எரிக் சோல்ஹேம் – இன் பேட்டிக்கு எதிர்வுகளை முன்வைத்த புலம்பெயர் தமிழர்கள் இதனால் தாங்கள் வியப்பெய்தவில்லை என்றும், பான் கி மூன், விஜய் நம்பியார், ரொபெர்ட் பிளேக், சிவ சங்கர் ஆகியோர் இதுவரை நடந்தவற்றின் பங்குதாரராக இருப்பதும், விடயங்களை கையாள்வதுமாக இருப்பதில் வியப்புக்கு ஒன்றுமில்லை என்றும் கருத்து தெரிவித்தனர்.
மேலும் புலம்பெயர் வட்டாரங்கள் பிரித்தாணிய அயல்துறை அலுவலகம் புதனன்று ஒரு சர்வதேச விசாரணை வேண்டுமென்று கூறியிருப்பதும் தெளிவற்றது, அத்தகைய தலையீடற்ற விசாரணை யாரால் நடத்தப்பட வேண்டுமென்று கூறாமலேயே சொல்லப்பட்டிருக்கிறதென்றனர்.
எரிக் சோல்ஹேம் என்.ஆர்.கே.யின் செய்தியாளரிடம் பேசுகையில் தற்போது வெளியாகியிருக்கும் அறிக்கை மிகவும் வலிமையானது, இந்த அறிக்கையை இன்னமும் நான் படிக்கவே இல்லை என்று சொன்னார். ஐ.நா. பொதுச்செயலாளர் சிறீலங்கா அரசை விசாரணை தொடங்கும்படி அழைப்பு விடுத்திருப்பதை சுட்டிக்காட்டியிருப்பதை குறிப்பிட்ட எரிக் சோல்ஹேம் இதில் பல தெளிவற்ற தன்மைகள் இருக்கின்றன என்றார். புலிகளும் இணையான போர்க்குற்றங்களை புரிந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் பெரும்பாலும் இன்று இல்லை. இதனால் இந்த அறிக்கை ஒரு தலைப்பட்சமானது என்றார். எனவே சிறீலங்காவே இதனைக் கையாள வேண்டுமென்று உலகம் விரும்புகிறது. அப்படி அரசு ஏதும் செய்யா விட்டால் மாற்று குறித்து நாம் சிந்திக்க வேண்டுமென்றார் எரிக் சோல்ஹேம். உண்மையில் என்ன நடக்கும் என்று செய்தியாளர் கேட்டதற்கு அவர் சிறீலங்கா அரசு இதனை விசாரிக்க வேண்டுமென்றார்.
அது எவ்வளவு நம்பகத்தன்மை உடையதாக இருக்கும் என்று கேட்டதற்கு, அது விசாரணைக்குழுவைப் பொறுத்ததும், அதன் தீர்ப்பு எப்படி அமையப்போகிறது என்பதைப் பொறுத்தும் அமையும் என்றார். அப்படி அரசு ஏதும் செய்யா விட்டால் நாம் அதன்பிறகு என்ன செய்ய வேண்டுமென்று சிந்திக்க வேண்டுமென்றார்.
மேலும் எரிக் சோல்ஹேம் நாங்கள் மையப்பங்கு ஏதும் ஆற்றாமலே எங்களையும் இதில் ஒரு தரப்பாகச் சேர்த்திருக்கின்றனர். தொடர்ந்து அவர், நடேசனும் புலித்தேவனும் மே 17-ம் தேதியன்று தன்னைத் தொடர்பு கொண்டதாகவும், சரணடைய விரும்புவதாகவும் சொன்னார்கள், ஆனால் ஐந்து மாதம் அவகாசம் தந்தும் அவர்கள் சரணடைய வில்லை என்று அவர்களுக்கு பதில் கொடுத்தாராம். இப்போது காலம் ரொம்பவும் தாமதமாகி விட்டது என்றும் அவர்களிடம் கூறினாராம்.
பின்னர் ஒரு வெள்ளைத் துணியை அசைத்தபடி, ஒலிபெருக்கியால் சரணடைவதைக் கூறியபடியே செல்லும் படி அவர்களிடம் சொன்னாராம். பின்னர் அவரும் செஞ்சிலுவைச் சங்கத்தினரும் சேர்ந்து சிறீலங்காவின் ஆட்ச்சியாளர்களைத் தொடர்பு கொண்டு விடயத்தை சொன்னார்களாம். இப்படி சொன்னால்தான் சரணடைவது சிறந்த பாதுகாப்பான முறையில் அமையும் என்பதற்காக இப்படி சொன்னாராம். ஆனால் மறுநாள் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்ட செய்தி அவருக்கு வந்ததாம். அவர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்று அவருக்குத் தெரியாதாம். .
மனித உரிமைக் கண்காணிப்பகம் ஐ.நா. பொதுச்செயலாளர் சிறீலங்காவின் மீது போதிய அழுத்தம் தராததை விமரிசித்திருப்பதைப் பற்றிச் சொன்ன எரிக் சோல்ஹேம் ஐ.நா. பொதுச்செயலாளரின் நிலைமை கடினமானது. ஒருபக்கம் சீனாவும், ரஷ்யாவும் சிறீலங்காவுக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் அதே வேளை மேற்குலகம் அதற்கெதிராக இருப்பது பொதுச்செயலாளரை இக்கட்டில் விட்டுள்ளது. எனவே சிறீலங்கா தானே ஒரு விசாரணையைத் தொடங்குவதுதான் நல்லது. போர்க்குற்றச்சாட்டுக்களான வேறு சில அரசாங்கங்களும் இதே பாணியில் விசாரணை மேற்கொண்டிருக்கின்றன. எனவே அரசு விசாரணை ஏதும் மேற்கொள்ளா விட்டால் அடுத்து நாம் என்ன செய்ய வேண்டுமென்று யோசிக்கலாம் என்று சொன்னார் எரிக் சோல்ஹேம். மேலும் ஐ.நா. அறிக்கை குறித்து எரிக் சோல்ஹேம் தனது கருத்து எதையும் வெளியிட மறுத்து விட்டார்.
என்.ஆர்.கே. எரிக் சோல்ஹேம்-ஐ மட்டுமின்றி புலம்பெயர் தமிழரான, நார்வேயில் செய்தித்தாள் நடத்தி வரும் மனோரன் விவேகானந்தனையும் பேட்டி கண்டது. விவேகானந்தன் எரிக் சோல்ஹேம் –ன் கருத்துக்களும் ஐ.நா. அறிக்கை குறித்து அவர் மவுனம் சாதிப்பதும் கோழைத்தனமானது எனக்கூறியிருக்கிறார். எரிக் சோல்ஹேம் ஐந்து மாதங்களாக சரணடைவதைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார் என்றால், அவர் ஏன் ஒரு மூன்றாம் தரப்பை அதற்காக ஏற்பாடு செய்ய வில்லை என்று வினவியிருக்கிறார் விவேகானந்தன். தனது ஐந்து மாத புலம்பலை எரிக் சோல்ஹேம் ஏன் வெளிப்படையாகச் சொல்ல வில்லை என்றும் கேள்வி தொடுத்தார் விவேகானந்தன். புலம்பெயர்த் தமிழர்கள் பல்லாயிரம் பேர் பலமாதங்களாக வீதியில் இறங்கி போரை நிறுத்தக்கோரியபோதெல்லாம் இவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று நார்வேயைச் சேர்ந்த ஈழத்தமிழர்கள் கேட்டனர்.
மேலும் எரிக் சோல்ஹேம் –ன் தோல்வியடைந்த அமைதி முயற்ச்சிகள் குறித்து நார்வே அரசு ஒரு ஆய்வு அறிக்கையை தயாரித்திருந்தும் இன்னமும் அவ்வறிக்கையை ஏன் வெளியிட வில்லை என்றும் ஈழத்தமிழர்கள் கேட்டனர். அது மட்டுமின்றி எரிக் சோல்ஹேம் தற்போது வெளியிடும் கருத்துக்கள் அவருடையச் சொந்தக் கருத்துக்களா, இல்லை நார்வே அரசின் கருத்துக்களா என்பதை நார்வே அரசு தெளிவாக்க வேண்டுமென்றும் கேட்டனர் அவர்கள்.
‘Solheim transforms from peace facilitator to facilitator of war crimes indictment escape’
மூலம்: www.tamilnet.com
நிலவரசு கண்ணன்
Comments