சிறிலங்காவினது தலைவர்களின் போர்க் குற்றங்கள்: குற்றம் சுமத்தும் அமெரிக்கச் சட்டத்துறை மாணவன்

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரன் கோத்தாபயதான் காரணம் என அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்திலுள்ள சட்டக் கல்லூரியில் கல்வி பயிலும் முதலாமாண்டு தமிழ் மாணவன் குற்றம் சுமத்துகிறான்.







இவ்வாறு அமெரிக்க குரல் வானொலியின் [Voice of America - VOA] இணைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழுவிபரமாவது,

போர் முடிவுக்கு வந்துவிட்டது, அகதிகள் அனைத்துலக எல்லைகளைத் தாண்டிப் பயணிக்கிறார்கள், போர் தந்த உடல் உள ரீதியிலான வடுக்களைத் தாங்கியவாறு இந்த அகதிகள் குறிப்பாக மேற்கு நாடுகளை நோக்கி நகர்கிறார்கள்.

இந்த நிலையில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிறிலங்காவினது தலைமையினை நீதியின் முன் நிறுத்துவதற்கான முயற்சிகளில் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் முழு முனைப்புடன் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரன் கோத்தாபயதான் காரணம் என அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்திலுள்ள சட்டக் கல்லூரியில் கல்வி பயிலும் முதலாமாண்டு தமிழ் மாணவன் குற்றம் சுமத்துகிறான்.

மேரிலான்டிலுள்ள பல்ரிமோர் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரி வளாக வகுப்புகளைப் பொறுத்தவரையில் இது பொதுவானதொரு நாள்தான். வகுப்புக்களில் வைத்து மாணவர்கள் தங்களது மின்னஞ்சல்களைப் பார்வையிட்டபோது விரிவுரையாளர் கேள்வியொன்றைத் தொடுக்கிறார். ஆனால் இந்தக் கேள்வியினால் ராஜீவ் சிறிதரன் என்ற அந்த மாணவன் குழப்பமடையவில்லை. மேற்கிலுள்ள சட்டம்சார் கட்டமைப்புகள் ஊடாக சிறிலங்காவிலுள்ள தமிழர்களுக்கு நீதியினைப் பெற்றுக்கொடுப்பது என்ற தனது முயற்சியில் அவன் தொடர்ந்தும் ஈடுபடுகிறான்.

"நுயரம்பேர்க் தொடக்கம் டார்பூர் [Nuremberg to Darfur] வரைக்கும் நீதியின் நிலைமாற்ற வரலாற்றினை நீங்கள் அவதானித்தால், அநீதி இழைக்கப்பட்ட ஒரு சிலருக்கே நீதி கிடைத்திருப்பதை நீங்கள் காணலாம். தங்களது துன்ப துயரங்களிலிருந்து மீளுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டவர்கள் வரலாற்றின் பதிவுகளாகி விடுகிறார்கள்" என ராஜீவ் சிறிதரன் கூறுகிறான்.

சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோர் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழர்களுக்கு எதிரான இனக்கொலையினை மேற்கொண்டதாகக் கூறி 2009ம் ஆண்டு சிறிதரனும் அவனது கல்லூரி நண்பர்களும் இனக்கொலைக்கு எதிரான தமிழர் அமைப்புடன் இணைந்து சட்ட ஆவணமொன்றைத் தயாரித்திருந்தார்கள். சிறிலங்காவினது அதிபர் ராஜபக்சவினது சகோதரன்தான் இந்தக் கோத்தாபய ராஜபக்ச.

2009ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த போரின் இறுதி மாதங்களில் 7,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கணக்கிடுகிறது. சிறிலங்கா இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சுமத்தப்படுகிறது.

சட்டக்கல்லூரி மாணவன் சிறீதரனது குற்றச்சாட்டினை வோசிங்டனிலுள்ள சிறிலங்காவினது தூதரகம் முற்றாக நிராகரித்திருக்கிறது. அதேநேரம் அதிபர் ராஜபக்ச கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி நியூஸ் பத்திரிகைக்குக் கீழ்கண்டவாறு கருத்துக் கூறியிருக்கிறார்.

"என்னையும் என்னுடன் இணைந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக மனிதாபிமானப் போரைத் தொடுத்தவர்களையும் அனைத்துலக தீர்ப்பாயத்தின் முன்னால் நிறுத்தவேண்டும் எனக் கூறி புலம்பெயர் தமிழர்கள் எனது நற்பெயருக்குக் களங்கத்தினை ஏற்படுத்துகிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் நாடு திரும்பி நிலைமையினை நேரில் அவதானிக்குமாறும் அதிபர் ராஜபக்ச அழைப்பு விடுத்திருக்கிறார்.

சிறிதரன் முன்வைத்திருக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமெரிக்க நீதித் திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என வோசிங்டனைச் சேர்ந்த நீதியாளர் புறூஸ் பெயின் [Bruce Fein] கோரிக்கை விடுத்திருந்தபோதும் நீதித் திணைக்களம் எந்தவகையான நடவடிக்கைகளையும் எடுப்பதாகத் தெரிவயில்லை.

"காணாமற்போதல்கள், பட்டினி, குண்டுத்தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் என பல சம்பவங்களைக் கொண்ட 1,000 பக்க ஆவணம் இது" என்கிறார் புறூஸ் பெயின். "பலதரப்பட்ட தகவல் மூலங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களைக்கொண்டு இந்த ஆவணத்தினை அவர்கள் பூரணப்படுத்தியிருக்கிறார்கள்" என்றார் அவர்.

கோத்தாபய ஒரு அமெரிக்கப் குடிமகன் என்றும் அதிபர் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட பொன்சேகா அமெரிக்காவின் கிறீன் அட்டையினை வைத்திருப்பதாகவும் புறூஸ் பெயின் கூறுகிறார். இந்த நிலையில் இவர்கள் புரிந்தாகக் கூறப்டும் குற்றங்களுக்கு அமெரிக்கச் சட்டத்தினை அடிப்படையில் நடவடிக்கைகள எடுக்க முடியும் என பெயின் வாதிடுகிறார்.

"1948ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இனக்கொலை தொடர்பாக சாசனத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டிருக்கிறது. தவிர அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்கள் இனக்கொலைகளில் ஈடுபடக்கூடாது எனக்கூறும் சட்டமொன்றும் அமெரிக்காவில் உள்ளது" என்றார் அவர்.

எவ்வாறிருப்பினும் தற்போது சிறிலங்காவிலிருக்கும் ஆட்சியாளர்கள் அதிபர் மகிந்தவின் சகோதரர் கோத்தபாயவிற்கு எதிரான சட்டநடவடிக்கையை எடுக்கவோ அன்றி அவரை நாடுகடத்தவோ போவதில்லை எனக்கூறும் புறூஸ் பெயின் ஆனால் அரசாங்கம் மாறுமிடத்து நிலைமைகள் மாறும் என்கிறார்.

குறிப்பிட்ட சட்டப் பல்கலைக்கழகத்தில் தனது வகுப்புகளை நிறைவுசெய்த சிறீதரன் வீட்டுக்குத் திரும்பி ஆவணப்படுத்தும் தனது பணியினை ஆரம்பிக்கிறான். தான் இப்போது கையாண்டுவரும் பல சம்பவங்கள் தொடர்பாக சரியான தகவல்களைப் பெறுவது கடினமானதாக இருந்த போதிலும் அவன் அந்தப் பணியினைத் தொடர்கிறான்.

இன்றுள்ள இணையவழித் தொடர்பாடல்தான் இனக்கொலை தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்கு வழிசெய்கிறது என்கிறான் சிறிதரன்.

"பல்கிப் பெருகிய ஊடகங்கள், இணையம், பேஸ் புக் போன்ற சமூகத் தளங்கள் ஆகியவற்றின் துணையுடன் பாதிக்கப்பட்ட மக்களின் தகவல்களைப் பெற்று அவற்றை நீதிமன்றுக்கக் கொண்டுசெல்ல முடியும்" என்கிறான் இவர்.

இவன் அவசர அவசரமாகத் தனது பணிகளைச் செய்கிறான். இனக்கொலைக்கான ஆதாரங்களைத் திரட்டி சட்ட ரீதியிலான ஆவணங்களைத் தயாரிப்பதை முழு முதல் இலக்காகக் கொண்டு ஓய்வுறக்கமின்றி உழைக்கிறன் இவன். இதுபோல ஓடித்திரிந்தால் தன் சக்தியினை இழந்து இவன் களைத்துவிடுவான்;. இவ்வாறு தொடர்ந்தார். தனது வாழ்க்கை குறுகிய நாளைக்குத்தான்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகள் சிறிலங்கா இராணுவத்தினருடன் போரிட்டார்கள். புலிகளும் பல்வேறுபட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் எனக் குற்றம் சுமத்தப்படுகிறதுதான் எனக் கூறும் சிறீதரன் விடுதலைப் புலிகளின் சார்பாக குற்றமிழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்துவது வேறு யாரோ ஒருவரது பணி என்கிறார்.

Comments