கனடாவில் ஆட்சியிலுள்ள பழமைபேண் கட்சிக்கு சட்டவாளர்கள் கல்வியாளர்கள் எதிர்ப்பு

கனடாவின் பழமைபேண் கட்சியானது [Conservative Party] குடிவரவாளர்களிற்கும் சிறுபான்மை இனங்களிற்கும் எதிரான கட்சியென்று கனடாவின் 48 முன்னணி சட்டவாளர் நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளன.


பல ஆதாரங்களை முன்வைத்து ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை இதுவரை பொதுமக்களால் அறியப்படாத பல விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது.

இந்த 48 நிறுவனங்களில் கனடாவின் தமிழ் அகதிகள் விடயத்தில் காத்திரமாகச் செயற்பட்டுவரும் பார்பரா ஜக்மன், லோன் வால்ட்மன் நிறுவனங்கள் உள்ளிட்ட பலவும் உள்ளடங்கியுள்ளன. இன்னமும் பல சட்ட நிறுவனங்கள் தம்மையும் இந்த அறிக்கையில் இணைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக திருவாட்டி பார்பரா ஜக்மன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மேலதிகமாக பல நிறுவனங்கள் இந்த அறிக்கையில் இணைக்கப்படும் பட்சத்தில் கனடியத் தேர்தலில் இது ஒரு பாரியதொரு திருப்புமுனையாக அமையும் எனவும் இவ்வாறு அகதிகள் மற்றும் குடிவரவாளர்களிற்கு எதிரான கட்சியென ஒரு கட்சியை சுட்டிக் காட்டியது இதுவே முதல்முறை எனவும் தெரியவருகிறது.

பெற்றோர்கள், பேரர்களை அழைக்கும் நடைமுறையில் 2005ம் ஆண்டில் 20,000 பேர் அழைக்கப்பட்டதாகவும் இந்த தொகை ஏறுமுகமாகச் செல்லாமல் 44வீதத்தால் குறைக்கப்பட்டு கடந்த ஆண்டு வெறும் 11 ஆயிரம் பேர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டதாகவும்,

கப்பல் கடத்தல்காரர்களைத் தண்டிப்பதாகக் கூறிக் கொண்டு வெறுமனே அகதிகளை மாத்திரம் தண்டிக்கும் வகையிலான சட்டங்களைக் கொண்டுவருவதாகவும், இக் கொடிய சட்டமூலத்தின் மூலம் சிறுவர்களையும் பெண்களையும் சிறைகளில் நிபந்தனையின்றி அடைக்க வழி செய்துள்ளதாகவும்,

குடிவரவாளர்களிற்கு உதவிபுரியும் நிறுவனங்களிற்கான நிதியுதவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிதியுதவியில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், அகதிகளிற்கு தாங்கள் ஆதரவானவர்கள் எனக் காட்டும் அதேவேளை அகதிகள் தங்கள் பிறந்த நாட்டிலிருந்தே இனி அகதிக்கோரிக்கையை விடவேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்துவதாகவும்,

திருமணமாகி வருபவர்கள் கட்டாயம் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற நடைமுறையை திட்டமிட்டே கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டு எனவே சிறுபான்மை இனங்களைச் சார்ந்தோரும், புதிய குடிவரவாளர்களும் கண்சவேட்டிவ் கட்சியைத் தெரிவு செய்யக்கூடாது என மேற்படி சட்ட நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

Inside thestar.com

Don’t vote Conservative, immigration lawyers warn newcomers
Published On Wed Apr 20 2011

Nicholas Keung Immigration Reporter

In an unusual move, a group of Canadian lawyers and legal academics are urging voters not to support the Conservative Party in the May 2 election.

“The Conservative Party has been telling visible minority immigrant communities, which it calls the ‘ethnic vote,’ that it is improving the immigration system,” said the group in a statement released Wednesday. “A review of their record shows the contrary.”

The group, made up of leading immigration lawyers and professor across Canada, said the Conservative Party has misled the public, especially immigrant voters, by making twisted statements about the state of Canada’s immigration and refugee system, in order to win newcomer votes.

Among the group‘s claims:

• The annual visa quotas for sponsored parents and grandparents are down — not up — by 44 per cent from 20,005 in 2005 to 11,200 in 2011. It now takes nine to 30 months longer to process these sponsorships, depending on the visa post.

• The backlog of skilled worker applicants waiting for a decision has gone up — not down — from 487,000 in 2005 to the current 508,000.

• Instead of getting tough on smugglers, new legislation introduced by the party target the victims of smuggling, the refugees, by mandatory detention, denying permanent residency and making it more difficult for refugees to reunite with their families.

• The party claims to be sympathetic to genuine refugees who do not flee their countries illegally, but just announced plans to cancel the only program allowing Canada to protect refugees applying from within their own country.

“It is one thing for the Conservatives to say we make our decisions, our policies and live with the consequences,” said lawyer Lorne Waldman, one of the group’s initiators. “Voters need to make informed choices based on facts and not be misled by misleading statements.”

The group also points to a $53 million cut in settlement services funding — $43 million from Ontario alone.

Despite claims by Conservatives that new laws will crack down on marriage fraud, the groups said it won’t stamp out bogus spousal sponsorships, but make reunification with mostly legitimate spouses more difficult. Worse, the conditional two-year permanent residency will trap spouses in abusive relationships, it added.

Forty-six lawyers and professors have endorsed the group’s claims so far, including lawyers Barbara Jackman in Toronto and Mitchell Goldberg in Montreal, law professors Donald Galloway of the University of Victoria, Queen’s University’s Sharryn Aiken and University of Ottawa’s Peter Showler, former chair of the Immigration and Refugee Board.

However, Immigration Minister Jason Kenney said he is proud of the Conservative government’s record on immigration and its effort in reaching the highest levels of immigration of any government in Canadian history.

“I know that defenders of the status quo, like many immigraiton lawyers, have been opposed to all of our efforts to improve Canada’s immigration and refugee system, like our balanced refugee reforms, and our efforts to cut the backlog in the skilled worker program,” Kenney said.

“The Harper Conservatives have had a more generous policy towards legal immigration than any government.”

Meanwhile, Ontario Premier Dalton McGuinty is renewing his push for a better immigration deal from Ottawa.

The province wants more say in which immigrants it takes in to help boost the Ontario economy and a freer hand to provide better services to new Canadians settling here, McGuinty said, following up on resolutions passed in the Legislature recently calling for a new deal.

With files from Rob Ferguson

கனேடிய கன்சவேடிவ் கட்சி சார்பில் பரஞ்சோதியை வேட்பாளராக நியமித்ததில் சர்ச்சை!

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மரியாதை செலுத்திய ஒருவரை மே 2ஆம் திகதி கனடாவில் இடம்பெறவுள்ள தேர்தலில் கன்சவேடிவ் கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது ஏன் என்று அக்கட்சியைச் சேர்ந்த பீட்டர்கென்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.

கன்சவேடிவ் கட்சி சார்பாக போட்டியிடும் ராகவன் பரஞ்சோதி சர்ச்சைக்குரிய வேட்பாளர். இவர் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்டு புலிகளுக்கு புகழாரம் சூட்டியவர்.

மாவீரர் தின யூ டியூப் வீடியோ காட்சிகளைப் பார்த்து விட்டே தான் இந்தக் கேள்விகளை எழுப்ப முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு மரியாதை செலுத்திய ஒருவர் ரொறன்ரோ பகுதியில் கன்சவேடிவ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளை சுதந்திரப் போராளிகள் என்றும் அவர்கள் இலங்கையில் உள்ள ஏனைய தமிழர்களுக்காக தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள் என்றும் பரஞ்சோதி கூறியுள்ளார்.. தமிழர்களின் அபிலாஷைகள் என்ன விலை கொடுத்தும் வெல்லப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பு 2006 முதல் கனடாவில் உத்தியோகப்பூர்வமாகத் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு.

இந்த அமைப்புக்காக நிதி சேகரிப்பதும் கனடாவில் குற்றமாகும். இந்நிலையிலேயே விடுதலைப்புலிகளை புகழ்ந்து பேசியிருக்கும் ஒருவரை தனது கட்சி எவ்வாறு வேட்பாளராக நிறுத்த முடியும் என்று பிட்டர்கென்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆரம்பத்தில் பரஞ்சோதியின் வேட்பாளர் நியமனத்தை இவர் அங்கீகரித்திருந்த போதிலும், அவர் சம்பந்தப்பட்ட வீடியோக் காட்சிகளைப் பார்த்தபின் தன்னுள் இந்தக் கேள்வி எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிட்டர்கென்ட் ஊடகங்கள் வாயிலாக இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். கென்ட் ஒரு ஊடகவியலாளராக இருந்தவர். மிக அண்மைக்காலம் வரை சமஷ்டி சுற்றாடல்துறை அமைச்சராகவும் இருந்தவர்.

ராகவன் பரஞ்சோதி பற்றி கனடா பிரதமரிடமும் கடந்த வாரம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இவர் தனது பெயரை சுருக்கி இப்போது ‘கவன்’ என்று குறிப்பிட்டு வருகின்றார்.

விடுதலைப்புலிகள் அமைப்பை கனடாவில் தடைசெய்தது தமது கட்சியே என்றும் விடுதலைப்புலிகள் பற்றிய தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் பிரதமர் ஹார்பர் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments