ஏன் இறந்த பொது மக்களது புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை?

news முள்ளிவாய்க்காலில் போராளிகள் மட்டுமா கொல்ப்பட்டும் சித்தரவதைக்கும் ஆளாகினர்?
போர்க்குற்ற விசாரணைக்கான அறிகுறிகள் தென்படும் போது இவை அவசர அவசரமாக வெளியிடவேண்டிய தேவைகள் எவை..?
பொது மக்கள் மீதான போர்க் குற்றங்கள் என்னவாகின?
அந்த தேவைகள் யாருக்கு சாதகமானவை?
அவற்றால் பயன்பெறப் போகிறவர்கள் யார் யார்..?
காலகாலமாக சிங்களம் செய்துவரும் மனோவியல் தாக்குதலை இம்முறை பொறுப்பெடுத்து நடாத்தும் ஏஜன்டுகள் யார்..?
போர்க் குற்றங்களாகவே இவற்றை வெளியிடுகிறோம் என்கிறார்கள்.
அப்படியானால் ஏன் போர்க் குற்றத்ததை விசாரித்த நிபுணர் குழுவுக்கு இந்த புகைப்படங்கள் காண்பிக்கப்படவில்லை. ஏன் இறந்த பொது மக்களது புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை?
news
போர்க்குற்றத்தில் சிங்களம் ஈடுபட்டது என நிபுணர் குழு உறுதியாக தெரிவித்து இருக்கும் இந்த பொழுதில், நிபுணர் குழுவின் பரிந்துரைகளை சிங்களம் நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கும்படி புலம்பெயர் தமிழர்கள் எழுச்சி கொள்ளவேண்டிய நேரத்தில் போராளிகளது புகைப்படங்கள் மட்டும் வெளிவந்த காரணம் என்ன..?

இரண்டு வருடமாகியும் இன்னும் உயிர்ப்புடன் செயற்படும் புலம்பெயர் தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் ஒருவகையான இறுதித்தாக்குதல் இது. நாம் அறிந்தவரையில் இது ஒரு பகுதிதான். கட்டம் கட்டமான உளவியல் தாக்குதல்கள் இனிவரும் சில நாட்களில் நிகழ்த்தப்படும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

புலம்பெயர் தமிழர்களை மிக அதிர்ச்சிக்குள்ளும், அந்த அதிர்ச்சிக்கூடாக மௌனத்திலும் புதைந்துபோக வைக்க இதைவிட சில காட்சிகளை வெளியிடும் திட்டங்களும் அவர்களிடம் உள்ளன. அவர்களின் தேவையும் சிங்களத்தினதும், வல்லாதிக் கசக்தியினது தேவையும்ஒன்றாகவே இருக்கிறது.

அவற்றை இனம் கண்டு அவற்றை நிராகரிப்பதுதான் இப்போதைய தேவை.

அவர்கள் எமது வீரர்களின் சிதைந்துபோன உயிரற்ற உடல்களை காட்டி எமது மன உறுதியை உடைக்க நினைக்கிறார்கள்.! ஆனால் எமது வீரர்கள் உயிரோடு இருந்து போராடிய நீண்ட வருடங்களில் அவர்கள் காட்டிய வீரத்தையும், விடுதலை மீதான பற்றுதலையும், உறுதியையும் என்றும் எஙகள் நினைவில் மீண்டும் மீண்டும் வரட்டும்.

விடுதலைப் போராளிகளையோ கிழர்ச்சியாளர்களையோ அல்லது ஒரு நாட்டு படையினரை எதிரி நாட்டு படையினரோ யுத்தகாலத்தில் கொல்வது போர்க் குற்றமாக அனைத்துலகத்தால் கருதப்படலாகாது. இது உலக நியதி. பொதுமக்கள் கொல்லப்பட்டது பற்றிய படங்களும் ஆதாரங்களும் மட்டுமே உலக மணிதாபிமானிகளால் போர்க் குற்றமாக முதலில் கருதப்படுகிறது.news

எனவே விடுதலைப் புலிகள் போராளிகளது கொல்லப்பட்ட புகைப்படங்களை படையினரிடம் இருந்து வெகுமதி கொடுத்து எடுத்ததாக கூறுபவர்கள். பொதுமக்கள் மற்றும் யுவதிகள் பலர் கொல்லப்பட்ட கற்பழிக்கப்பட்ட ஆதாரங்களும் பெரியளவில் அவர்களிடம் இருக்கும் அதையும் வாங்கி பிரசுரித்தால் மிக மிக பிரயோசனமாக இக்காலத்திற்கு பொருத்தமானதாக இருக்குமே! செய்வார்களா?newsnews

பாரிசிலிருந்து: நிலா மகள்*

Comments