வருகின்றது.
முள்ளிவாய்க்கால் வரை ஒன்றாகப் பயணித்த நாம், எமது தேசியம் நோக்கிய ஒற்றைக் கருத்தை எங்கே தொலைத்தோம்? எப்படிச் சிதறவிட்டோம்? என்பதைத் தேடும் முயற்சியில் இப்போதும் தேசிய சிந்தனையாளர்கள் முனைப்புக் காட்டி வருகின்றார்கள். குறிப்பாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் பிளவுகள் உருவாகிவிடக் கூடாது என்ற அக்கறையுடன், லண்டனில் ஊடகவியலாளர்கள் மேற்கொண்ட சமரச முயற்சியினை மேற்கோளாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு ஊடகவியலாளரால் இதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதை மாமனிதர் சிவராம் அவர்கள் தன்னையே அர்ப்பணித்து நிறுவிச் சென்றுள்ளார். ஆயுதம் ஏந்திய தேசிய விடுதலைத் தளத்துடன், சிறிலங்கா அரசுடன் இணைந்து நின்ற ஆயுதக் குழுவின் சில அணிகளையும் சமரசத்திற்குள் கொண்டு வந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உருவாக்கிச் செயல்பட வைத்ததில் மாமனிதர் சிவராம் அவர்கள் வரலாற்று உதாரணமாகத் திகழ்கின்றார். லண்டனிலும், தமிழ்த் தேசியத்திற்கான ஒரு தளமாக அடையாளம் காணப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை நிலை நிறுத்தும் தேசிய கடமையில் ஊடகவியலாளர்கள் முனைந்தும், அது முறியடிக்கப்பட்டு விட்டது இன்னொரு சோகமாகும்.
இந்த ஒற்றுமை முயற்சிக்கும் வெளியில் இருந்து சேறு பூசல்கள் மேற்கொள்ளப்பட்டது. தமிழினத்தின் சாபக்கேடுகளாக நல்லது நடப்பதை விரும்பாத சிலர் நம்முடன் கூடவே பிறந்து விடுகின்றார்கள். அதன் தொடர்ச்சியாகவே, எனது ஆய்வின் ஆரம்பத்திலேயே, இதற்கான எதிர்வினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகத்துறை இணை அமைச்சராக அறியப்படும் திரு. சுதன்ராஜ் அவர்களிடமிருந்து வந்து சேர்ந்துள்ளது. என்னால் எடுக்கப்பட்ட தலைப்பு ஒற்றுமை குறித்ததாக வெளிவர, அவரது எதிர்வினை எப்படியாக வந்துள்ளது என்பதைப் பார்ப்போம்.
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பங்கள் தீர என்ன வழி? »
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் 29பேர் உறுப்புரிமையை இழந்துள்ளார்கள்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பினை ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளாத 29 உறுப்பினர்கள், மார்ச் 26, 2011ல் இருந்து தாமாகவே தமது உறுப்புரிமையை இழந்துள்ளனர்.
அரசவைத் தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் இது தொடர்பில் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு அறியத்தந்துள்ளதோடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்ளக விவகார அமைச்சகத்திற்கும் அறியத் தந்துள்ளார்.
அரசவைத்தலைவர் அறிவித்தலின் பிரகாரம், கீழ்வரும் உறுப்பினர்கள் தங்களது உறுப்புரிமையை இழந்து விட்டார்கள் என்பதனை மக்களுக்குத் அறியத்தருகின்றோம்.
கனடா: திரு. பாலன் இரட்ணராஜா, திரு. ஈசன் தெய்வேந்திரன் குலசேகரம், திரு. மரியாம்பிள்ளை அஞ்சலோ யோகேந்திரன, திரு. சுரேஸானந்த் ரட்ணபாலன், திரு. எஸ். திருச்செல்வம், திருமதி. வனிதா ராஜேந்திரம்.
பிரித்தானியா: திரு. சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, செல்வி. ஜெயவாணி அச்சுதன், திரு. கார்த்திகேசன் பரமசிவம், திரு. மகேஸ்வரன் சசிதர், திருமதி. வாசுகி சோமஸ்கந்தா
ஜெர்மனி: திருமதி. வித்தியா ஜெயசங்கர், திரு. சந்திரபாலா கணேசரட்ணம், திரு. முகுந்தன் இந்திரலிங்கம், திரு. நடராஜா திருச்செல்வம், திரு. இராசையா தனபாலசுந்தரம், திரு. ரேணுகா லோகேஸ்வரன், திரு. பரமு ஆனந்தசிங்கம்.
பிரான்சு: திரு. சரவணமுத்து சசிகுமார், திரு. சிவகுரு பாலச்சந்திரன், திரு. தர்மேந்திரன் கிரிசாந்
நோர்வே: திருமதி. ஜெயசிறி பாலசுப்பிரமணியம், திரு. சிவானந்தன் முரளி, திரு. சிவகணேசன் தில்லையம்பலம்,
டென்மார்க்: திரு. பொன்னம்பலம் மகேஸ்வரன், திரு. ரேமன் ராஜீவ், திருமதி. சுகேந்தினி நிர்மலநாதன்
அவுஸ்ரெலியா: திரு. சிறீபாலன் சேரன்
இத்தாலி: திரு. மயில்வாகனம் பாஸ்கரநாராயணன்
மேற்குறிப்பிட்ட உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் எனும் தகுதியுடன் எந்தவொரு செயற்பாடுகளிலும், மற்றும் பிரதிநிதித்துவப்படுத்துதலும் அற்றவர்கள் என்பதை இத்தால் மக்களுக்கு அறியத்தருகின்றோம்.
என்று வந்துள்ளது.
இதுதான் எங்கள் மத்தியிலுள்ள எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாக உள்ளது. சிவகுருநாதன் சுதர்சன் (சுதன்ராஜ்) என்ற மனிதருக்கு யார் மக்கள் பிரதிநிதி என்ற தகுதியை வழங்கினார்களோ, அவாகளே, இவர்களால் வெளியெற்றப்பட்டதாக அறிவிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அந்தத் தகுதியை வழங்கியுள்ளார்கள். அதனை, மீளப் பெறும் அதிகாரம் அவர்களைத் தெரிவு செய்த மக்களுக்கு மட்டுமே உள்ளது. இதில், ஏதோ ஒரு பிரதேசத்தில், அங்கு வாழும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட யாரோ ஒரு பிரதிநிதிக்கு யார் இந்த அதிகாரங்களை வழங்கினார்கள் என்பது புரியப்படாமலேயே உள்ளது.
நாடு கடந்த அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யாப்பிலும் அதனை அங்கீகரிக்கும் ஒரு வாசகம் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆயினும், விடயம் இது குறித்ததாக இல்லாததால் இத்துடன் அதனை விட்டுவிடலாம். திரு. சுதன்ராஜ் அவர்களைப் போலவே, தமிழ்த் தேசியம் என்ற புள்ளியில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுபட்டு விடக் கூடாது என்று முனைப்பாகச் செயற்படும் இன்னொரு முக்கிய நபரையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துவது அவசியமாக உள்ளது.
ஜெயபாலன் அழகரட்ணம் என்ற இந்த மனிதர், கே.பி. அவர்களது மருமகன் என அறியப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட பிளவு நிலைகளுக்கும், இன்று வரையான தேசியச் சிதைவு நிலைக்கும் முக்கிய காரணகர்த்தாக்களில் ஒருவராக இவர் நோக்கப்படுகின்றார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற எண்ணக் கருவை கே.பி. அவர்கள் அறிமுகப்படுத்தியதிலிருந்து, இவரே அதற்கான எல்லாமாக இயங்கி வருகின்றார். இவரது கருத்துக்களும், எழுத்துக்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கள நிலையில் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்து வருகின்ற போதும், அதனைத் தடுத்து நிறுத்தி, கருத்து ஒன்றுபடுத்தலுக்கான எந்த முயற்சியும் திரு. ருத்திரகுமாரன் அவர்களால் எடுக்க முடியவில்லை என்பதையும் வேதனையுடன் நினைவு கூருகின்றோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்விலிருந்து வெளிநடப்பு செய்த கனடிய உறுப்பினர்கள் குறித்து மிக மோசமான பரப்புரைச் சுவரொட்டிகள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை வெளியிட்டு தமிழ்த் தேசிய கருத்துச் சிதைவை ஏற்படுத்தி வருகின்றார். தற்போது, பலரது எதிர்ப்புக் காரணமாக அந்தப் பத்திரிகை ‘தமிழரசு’ என்ற பெயரில் வெளியிட்டுத் தன் பணியைத் தொடர்கின்றார்.
இதை எல்லாம் எழுதுவது எனது நோக்கம் இல்லை என்றாலும், எமக்கிடையே உருவான பிளவுகளுக்கும், அது நேர் செய்ய முடியாமல் தொடர்வதற்குரிய காரணங்களை அறிந்து கொள்ளாமல், தேசிய விடுதலை நோக்கிய பயணத்தின் தடைக் கற்களை அகற்றாமல் எமது இலக்கு நோக்கிச் செல்வது முடியாத காரியமாகவே இருக்கும். இங்கே, அகற்றுவது என்பது அவர்களது மனங்களிலுள்ள வக்கிரங்களை அகற்றுவதாகவே முதன்மை அர்த்தம் கொள்ளப்படுகின்றது.
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஒற்றுமைக்கான முயற்சிகள் பல தளங்களிலும் எடுக்கப்பட்டு வரும் இன்றைய காலத்தில், இறுதியாக திரு. ஜெயபாலன் அழகரட்ணம் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட மின் அஞ்சல் ஒன்றை உங்கள் கவனத்திற்கத் தருகின்றேன்.
--------------------------------------------------
தமிழ் தேசியத்தையும் நாடு கடந்த தமிழீழ அரசையும் உடைப்பதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை சதி…( யா)..?
நாடு கடந்த தமிழீழ அரசை உடைப்பதற்காக விடுதலை புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக கூறி மக்களை ஏமாற்றியும் மாயைக்குள்ளும் வைத்திருந்தவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசு வலுப்பெற்று வருவதை தடுக்க முடியாததால் , இன்று நாடு கடந்த தமிழீழ அரசு வலு பெற்று வரும் நிலையில் 3 ஆம் தரப்புக்கள் ஊடாக தமிழீழ தேசிய தலைவர் உயிருடன் இல்லை என்ற செய்தியை மெல்ல மெல்ல கசிய விடத் தொடங்கியுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசை முற்றாக வீ ழ்த்துவதற்கான இவர்களது முக்கோண திட்டம்.
முதற் கட்டம் : தலைவர் பற்றி கடந்த 2 வருட காலமும் தாம் மறைத்து வைத்த உண்மையை மெதுவாக மக்கள் மத்தியில் கொண்டு வருவது.
இரண்டாம் கட்டம் : இந்திய அரசுடன் ஒரு நட்புறவிணை வளர்த்து கொள்வது , இதன் முதற்படியாகத்தான் இக் கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ள பிரித்தாநியாவை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் பேரவை கடந்த வாரம் சோனியாவை எதிற்பது போல பாவனை செய்து பின்புற வாசல் முலம் சோனியா அரசுடன் இரகசிய உறவுகளை ஏற்படுத்த முற்படுத்துகின்றது. இதன் தொடர்ச்சியாகவெ இந்த அமைப்பின் பிரமுகர்கள் அமேரிக்கா சென்று Robert blake ஐ சந்தித்தனர் .
மூன்றாம் கட்டம் : மூன்றாம் கட்டமாக அமேரிக்காவின் உதவியுடன் இந்தியவின் துணையோடு ராஜபக்ச அரசுடன் உறவுகளை ஏற்படுத்தி தமிழர்களின் பிரச்சிநைகளுக்கு தீர்வு காண முயல்கின்றோம் என்ற போர்வையில் தாம் பதுக்கி வைத்துள்ள பொதுமகளின் சொத்துகளை இலங்கை அரசிற்கு தாரை வார்ப்பதுடன் புலம் பெயர் தமிழரின் ஜனநாயக கட்டமைப்பான நாடு கடந்த தமிழீழ அரசையும் சிதைத்து, புலம் பெயர் தமிழர்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசிற்கும் இடையில் முறுகல் நிலயை
தோற்றுவித்து அதன் மூலம் இன்று நலிந்து போயிருக்கும் தாயகத்து மக்கள் மேல் தினிக்கபடுகின்ற அரைகுறை தீர்விணை அம்மக்கள் ஏற்றுக்கோள்ள செய்வதாகும் .
இவ்வாறு கசிந்துள்ள இந்த செய்தியில் முக்கியமாக நாம் கவநிக்கப்பட வேண்டியுள்ள விடயம் , தனக்கு எதிராக போர்குற்றங்களை சுமத்த வேண்டும் என்று எந்த ஒரு சக்தியும் அழுத்தம் கோடுக்காது பார்த்து கொள்ள வேண்டும் என்று ராஜபக்ச சகோதரர்கள் நினைத்திருப்பதுதான் .
இந்த இலக்கினை அடைவதற்காக அவர்கள் பயன்படுத்துகின்ற முலோபாயமெ புலம் பெயர் தமிழர்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசிற்கும் இடையில் அதே வேளை நாடு கடந்த தமிழீழ அரசிற்கும் ஏணைய புலம் பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும் இடையில் பிரிவிணையையும், முறுகல் நிலையிணையையும் ஏற்படுத்துவது.
இந்த கூட்டுச்சதியை நிறைவேற்றுவதற்காக பிரித்தானியாவில் வசிக்கும் கோத்தபாயாவுடன் கல்வி பயின்ற தமிழர்கள் சிலரை பயன்படுத்தி அவர்கள் மூலமே
முக்கிய பிரித்தானிய அமைப்புக்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாதவர்கள் கூறியதாக பிரித்தானிய செய்தியாளர் தெரி வித்தார்.
நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயர் அறிவிக்கப்பட்ட முதல் நாள் முதல் இன்று வரையில் நாடு கடந்த தமிழீழ அரசை எதிர்க்கும் அனைத்து சக்திகளினதும்
இடையூறுகளை மிகவும் சிரமத்துடன் தாண்டி வந்துள்ளது எனவும் இவ்வாறு இடையூறுகள் மேலும் மேலும் தொடரும்மாயின் இது நாடு கடந்த தமிழீழ அரசின் நிலைக்கு மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்க அரம்பித்து உள்ளனர்.
ஆனால் தற்போதய நிலையில் மக்கள் இந்த ஜனநாயக கட்டமைப்பான நாடு கடந்த தமிழீழ அரசை தாம் ஏற்றுக்கொண்டுள்ளதால் மக்களே மாற்று சதி அமைப்புக்களை விட்டு விலகுவார்கள். விட்டு விலகுவது மட்டுமல்லாமல் தாமும் இந்த ஜனநாயக கட்டமைப்பான நாடு கடந்த தமிழீழ அரசுடன் தம்மையும் இனைத்துக்கொள்வார்கள். மக்கள் இனியும் முன்னைய காலம் போல அமைதியாக இருக்க மாட்டார்கள். மக்கள் கட்டமைப்பான இந்த நாடு கடந்த தமிழீழ அரசு என்ன செய்கின்றது என அவர்கள் விநாவிக் கொண்டு இருப்பார்கள். இந்த காலகட்டம் ஒரு பயங்கரமான ஒரு கால கட்டம் மக்கள் விளிப்பாக இருக்க வேண்டிய ஒரு கால கட்டம் இது.
விளிப்பாக இருப்போம் துஸ்டர்களை விரட்டுவோம்.
ஜெயபாலன் அழகரத்தினம்.
------------------------------------
இது திரு. ஜெயபாலன் அழகரத்தினம் அவர்களால் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்ட மின் அஞ்சல்.
இதில் எத்தனை குரூரமான தமிழ்த் தேசியக் கருத்துக்களும், பிளவு வாதங்களும் முன்வைக்கப்பட்டுள்ளது என்பதை புலம்பெயர் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய மோசமான கருத்துக்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இதுவரை தடுத்து நிறுத்த முடியவில்லை அல்லது விரும்பவில்லை என்பதும் இடைவெளியக் அதிகரிப்பதற்குக் காரணமாக இருப்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மிகுதி நாளை…
சி. பாலச்சந்திரன்
அரசவை உறுப்பினர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
பாரிஸ் – பிரான்ஸ்
Comments