்டது. கிளர்ச்சிக்குழுவிற்கான அடித்தளமாம் மக்களை அவர்களிடமிருந்து பிரிப்பதுதான் இந்த வழிமுறையின் அடிப்படை. பொதுமக்கள் இழப்புக்களைக் குறைப்பதோடு கிளர்ச்சியாளர்களைத் தனியாக இலக்குவைப்பதற்கே இந்த வழிமுறை கைக்கொள்ளப்படும்.

ஆனால் சிறிலங்காவினைப் பொறுத்தவரையில் இடம்பெற்ற போரின்போது ஏராளமான உயிர்கள் காவுகொள்ளப்பட்டிருக்கிறது. சிறிலங்கா அரசாங்கமானது தமிழர்களுக்கு அமைதியினைக் கொடுப்பதற்குப் பதிலாக ஒரு மேலாண்மையின் அடிப்படையில் நின்று அவர்களுக்குப் போரையும் துன்பத்தையுமே கொடுத்து நின்றது.

தி.வண்ணமதி

Comments