"நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் தமிழர் தரப்பின் அலட்சியமும்"...............?


".................................................நிபுணர் குழுவின் அறிக்கையை சிறிலங்காவுக்கு எதிரான பொறியாக மாற்றுவதில் தமிழர் தரப்பினால் எந்தளவுக்கு வெற்றி பெற முடியும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனென்றால், இந்த அறிக்கையை தோற்கடிப்பதற்காக சிங்கள அரசு இராஜதந்திர ரீதியாக செய்யும் வேலைகளில் ஒரு சிறு பங்கேனும் தமிழர் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படவில்லை. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்பதைவிட சிங்களத் தேசிய வாதப் பரப்புரைக்கும் நலன்களுக்குமே அது முக்கியத்துவம் கொடுக்கிறது. ஐலன்ட்டில் வெளியான அறிக்கையின் ஒரு பகுதியை வைத்துக் கொண்டு தான், மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் சிங்களவர்களை உசுப்பி விட்டுள்ளது.எதிர்ப்புப் பேரணிகளை நடத்தப் போகிறது.கையெழுத்து வேட்டைகளை தொடங்கியுள்ளது. கூட்டங்களையும் சந்திப்புகளையும் நடத்தி ஆதரவு தேடுகிறது. ஆனால் தமிழர் தரப்பில் இருந்து இந்த அறிக்கை பற்றி என்ன அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று குரல் கொடுக்கப்படுகிறதேயன்றி, அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அழுத்தமாகக் கூறவில்லை. ஐ.நாவையும், பான் கீ மூனையும் செயலற்ற நிலைக்குள் தள்ள சிங்கள அரசு முனைகிறது. அந்த முயற்சிகளில் சில முன்னேற்றங்களும் தென்படுகின்றன. இங்கே ஐ.நாவும்,பான் கீ மூனும் முடக்கப்படும் நிலை ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்படப் போவது என்னவோ தமிழர்கள் தான். தமிழர்களின் இனப்படுகொலைகள் இத்தகையதொரு கட்டம் வரை வந்திருப்பது பெரியதொரு விடயம் தான். இதுபோன்று தமிழர்கள் படுகொலைகள் முன்னெப்போதும் உலகின் கவனத்தை ஈர்த்ததில்லை. இந்த சாதகமான நிலையை நழுவ விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த விவகாரத்தை அனைத்துலக நலன்களுக்கு பலிக்கடாவாக்குவதற்கு சிங்கள அரசு முனைகிறது. பான் கீ மூனின் தனிப்பட்ட நலன்களுக்கும் கூட இது பலியாக்கப்படலாம். இப்படி பல்வேறு நெருக்குவாரங்கள் உள்ள நிலையில் சிங்கள அரசின் எல்லாவிதமான முயற்சிகளையும் தோற்கடித்தே தமிழர்களால் நீதிப் பெற முடியும். அதற்கு உலகளாவிய போராட்டங்களை முன்னெடுக்க தமிழர் தரப்பு முன்வர வேண்டும். அது சிங்கள அரசின் எதிர்ப்பை வலுவிழக்கச் செய்யும் வகையிலானதாக மட்டுமன்றி - தமிழர் தரப்புக்கு நீதியை நிலை நாட்டுவதற்கானதாகவும் இருக்க வேண்டும்........................................."

 இந்த விவகாரத்தை அனைத்துலக நலன்களுக்கு பலிக்கடாவாக்குவதற்கு சிங்கள அரசு முனைகிறது. பான் கீ மூனின் தனிப்பட்ட நலன்களுக்கும் கூட இது பலியாக்கப்படலாம். இப்படி பல்வேறு நெருக்குவாரங்கள் உள்ள நிலையில் சிங்கள அரசின் எல்லாவிதமான முயற்சிகளையும் தோற்கடித்தே தமிழர்களால் நீதிப் பெற முடியும். அதற்கு உலகளாவிய போராட்டங்களை முன்னெடுக்க தமிழர் தரப்பு முன்வர வேண்டும். அது சிங்கள அரசின் எதிர்ப்பை வலுவிழக்கச் செய்யும் வகையிலானதாக மட்டுமன்றி - தமிழர் தரப்புக்கு நீதியை நிலை நாட்டுவதற்கானதாகவும் இருக்க வேண்டும்.........................................


“கேளுங்கள் தரப்படும் - தட்டுங்கள் திறக்கப்படும்- தேடுங்கள் கிடைக்கும்“ – இயேசு கிறிஸ்து

- இன்போ தமிழ் குழுமம் -

இனி,


ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர் குழு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதை உறுதி செய்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீது ஆறு குற்றச்சாட்டுகளையும், சிறிலங்கா அரசு மீது ஐந்து குற்றச்சாட்டுகளையும் சுமத்தியுள்ள நிபுணர்குழு, இதுதொடர்பாக விசாரிக்க சுதந்திரமான அனைத்துலக பொறிமுறை ஒன்றையும் உருவாக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலருக்கு பரிந்துரை செய்துள்ளது. நிபுணர்கள் குழு அமைக்கப்பட்ட போது அதற்கெதிராக விமல் வீரவன்சவைக் களமிறக்கி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி ஐ.நாவுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம், இப்போது அதைவிட கடும் எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்துள்ளது.

மே தினத்தன்று பாரிய பேரணிகளை நடத்தப் போகிறது. பத்து இலட்சம் கையெழுத்துகளை திரட்டுகிறது. வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழர்களையும் இதற்கெதிராக வீதிகளில் இறக்கி போராட்டம் செய்ய வைக்கப் போகிறது. இன்னொரு பக்கத்தில், இந்த அறிக்கை பாதுகாப்புச் சபைக்கோ, மனிதஉரிமைகள் பேரவைக்கோ அல்லது பொதுச்சபைக்கோ வந்துவிட மாட்டாதபடியும் நடவடிக்கைகளை சர்வதேச ரீதியாகவும் எடுக்கிறது. அப்படி வந்தால் கூட அதைத் தடுத்து நிறுத்தி கிழித்தெறிவதற்கான முன் முயற்சிகளும் தீவிரமாக நடக்கின்றன.

அணிசேரா நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சிகள் தொடர்கின்றன.

நியுயோர்க்கிலும் சிறிலங்காவிலும் மட்டுமன்றி வேறும் பல பல நாடுகளிலும், நிபுணர்குழுவின் அறிக்கைக்கு எதிராக சதி ஆலோசனைகள் இடம்பெறுகின்றன. இந்த அறிக்கைக்கு இதுவரையில் ரஸயா மட்டும் தான் அதிகாரபூர்வ எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

  • இன்னும் பல முக்கிய நாடுகள் மதில் மேல் பூனையாக உள்ளன.

    இந்தநிலையில், நிபுணர் குழுவின் அறிக்கையை சிறிலங்காவுக்கு எதிரான பொறியாக மாற்றுவதில் தமிழர் தரப்பினால் எந்தளவுக்கு வெற்றி பெற முடியும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    ஏனென்றால், இந்த அறிக்கையை தோற்கடிப்பதற்காக சிங்கள அரசு இராஜதந்திர ரீதியாக செய்யும் வேலைகளில் ஒரு சிறு பங்கேனும் தமிழர் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படவில்லை.

    சிறிலங்கா அரசு அந்த அறிக்கையை பகிரங்கப்ப்படுத்த முன்னரே அதை வெளியே கசிய விட்டு ஒரு நாடகம் ஆடியது.

    ஒருபக்கத்தில் நிபுணர்குழு அறிக்கை வெளியாவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டே, இன்னொரு பக்கத்தில் அதை வெளியிடவும் ஏற்பாடு செய்தது.

    சிறிலங்கா அரசு ஏன் இப்படி நடந்து கொண்டது என்று குழப்பத் தேவையில்லை. இது ஒரு சாதாரணமான விடயம் தான்.

    அறிக்கையை கசிய விட்டதன் மூலமே சிங்கள மக்களையும் அரசியல்வாதிகளையும், கட்சிகளையும் தனக்கு ஆதரவாக சிறிலங்கா அரசால் திருப்ப முடிந்துள்ளது.

    சிங்களப் பேரினவாதப் பூதத்தைத் தட்டியெழுப்பி அதற்கு தீனி போடுவதற்கு இந்த அறிக்கை வெளியாகியாக வேண்டும்.

    அறிக்கையை மூடி வைத்திருந்தால், தமக்குச் சார்பாக சிங்களவர்களை அணி திரட்ட முடியாது என்று சிறிலங்கா அரசுக்கு நன்கு தெரியும்.

    அதனால் தான் பான் கீ மூன் அதை வெளியிட முன்னரே- இந்த அறிக்கையை சிறிலங்கா அரசு கசிய விட்டது.

    சிறிலங்கா அரசு நினைத்திருந்தால், இந்த அறிக்கையை லேக்ஹவுஸ் ஊடகங்களுக்கு இரகசியமாக வழங்கியிருக்கலாம்.

    லேக்ஹவுஸ் ஊடகங்களில் அது வெளியானால், அரசே அதைச் செய்தது என்பது வெளிப்படையாகி விடும்.

    அதனால் தான் ஐலன்ட நாளிதழுக்கு அதை வழங்கியது.

    பல சமயங்களில் அரச்சார்பு லேக் ஹவுஸ் ஊடகங்கள் செய்யாத அரச ஆதரவுப் பிரசாரங்களை ஐலன்ட் செய்து வருகிறது.

    ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்பதைவிட சிங்களத் தேசிய வாதப் பரப்புரைக்கும் நலன்களுக்குமே அது முக்கியத்துவம் கொடுக்கிறது.

    ஐலன்ட் தான் அரச ஊடகம் போலச் செயற்படுவதாகவும் அதுபோல லேக் ஹவுஸ் ஊடகங்களும் செயற்பட வேண்டும் என்றும் அண்மையில் மகிந்த ராஜபக்ஸ கூறியிருந்தார்.

    அந்தளவுக்கு ஐலன்ட் மீது மகிந்தவுக்கு மரியாதை.

    ஐலன்ட்டில் வெளியான அறிக்கையின் ஒரு பகுதியை வைத்துக் கொண்டு தான், மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் சிங்களவர்களை உசுப்பி விட்டுள்ளது.

    எதிர்ப்புப் பேரணிகளை நடத்தப் போகிறது.

    கையெழுத்து வேட்டைகளை தொடங்கியுள்ளது.

    கூட்டங்களையும் சந்திப்புகளையும் நடத்தி ஆதரவு தேடுகிறது.

ஆனால் தமிழர் தரப்பில் இருந்து இந்த அறிக்கை பற்றி என்ன அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று குரல் கொடுக்கப்படுகிறதேயன்றி, அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அழுத்தமாகக் கூறவில்லை. ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு எந்த அரசியல்கட்சியும் வாயையே திறக்கவில்லை.

காரணம் அப்படி வாய் திறந்தால் மகிந்த அரசின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற பயம் தான்.

கனகரத்தினம், கருணா, பாபுசர்மா போன்ற கருங்காலிகளை வைத்து சிங்கள அரசு செய்கின்ற வேலைகளை முறியடிக்கின்ற காரியத்தில் தமிழர்தரப்பு எதையுமே செய்வில்லை.

  • ஐ.நாவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, பாதுகாப்புச் சபை ஊடாக சிறிலங்கா மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கும் வகையிலான எந்த ஒரு போராட்டமும் ஆரம்பிக்கப்படவில்லை.

    மின்னஞ்சல் அனுப்பும் போராட்டங்களை நடத்தலாம்- புலம்பெயர் நாடுகளில் பேரணிகளை நடத்தலாம்- கருத்துக் கணிப்புகளை நடத்தலாம்- கையெழுத்துகளைத் திரட்டலாம்- இப்படிப் பல வழிகள் உள்ளன.

    அதுவும் உலகெலாம் உள்ள தமிழர்கள் பங்கேற்கும் போராட்டங்களை நடத்த பல மார்க்கங்கள் உள்ள போதும் தமிழர் தரப்பில் இருந்து எவரும் அந்த வழிகளில் எதையும் நாடவில்லை.

    சிங்கள அரசு எல்லாவற்றிலும் முந்திக் கொள்வதைப் பார்த்தாவது நாம் பாடம் கற்க வேண்டும்.

    அநீதியை இழைத்தவர்களே இந்த வேகத்தில் செல்லும் போது, அதற்குப் பலியான நாங்கள் அதைவிட வேகத்தில் அல்லவா சென்றிருக்க வேண்டும்.

    முள்ளிவாய்க்காலில் எமது இனத்தின் வேர்களை அறுத்து வீழ்த்திய சிங்களதேசம் இப்போது எமது விழுதுகளைக் கொண்டே எம்மைக் கட்டிப் போடப் பார்க்கிறது.

    குற்றக்கூண்டில் நிற்க வேண்டிய சிங்கள அரசும் அதன் தலைமைகளும், ஐ.நாவைப் பொறியில் சிக்க வைக்கும் இராஜதந்திரத்தைக் கையாளுவதைக் காணமுடிகிறது.

    ஐ.நாவையும், பான் கீ மூனையும் செயலற்ற நிலைக்குள் தள்ள சிங்கள அரசு முனைகிறது. அந்த முயற்சிகளில் சில முன்னேற்றங்களும் தென்படுகின்றன.

    இங்கே ஐ.நாவும்,பான் கீ மூனும் முடக்கப்படும் நிலை ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்படப் போவது என்னவோ தமிழர்கள் தான்.

    நாடுகளுக்கிடையில் சிண்டு முடிந்து விட்டு பகையை வளர்த்து விட்டுக் குளிர் காயவும் பார்க்கிறது சிங்கள அரசு.

    இதன்மூலம் தனது நோக்கத்தை அடைவது தான் அதன் ஒரே குறிக்கோள்.

    சிங்கள அரசின் இராஜதந்திரம் பற்றி குறைத்து மதிப்பிட முடியாது என்பதை அவர்களின் நகர்வுகள் எடுத்துக் கூறுகின்றன.

    இந்தக் கட்டத்தில் தமிழர் தரப்பும் தன்னாலான முயற்சிகளை எடுத்தேயாக வேண்டும்.

    ஏனென்றால் இந்த விவகாரம் தனியே ஐ.நாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பிரச்சினையன்று.

    தமிழர் தரப்பை மையப்படுத்தியே இந்தப் பிரச்சினை உருவானது.

    இந்தநிலையில் தமிழர் தரப்பும் தன்னாலான அழுத்தங்களைக் கொடுத்து, தமக்கு நீதி வழங்க வேண்டும் என்பதை உணர்த்த வேண்டும்.

    தமிழர்களின் இனப்படுகொலைகள் இத்தகையதொரு கட்டம் வரை வந்திருப்பது பெரியதொரு விடயம் தான்.

    இதுபோன்று தமிழர்கள் படுகொலைகள் முன்னெப்போதும் உலகின் கவனத்தை ஈர்த்ததில்லை.

    இந்த சாதகமான நிலையை நழுவ விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    ஏனென்றால் இந்த விவகாரத்தை அனைத்துலக நலன்களுக்கு பலிக்கடாவாக்குவதற்கு சிங்கள அரசு முனைகிறது.

    பான் கீ மூனின் தனிப்பட்ட நலன்களுக்கும் கூட இது பலியாக்கப்படலாம்.

    இப்படி பல்வேறு நெருக்குவாரங்கள் உள்ள நிலையில் சிங்கள அரசின் எல்லாவிதமான முயற்சிகளையும் தோற்கடித்தே தமிழர்களால் நீதிப் பெற முடியும்.

    அதற்கு உலகளாவிய போராட்டங்களை முன்னெடுக்க தமிழர் தரப்பு முன்வர வேண்டும்.

    அது சிங்கள அரசின் எதிர்ப்பை வலுவிழக்கச் செய்யும் வகையிலானதாக மட்டுமன்றி - தமிழர் தரப்புக்கு நீதியை நிலை நாட்டுவதற்கானதாகவும் இருக்க வேண்டும்.

    “கேளுங்கள் தரப்படும் - தட்டுங்கள் திறக்கப்படும்- தேடுங்கள் கிடைக்கும்“ – இயேசு கிறிஸ்து

- கட்டுரையாளர் தொல்காப்பியன் இன்போதமிழ் குழுமம் -
info@infotamil.ch

Comments