பிரித்தானியாவில் நடைபெற்ற ‘நடுகல்’ வணக்க நிகழ்வுகள் மண்டபத்தினுள்ளே அடாவடித்தனம்

நேற்று பிரித்தானியாவில் குறேய்டன், லெய்ஸ்ரர், கொவன்றி ஆகிய மூன்று இடங்களில் ‘நடுகல்’ வணக்க நிகழ்வு எழுச்சியுடன் நடைபெற்றது.

இந்நிகழ்வுகள் யாவும் ஓரிரு நாட்களில் ஒழுங்கு செய்து அந்த புனிதர்களின் நினைவிவை மக்கள் தமது வணக்கத்தின் மூலம் மரியாதை செலுத்தினர். இறப்புகளாலோ இழப்புகளாலே எம்மினத்தைப் பணியவைக்க முடியாது என்பதை மனதில் நிறுத்தி மக்கள் தம் புனிதர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

இந் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கையில் கொவன்றி என்ற இடத்தில் அந்த மண்டபத்திற்கு வந்தவர்கள் நீண்ட காலமாக இப்பணிகளை சிறப்பாக செய்து வரும் செயற்பாட்டாளர்களை நோக்கி நீங்கள் இதைச் செய்யமுடியாது எனவும் உங்களை இதற்கு தாங்கள் அனுமதிக்கமாட்டோம் எனவும் அந்தப் புனிதர்களுக்கு வணக்கம் செலுத்தும் மண்டபத்தினுள்ளே அடாவடித்தனம் செய்தனர்.

அப்போது அங்கிருந்த செயற்பாட்டாளர்கள் தாங்கள் மக்கள் புனிதர்களை நினைவு கூறுகிறோம் என்று கூற, மரியாதை அற்ற வர்தைகளால் உரத்த குரலில் வன்முறைக்குப் போகுமளவிற்கு முற்பட்டனர். நிலைமை மோசமடையும் நிலைகண்டு நிகழ்வைப் பாதியிலேயே இடைநிறுத்தும் துர்ப்பாக்கிய நிலைக்கு செயற்பாட்டாளர்கள் தள்ளப்பட்டு, மக்களும் செயற்பாட்டாளர்களும் மண்டபத்தைவிட்டு வேதனையுடன் சென்றது குறிப்பிடத்தக்கது.

இப்படியொரு வணக்க நிகழ்வையே மரியாதை செய்யமுடியாதவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை மக்கள் கண்டறியவேண்டிய காலகட்டம் இது. இலங்கை அரசு உலகத்தின் உதவியுடனும் அசுர பலத்துடனும் சில எம்மவர்களின் துரோகத்துடனும் மண்ணில் ஒரு மே 18 செய்து வெற்றிகண்டது. அதனைத்தொடர்ந்து புலம்பெயர் மண்ணில் எரியும்; இந்த விடுதலைத் தீயை அணைக்க மாபெரும் முயற்சியை எடுத்துவருவது அனைவரும் அறிந்த விடயம்.

கடந்த காலங்களில் செயற்பாட்டாளர்களைக் குறிவைத்திருப்பதும் அதன் ஒருகட்டமாக செயற்பாட்டாளர் தனம் தாக்கப்பட்டதும் தொடர்ந்தும் செயற்பாட்டாளர்கள் வெருட்டப்படுவதுமாய் தொடரும் நிலை தொடர்கிறது முக்கிய விடயமாக வந்தவர்கள் தங்களை ******************* இருந்தே வருவதாகக் கூறிக்கொண்டனர். ஆனால் மக்கள் இவர்கள் செயல் கண்டு அதை ஏற்றுக் கொள்ளாத நிலையே காணப்பட்டது.

புலம்பெயர்ந்த மக்களை குழப்பும் நோக்குடன் சிறீலங்கா செயற்படும் இக்காலகட்டத்தில் அவர்களுக்கு துணையாக கைக்கூலிகளை சிறீலங்கா வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments