கேபியின் மருமகள் ஜெயமதி சிவசோதியின் துக்கநாள் பிரகடணம்

கேபியின் மருமகள் , சகோதரன் ஜெயபாலன் அழகரட்ணம் , உருத்திரகுமார் வழிகாட்டலில் அவரைப் போலவே மக்களால் தெரிவு செய்யப்படாமல் கனடாவில் பின் கதவால் வந்த ஜெயமதி சிவசோதி அவர்களால் போர்க்குற்றநாள் துக்கநாளாக மாற்றப்பட்டிருக்கின்றது
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8kERTVSHpQFjDukJ9tQsoGcMC0vOeTsN7J6nQCMF9bMl1Aq8akYQTF9s_sB_8LXCmGnPyiFUq9vZRfTd-f3WyEJ8mPJ26S2c4Uka5lTCb0xPFZCw0QUctUByI8G70h2tvZbgDIOZF4-Q2/s1600/210410+005.jpg


" நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான திருமதி ஜெயமதி சிவசோதி அவர்களால் தனிநபர் மசோதாவாகப் பேரவையின்முன் வைக்கப்பட்ட இம் முன்மொழிவு அவை உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு சில மாற்றங்களின்பின் இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு பேரவை உறுப்பினர்கள் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது"
விசுவநாதன் ருத்ரகுமாரன்
http://www.tamilthai.com/wp-content/uploads/2011/04/may_18.jpg



யார் இந்த
ஜெயபாலன் அழகரட்ணம்

Jeyabalan Alagaratnam


முன்பு நாடு கடந்த தமிழீழ அரசு என்னும் பத்திரிக்கை நடாத்தி பின்னர்


தமிழரசு என்று பெயர் சுருக்கி இப்போது இணையத்திலும் நா.க. அரசுக்கும் கேபிக்கும் ஆதரவாகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வருகின்றார்
மே 18இல் வரும் போர்க்குற்ற நாள் கடந்தாண்டிலும் பார்க்க மேலும் எழுச்சியாக இம்முறை அமையவுள்ளது. இதற்கு ஏதுவாக, ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை மேலும் பலம் சேர்த்துள்ளது.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் போர்க்குற்ற சாட்சியங்கள் நிறைய உள்ளன. தமிழீழப் பிரகடனத்திற்குத் தேவையான காலமும் நேரமும் உருவாகி உள்ளதாக இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி அமெரிக்க சட்டவல்லுனர் பேராசிரியர் பொய்ல் கருத்து வெளியிட்டுள்ளார்.

சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் ஆணையம், அனைத்துலக நெருக்கடிக் குழு என்பன போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றன.

சர்வதேசமே சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு ஒருமுகப்பட்டு வருகின்ற வேளையில், ‘போர்க்குற்ற நாள்’ என்பதை இல்லாமல் செய்து அதனைத் துக்க நாளாக நா.க.த.அ. ருத்திரகுமாரன் அணி அறிவித்திருப்பதன் உள்நோக்கம் என்ன?

-ஜனநாயகஅணி-

போர்க்குற்ற விசாரணை என்று ஜநா மும்மரமாயிருக்க நாடு கடந்த அரசோ அந்தச் சொல்லையே அகற்றி விட்டிருக்கின்றது

கேபியின் மருமகள் ஜெயமதி சிவசோதி என்னும் தனிநபர் மசோதாவாகப் பேரவையின்முன் வைக்கப்பட்ட இம் முன்மொழிவு தான் மேலும் சந்தேகத்தை வலுப்பெறச் செய்கின்றது

நாடு கடந்த அரசு இன்னும் கேபியின் வழிகாட்டலில் தான் இயங்குகின்றதா ?

முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் தமிழீழ தேசிய துக்க நாளையொட்டிய நினைவேந்தல் நிகழ்வுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெவ்வேறு நாடுகளிலும் ஏற்பாடு செய்துவருகிறது.
இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவாக தமிழ் மக்களாலும் தமிழ் அமைப்புக்களாலும் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது ஆதரவினை வழங்குகிறது.
விசுவநாதன் ருத்ரகுமாரன்

ஒரு பிணத்திற்கு தலைக்கு ஒருவர் முண்டத்திற்கு ஒருவர் என்று பிய்த்துக் கொள்ளும் கூட்டமாக மாறியிருக்கின்றது புலன் பெயர்ந்த கூட்டம்

எல்லோரும் சேர்ந்து செய்யவேண்டும் அல்லது பிரிவினைகளை மேலும் தூண்டாமல் இருக்கவேண்டும்

இப்படி எல்லாவற்றையும் ஒவ்வொரு கூட்டங்களாகப் பிரித்து தமிழர்களின் ஒன்று பட்ட பலத்தை சிதைத்துக் கொண்டு வருகின்றார்கள் இது திட்டமிட்ட ஒரு செயலா என்று சந்தேகிக்க வைக்கின்றது ?

உருத்திரகுமாரும் பரிவாளங்களும் ஆரம்பம் முதலே உலகத்தமிழ் அமைப்புக்களையும் அவர்களின் செய்ற்பாடுகளையும் ஓரம் கட்டும் முயற்சியிலேயே காய் நகர்த்தி வருகின்றார்கள்

நெடியவனையும் உலகத்தமிழர் அமைப்பையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் சிறிலங்காவை விட இவர்களே மும்மரமாக இருக்கின்றார்கள் அல்லது அவர்களின் வழி காட்டலில் இயங்குகின்றார்கள் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும்

இங்கு நெடியவன் அல்லது தலைமைச் செயலகம் , அனைத்துலகத் தொடர்பகம் நல்லவரா கெட்டவரா எமக்குத் தெரியாது

ஆனால் முட்டி மோதிக்கொண்டிருக்கும் இவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும்

அல்லது இரண்டு கூட்டமும் துரோகக் கூட்டமாகக் கூட இருக்கலாம் அதைச் சுட்டிக்காட்டும் நம்பமான ஒரு சமிக்கைகளும் இன்னும் வெளிவரவில்லை

அதற்காக இன்னும் கேபி கைதியாக இருக்கின்றார் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களை எந்தக் கூட்டத்தில் சேர்ப்பது ?

இதை விடக் கேவலம் என்ன என்றால் நமது ஊடக ஜாம்பவான்கள் அப்படியே எவன் என்ன சொன்னாலும் வெட்டி ஒட்டிக் கொண்டு தாம் தான் தமிழ்த்தேசிய புரட்சியாளர்கள் புலிகளின் வாரிசுக்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கின்றன



நா.க.அரசு ஜனநாயக அணியினரால் தான் தமது செயற்பாடுகள் பின் தங்கியிருக்கின்றது என்று அவர்கள் மேல் பழியைப் போட்டு வருவது தெளிவாகத் தெரிகின்றது

உருப்படியாக எதுவும் செய்யவில்லை ஆனால் மற்றவை எல்லாம் நடந்தேறிவருகின்றது அது எப்படி ?

இனி மாவீரர் தினத்தையும் பெயர் மாற்றி விடுவார்கள் போல் தெரிகின்றது யார் கண்டார் எதுவும் நடக்கலாம்

இவர்களின் போக்கு வரும் மாவீரர் தினத்திலும் பிரதி பலிக்கப்போகின்றது என்பது இப்போதே அறிகுறி தெரிகின்றது

Comments