கனடாவில் சிறுபான்மை அரசாங்கத்தை நடத்தி வந்த பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியதை அடுத்து, கனேடிய அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் கலைக்கப்பட்டது. நம்பிக்கையில்லா பிரேரணையைத் தொடர்ந்து, ஹார்ப்பர், கனேடிய ஆளுநர் டேவிட் ஜோன்ஸ்டனைச் சந்தித்து நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஜோன்ஸ்டனும், நாடாளுமன்றத்தை மார்ச் 26-ஆம் நாள் கலைத்து மே 2-ஆம் நாள் (திங்கக்கிழமை) தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். இதனடிப்படையில், தேர்தல் அடுத்த சில தினங்களில் இடம்பெற இருக்கிறது. கனேடிய தமிழர்களின் இருப்பை உறுதிசெய்யும் தேர்தலாக இது இருக்கப்போகிற காரணத்தினால் தமிழர்கள் தமது வாக்குகளை தவறாது போடுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த 7 ஆண்டுகளில் நடைபெறும் நான்காவது தேர்தல் இதுவாகும். 308 இருக்கைகளைக் கொண்ட கனேடிய பாராளுமன்றத்திற்கு 155 இடங்களை வென்றாலே தனிப் பெரும் பலத்துடன் ஆட்சியமைக்க முடியும். ஐந்து கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன, இருந்தாலும் நான்கு கட்சிகளே பிரதானமான கட்சிகளாக இருக்கின்றன.
VOTE FOR
Rathika Sitsabaiesan
NDP Candidate Scarborough Rouge River
பழமைவாதக் கட்சி என அழைக்கப்படும் கொன்சவேர்டி கட்சி; தாராளவாதக் கட்சி என அழைக்கப்படும் லிபரல் கட்சி; புதிய ஜனநாயகக் கட்சி என அழைக்கப்படும் நியூ டெமோக்றட்டிக் கட்சி; சுதந்திர கியூபெக் கூட்டுக் கட்சி ஆகியவே நான்கு பிரதான கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன. இத்தேர்தலில் இரு தமிழர்களும் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராகவன் பரஞ்சோதி என்பவர் பழமைவாதக் கட்சி சார்பிலும், ராதிகா சிற்சபேசன் என்பவர் புதிய ஜனநாயகக் கட்சி சார்பிலும் தமிழர்கள் அதிகமாக வதியும் ரொறண்டோ பகுதியில் போட்டியிடுகிறார்கள்.
குழம்பிப்போயுள்ள கனேடிய மக்கள்
கனேடிய வரலாற்றில் ஏழு வருடங்களில் நான்காவது தேர்தலை நடத்துவதென்பது, இதுவே முதல் தடவையாகும். தாராளவாதக் கட்சி என்பது கனடாவின் பழைய கட்சியென்று வர்ணிக்கப்படும் கட்சி. இக் கட்சி பலவீனமான தலைமையின் கீழேதான் இன்று இருக்கிறது என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். தாராளவாதக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் கனேடிய பிரதமர் ஜோன் கிரிடியன் மூன்று தடவைகள் தனிப்பெரும் பலத்துடன் 1993-ஆம் ஆண்டிலிருந்து 2003 டிசம்பர் வரை ஆட்சி செய்தார். இவருக்குப் பின்னர், நிதி மந்திரியாக இருந்த போல் மார்டின் தாராளவாதக் கட்சியின் சிறுபான்மை ஆட்சியை 2006-ஆம் ஆண்டுவரை நடத்தினார்.
பதவியேற்று இரு வருடங்களில் மார்டின் அரசு 2006-இல் கலைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜனவரி 23, 2006-இல் இடம்பெற்ற தேர்தலில் பழமைவாதக் கட்சி சிறுபான்மைப் பலத்துடன் ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையில் ஆட்சியமைத்தது. போல் மார்டினுக்கு நடந்த நிகழ்வே ஹார்ப்பருக்கும் நடந்தது. ஏறத்தாள இரு வருடங்களில் ஹார்ப்பர் அரசு கலைக்கபட்டு, அக்டோபர் 14, 2008-இல் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலிலும் மீண்டும் பழமைவாதக் கட்சி சிறுபான்மைப் பலத்துடன் ஹார்ப்பர் தலைமையில் ஆட்சியமைத்தது. இரண்டு தடவைகள் சிறுபான்மை அரசை 2006-ஆம் ஆண்டு முதல் நடத்திவரும் ஹார்ப்பர் மீண்டும் மே 2-ஆம் நாள் இடம்பெறும் தேர்தலில் மூன்றாவது தடவையாகப் போட்டியிடுகிறார்.
நடந்து முடிந்த வாக்குக் கணிப்புகளின் படி மீண்டுமொரு சிறுபான்மை அரசு வரும் சாத்தியம் இருக்கிறது. இந்தத் தடவை புதிய ஜனநாயகக் கட்சி இரண்டாமிடத்திற்கு வரும் சாத்தியம் உள்ளதாகக் கணிப்புகள் காட்டுகின்றன. பழமை தழுவும் கட்சியே முதலிடத்திலிருப்பதாக கணிப்புகள் தெரிவித்தாலும், இக்கணிப்புக்களை வைத்து இறுதி முடிவு எடுக்க முடியாது.
கனேடிய மக்கள் எவருக்கு வாக்களிப்பதென்று தெரியாமல் இருக்கிறார்கள் போன்றதொரு நிலையே நிலவுகிறது. தாராளவாதக் கட்சி உறுதியான மற்றும் ஆளுமையான தலைமையை கொண்டதாக இருப்பதாக இல்லை என்றே தோன்றுகிறது. பழமைவாதக் கட்சியை பொறுத்தமட்டில் ஹார்ப்பர் அவர்களின் இனவாதப் பேச்சுக்கள் பல புதிய குடியேற்றவாசிகளை அதிருப்திக்குள்ளதாக்கியுள்ளது. புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜாக் லேடன் மிக துல்லியமான வகையில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் செயலாற்றுகிறார். சுதந்திர கியூபெக் கூட்டுக் கட்சி என்பது கியூபெக் மாநிலத்திலேயே ஆதிக்கத்தை கொண்டுள்ளதுடன், பிற கனேடிய மாநிலங்களில் இக்கட்சிக்கு செல்வாக்கு இல்லை. இருந்தாலும், இக்கட்சி கனேடிய நாடாளுமன்றத்தில் மூன்றாவது எதிர்க்கட்சியாகவே பலத்துடன் இருந்து வருகிறது.
எந்த வகையில் தமிழர்களுக்கு இத்தேர்தல் முக்கியமாகிறது
பழமை தழுவும் கட்சி மீண்டும் ஆட்சி ஏறினால் தமிழர்களுக்கு சாபக்கேடாகவே இருக்கும். தமிழர்களுக்கு மட்டுமல்ல புதிதாக கனடா வந்து குடியேற எண்ணும் அனைவருக்குமே பழமை தழுவும் கட்சியினால் பிரச்சனை இருக்கப் போகிறது. கனடாவிற்கு அகதிகளாக வருவோரை தடுக்கவும், கப்பல்களில் அவர்களை கடத்திக் கொண்டுவருவோரை தடுக்கவும் சீ-49 எனும் புதிய சட்டத்தை பழமை தழுவும் கட்சி கடந்த வருடத்தில் தயாரித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முற்பட்ட வேளையில் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பினால் இது கிடப்பில் போடப்பட்டது. தாம் மீண்டும் ஆட்சியேறினால் நிச்சயம் சீ-49-னை சட்டமாக்கப் போவதாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள் பழமை தழுவும் கட்சியினர். இது சட்டமானால், கனடாவுக்கு குடியேற எண்ணுபவர்கள் தமது கனவை மறந்துவிட வேண்டும்.
தமிழ் மக்களைக் குற்றவாளிகளாக கனேடிய மக்களுக்கு காண்பிக்க எத்தனிக்கும் பழமை தழுவம் கட்சியினால் பல இடையூறுகள் கனேடிய தமிழர்களுக்கு வரக்காத்திருக்கிறது என்று கூறுகிறார்கள் கனேடிய தமிழ் ஆய்வாளர்கள். இத்தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரத்தியேகமாக பழமை தழுவும் கட்சியினால் தயாரிக்கப்பட்டு, பிற கனேடிய மக்களிற்கு காண்பித்து ஆதரவை பெறுவதற்காக விளம்பர வீடியோ ஒன்று கனேடிய தமிழர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலத்தில் கனடாவிற்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்திருந்த, சன் சீ என்கிற கப்பல் விவகாரத்தை மையப்படுத்தி இவ்வீடியோ வடிவமைக்கப்பட்டிருந்தது. சன் சீ கப்பல் மூலம் சிறிலங்காவிலிருந்து அகதிகளாக கனடா நோக்கி வந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு கனடாவில் புகழிடம் கொடுப்பது தொடர்பில் எழுந்துவந்த சர்ச்சையினை மையப்படுத்தி, இதற்குக் காரணம் இவ்வாறான கப்பல்கள்தான் என சன் சீ கப்பல் குறித்து வீடியோவில் கூறப்பட்டிருக்கிறது. கனடாவிற்கு சன் சீ கப்பல் மூலம் வந்திருந்த ஈழத் தமிழ் அகதிகளை குறித்த விளம்பரம் குற்றவாளிகளாகக் காட்டுகிறது. உடனடியாக இவ்விளம்பரம் அகற்றப்படவேண்டும். கனேடிய பிரதமர் இந்த விளம்பரத்திற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கனடிய தமிழ் தேசிய மக்களவை பாரிய நிர்ப்பந்தம் ஒன்றை கொடுத்திருந்தது.
மேலும், இவ்விளம்பரம் இனவாதத்தைக் கொண்டது. பிரதமர் ஹார்ப்பர் இந்த விளம்பரத்தை வெளியிட அனுமதித்திருக்கக்கூடாது என தமிழ் தேசிய மக்களவை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தமது விளம்பரத்தை எக்காரணம் கொண்டும் அகற்ற மாட்டோம் என பழமை தழுவும் கட்சி மீண்டும் ஆணித்தரமாக அறிவித்துள்ளது.
பழமை தழுவும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் தமிழர்களின் நலன்களுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய விசாரணைக் குழு தனதறிக்கையை ஏப்ரல் 25-ஆம் நாளன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. பல மேற்கத்தைய நாடுகள் இதனை வரவேற்று அறிக்கை விட்டது. பழமை தழுவும் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் இதனை வரவேற்று அறிக்கை விட்டுள்ளனர். ஆனால், பழமை தழுவும் கட்சியோ இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.
பழமை தழுவும் கட்சியின் பல செயற்பாடுகளை பார்க்கும்போது இக்கட்சி தொடர்ந்தும் தமிழர்களுக்கு விரோதமான செயற்பாடுகளையே செய்யும் போலுள்ளது. இதனை உணர்ந்தாவது, இத்தேர்தலில் வாக்களிக்காமல் இருந்துவிடாது, தமிழர்களின் நலன்களுக்கு ஆதரவாக செயற்படும் கட்சிகளுக்கு ஒவ்வொரு தமிழரும் வாக்குகளை அளித்து தார்மீக ஜனநாயகக் கடமையைச் செய்வோமாக.
அனலை நிதிஸ் ச. குமாரன்

முதுகெலும்புள்ள ஈழத் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்இது யூரியுபினால் நீக்கப்பட்டதனால் வேறு தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கின்றோம்conservative Read More »

Comments