இறுதிப் போரின் இரத்தக் கறைகளை அழித்த ஐ.நா நிபுணர்குழு அறிக்கை
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது ஐ.நா ஏற்படுத்திய குருதிக்கறைகளை நிபுணர் குழுவின் அறிக்கை அழித்துவிடாது என த ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. வன்னிப்போரில் 20 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்படலாம் என ஐ.நா அதிகாரிகள் ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாருக்கு தெரிவித்திருந்தனர். எனினும் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த விஜய் நம்பியார் விரும்பவில்லை.
அதற்கான காரணம் விஜய் நம்பியாரின் சகோதரர் சதீஸ் நம்பியார் என்பவரே இலங்கை இராணுவத்திற்கு பணத்திற்காக ஆலோசனைகளை வழங்கி வந்திருந்தார் என த ரைம்ஸ் நாளேட்டின் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் ஒரு அனைத்துலக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய அழுத்தத்தை ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தப்போகின்றது என த டைம்ஸ் நாளேட்டின் பத்தியில் கூறப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஐ.நாவின் அறிக்கை ஆதாரங்களை கொண்டதாக அமைந்துள்ளது. அவற்றில் காணப்படும் ஆதாரங்களில் சில டைம்ஸ் நாளோட்டினால் பிரசுரிக்கப்பட்டவை. இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதல்களினால் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
போரின் இறுதி ஐந்து மாதங்களில் எறிகணைத் தாக்குதல்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக த ரைம்ஸ் நாளேடு முதலில் தெரிவித்திருந்தது. மனித உரிமை அமைப்புக்களும் பல ஆதாரங்களை ஆவணப்படுத்தியுள்ளன. நிபுணர்குழுவின் அறிக்கையில் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மனிதக் கேடயங்களாக மக்களை பயன்படுத்தியமை, சிறார் படைச்சேர்ப்பு போன்ற குற்றங்கள் விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டாலும் இலங்கை அரசின் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை தடுத்தமை போன்றவற்றினால் தான் அதிக மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. போர் நடைபெற்ற வடகிழக்கு பகுதியில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவருகின்றது.
வெளிநாட்டு அவதானிப்பாளர்களும், ஊடகவியலாளர்களும் அங்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மக்களின் மரணங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதை இலங்கை அரசு விரும்பவில்லை. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதற்காக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் மூவர் கொண்ட ஆலோசனைக்குழு ஒன்றை கடந்த வருடம் அமைத்திருந்தார்.
மேற்குலக நாடுகளினதும் மனித உரிமை அமைப்புக்களினதும் அழுத்தங்களை தொடர்ந்தே அவர் அதனை அமைத்தார். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு ஐ.நா வெள்ளைச்சாயம் பூச முற்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். வன்னிப் போரில் 20 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்படலாம் என ஐ.நா அதிகாரிகள், ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியருக்கு தெரிவித்திருந்ததாக ஐ.நா அதிகாரிகள் எமது ஊடகத்திற்கு தெரிவித்துள்ளனர். எனினும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த நம்பியார் விரும்பவில்லை.
அதற்கு காரணம் விஜய் நம்பியாரின் சகோதரர் சரீஸ் நம்பியார் என்பவரே இலங்கை இராணுவத்திற்கு பணத்திற்காக ஆலோசனைகளை வழங்கி வந்திருந்தார். இந்திய இராணுவத்தின் முன்னாள் ஜெனரலாக செயற்பட்டவரே சரீஸ் நம்பியார். நிபுணர்குழு இலங்கைக்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கவில்லை.
எனினும் அவர்கள் புகைப்படங்கள், காணொளிகள், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை பெற்றிருந்தனர். இலங்கை அரசு ஐ.நாவின் அறிக்கையை நிராகரித்துள்ளது. ஆய்வு செய்யப்படாது இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அறிக்கை ஐ.நாவின் மேலதிக நடவடிக்கையை வலியுறுத்தியுள்ளதுடன், இலங்கைக்கும், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளுக்கும் இடையில் மோதல்களையும் உருவாக்கியுள்ளதாக மேற்குலக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழு மூலம் பான் கீ மூன் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். ஆனால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை கொண்டு நிறுத்துவது கடினமானது. ஏனெனில் சீனா போன்ற எதிர்த்தரப்பு நாடுகள் அதற்கு ஆதரவாக உள்ளன. லிபியா மீது நேட்டோ படையினர் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் நிலையில் ஐ.நா தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
லிபியா மீதான தாக்குதலுக்கு முன்னர் கேணல் கடாபியை அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வது தொடர்பில் பாதுகாப்புச்சபை ஆதரவளித்துள்ளது. சரணடைந்த விடுதலைப்புலிகளை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் இராணுவம் படுகொலை செய்ததாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments