அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளுக்கு கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சி ஆதரவு

சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக் லேற்றன் [Jack Layton] நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த ஆதரவை வெளியிட்டுள்ளார்.

“போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புவதுடன், உடனடியாக ஐ.நா சுதந்திரமான விசாரணைகளைத் தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பொதுச்சபையில் அனைத்துக்கட்சிக் குழுவொன்றை உருவாக்கும் தீர்மானம் ஒன்றை புதிய ஜனநாயக் கட்சி கொண்டு வந்தது.

துரதிஸ்டவசமாக அந்தத் தீர்மானத்தை கொன்சர்வேட்டிவ் கட்சி தோற்கடித்து விட்டது.

அனைத்துலக சமூகம் அமைக்கின்ற விசாரணைக் குழுவொன்றுக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தத் தீர்மானம் சிறிலங்கா அரசையும் ஐ.நாவையும் கேட்டுக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தது.“ என்றும் அவர் இந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அதேவேளை, புதிய ஜனநாயகக் கட்சியின் ஸ்காபரோ ரூஜ் றிவர் [Scarborough-Rouge River] வேட்பாளரும் தமிழர் விவகாரம் தொடர்பான சிறப்பு ஆலோசகருமான ராதிகா சிற்சபேசன் [Rathika Sitsabaiesan] இதுகுறித்து கருத்து வெளியிடுகையில்,
VOTE FOR

Rathika Sitsabaiesan
NDP Candidate Scarborough Rouge River


“சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க சுதந்திரமான விசாரணைக் குழுவொன்றை அமைக்க புதிய ஜனநாயகக் கட்சி எப்போதும் ஆதரவு வழங்கி வருகிறது. இதற்காகத் தொடர்ந்து பணியாற்றும்.

சிறிலங்காவின் மனிதஉரிமை மீறல்கள் குறித்து நாடாளுமன்ற ஆய்வை நடத்த நாம் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்“ என்றும் கூறியுள்ளார்.

Comments