ஈழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்திய லிபரல் கட்சி மைக்கல் இக்னேட்டிவ்




கரும்புலிகள் பற்றி கனடிய எதிர்க்கட்சித் தலைவர். அதிர்ச்சித் தகவல்..!

ஆனால் இது குறித்து தமிழ் அமைப்புக்கள் எந்தக் கண்டனத்தையும் வெளியிடவில்லை அது ஏன் ?


லிபரல் கட்சித்தலைவர் மைக்கல் இக்னாட்டியெவ் குறித்து வெளியாகியுள்ள ஒரு செய்தி கனடியத் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திள்ளது. 2004 ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட The Temptations of Nihilism என்ற நூலே பெரும் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

book

அந்நூலின் ஐந்தாவது அத்தியாயத்தில் பக்கம் 126இல் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்.

The Tamil Tigers Suicide bombers, mostly female, were indoctrinated to offer their sacrifice as an act of love for the Tamil Leader. Dying was reconceived as an orgasmic reunion with the leader in death. Channelling sexual desire away from life is an important process in the creation of the death cult. It harnesses erotic energies so that the martyr thinks of death as a form of erotic release..

“தமிழ் புலிகளின் தற்கொலை குண்டுதாரிகளில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள். இவர்கள் தமிழ்; தலைவர் மேல் கொண்ட காதல் காரணமாக தங்கள் அர்ப்பணிப்பை வழங்குமாறு வழிப்படுத்தப்பட்டுள்ளார்கள். இறப்பினூடாக இறப்பின் பின்னர் தலைவருடன் புணர்ச்சிப் பரவசநிலையில் மீள்இணையலாம்; என அவர்கள் கருதுகின்றனர்”, என எழுதப்பட்டுள்ளது. மேலும் தமிழர் உச்சமாக மதிக்கும் கரும்புலிகளை பாலியல் உணர்வுகளுக்கு உந்தப்பட்டு, அதற்கு ஆட்பட்டே இவ் இறப்பு காலாச்சாரத்தில் ஈடுபட்டனர் என மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார் திரு. இக்னாட்டியெவ்.

2008 ஆண்டு கரும்புலிநாளில் இறுதியாக உத்தியோகயூர்வமாக வெளியிடப்பட்ட தரவின்படி, 356 கரும்புலிகளில் 200 ஆண் கரும்புலிகளும், 156 பெண் கரும்புலிகளும் அடங்குவர். பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என்பது முதற்பொய். அடுத்து உச்சமான ஒரு மானிட அர்ப்ணிப்பை, உயரிய தமிழர் தற்கொடையை பாலியல் ரீதியாக கொச்சப்படுத்தும் ஒருவர் எவ்வாறு நம்பத்தன்மையுடைய ஒரு தேசியக் கட்சியின் மற்றும் நாட்டின் தலைவராவார்?

ஏற்கெனவே கனடிய ஆளும்கட்சியானது வெளியிட்ட ஒரு தேர்தல் விளம்பரம் தமிழர் மனதை காயப்படுத்துவதாக அமைந்திருந்தது. அதற்கு கண்டனம் தெரிவித்தும் அதனை நீக்கும்படியும் கனடியத் தமிழ் அமைப்புகள் அறிக்கைகள் வெளியிட்டதுடன் அழுத்தங்களையும் பிரயோகித்திருந்தன.

இந்நிலையில் தமிழ் மக்களின் காவல் தெய்வங்களை, பலவீனமான இனத்தின் பலமான ஆயுதங்களை, அவர்களின் ஆழ்மன ஆழத்தையோ தோற்றத்தின் நியாயத்தையோ சற்றும் அறிந்துகொளளாமல் மிக இழிவாக சித்தரித்திருப்பது தமிழர்களை கொதிப்படைய வைத்துள்ளது. தமிழ் அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்து குறிப்பிட்ட பகுதியை அப்புத்தகத்தில் இருந்து நீக்கச்செய்வதோடு தமிழர்களின் மனதை புன்படுத்தியதற்காக மன்னிப்புக்கேட்கச் செய்யவேண்டும் என தமிழர்கள் வேதனையுடன் கூறிவருகின்றனர். அத்துடன் கனடாவில் இது தேர்தல் காலம் என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

http://www.ctr24.com/newctr/clients/Player.aspx?plaurl=../Archivesongs/2179.mp3

http://www.pathivu.com/news/15964/58//d,article_full.aspx

http://suthumaathukal.blogspot.com/2011/04/blog-post_7570.html

http://www.ninaivukal.com/Events/Community-Group/CTC-Pongal-Dinner-2011/15555656_t6Vgh#1165298958_mSENp

http://www.sankamam.com/beta/index.php/news/eelam-srilanka/5259-2011-04-14-16-11-26.html

Comments