பிரென்சு ஊடகங்களின் கவனத்தைப் பெற்ற "சிறிலங்காவை அம்பலப்டுத்துவோம்" கவனயீர்ப்பு பரப்புரை

பிரான்சின் நொர்மொன்டி பிராந்தியத்தின் ஆர்ஜென்தான் பகுதியில் இடம்பெறும் நிகழ்வில் சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா அரசினை அம்பலப்படுத்தும் நோக்கில் பிரென்சு மற்றும் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு பரப்புரை பிரென்சு ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஏப்ரல் 29 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முதலாம் கவனயீர்ப்பு பரப்புரையாக துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்ட்டதோடு உள்ளுர் பிரதிநிதிகளுகளை சந்தித்து சிறிலங்காவின் தமிழன அழிப்பு தொடர்பிலான விளக்கங்கள் கொடுக்கப்பட்டது.

ஏப்ரல் 30 சனிக்கிழமை சிறிலங்கா அரசினால் வர்த்தக கண்காட்சிகள் - கருத்தரங்குகள் - கண்டிய நடன நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் சிறிலங்காவுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற பிரென்சு மற்றும் தமிழ் அமைப்புக்களினால் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

இது குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதி மகிந்தன் தெரிவிக்கையில் சிறிலங்கா அரசின் பரப்புரைகளை முடக்கும் நோக்கில் ஊடகவியலாளர் சந்திப்பு - திரையிடல் - கண்காட்சி மற்றும் பிரென்சு மனிதவுரிமை அமைப்புக்களின் கருத்தரங்கம் ஆகிய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.



இந்த நிகழ்வில் சிறிலங்காவில் இருந்து அமைச்சர்கள் மற்றும் பிரான்சுக்கான சிறிலங்காத் தூதுவர் ஆகியோர் பங்கெடுப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழர்களின் எதிர்பு காரணமாக தற்போது சிறிலங்காவின் இராஜதந்திரகள் மட்டுமே பங்கெடுக்கின்றனர் என உள்ளுர் பிரென்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Comments