திறமையான எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்தல், ஊக்குவித்தல், பரிமாறுதல், பரப்புதல் நோக்கங்களை கொண்டதாக இக்கண்காட்சி அமைய இருக்கிறது.
இக்கண்காட்சியில் வரலாற்றில் முதல்தடவையாக தமிழ் நூல் ஒன்றும் அறிமுகம் செய்து வைக்கப்படுவதுடன் விற்பனைக்கு வைப்பதற்கும் சர்வதேச புத்தக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.
ஓவியர் புகழேந்தி எழுதிய தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும் என்ற புத்தகம் ஆங்கிலம் பிரென்சு, ஜேர்மனி ஆகிய மொழிகளில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜெனிவா சிவா எடிசன் நிறுவனம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.
Palexpo – Geneva பலெக்போ ஜெனிவா சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழ் புத்தகம் ஒன்றின் மொழிபெயர்ப்பு அதுவும் ஈழத்தமிழர்கள் தொடர்பான புத்தகம் ஒன்று காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்படுவது இதுவே முதற்தடவையாகும். இப்புத்தகம் தொடர்பான கருத்துப்பகிர்வுகளும் இடம்பெற உள்ளன. மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள இணைப்பை பார்வையிடலாம்.
Comments