கனடியத் தமிழர் வாக்குகள் யாருக்கு? VOTE FOR என்.டி.பி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZ5RnYBo_NoknQpn8P0VxEVTDJbK7VBY9EJPQbOAy6nsM0d6UMbiprQK4JGJU1YeisPIhr3Hke1iKmH8pqCfHjO6COqhXZLD2w0aYEM76uQ1Upg3b7LWg860_98xlmGjmSKqhVNwPYb96j/s1600/vote+for+ndp+rathika.jpgஏழு ஆண்டுகளில் நான்காவது முறையாக கனடியப் பொதுத்தேர்தல் மே 2ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது நாற்பத்தியோராவது அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தலாகும் கட்சித் தலைவர்களின் பிரசாரமும் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.
VOTE FOR

Rathika Sitsabaiesan
NDP Candidate Scarborough Rouge River


இம்முறை தேர்தலில் பரபரப்பு என்னவென்றால், கட்சி நிலைவரங்களின் புள்ளிவிபரக் கணக்கெடுப்புகள் தரும் திடுக்கிடும் கணிப்புகள்தான். இரண்டாவது இடத்தில் இருந்த லிபரல் கட்சியை என்.டி.பி. மூன்றாவது இடத்துக்குத் தள்ளிவிட்டது என்பதாகும். தற்போது லிபரல் கட்சி ஆட்சியைப் பிடிப்பது என்ற கதை போய் இரண்டாவது இடத்தைத் தக்கவைப்பதற்கு போராடுகிறது. ஆனால் புதனன்று வெளிவந்த கணிப்பின்படி மக்களாதரவில் முதலிடத்தில் உள்ள கொன்சவேற்றிவ் கட்சியை என்டீபீ நெருங்கி வருவதாக புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது.


Forum Research நிறுவனத்தின் கருத்துக் கணிப்பொன்றில் கொன்சவேற்றிவ் கட்சிக்கு 34 சதவீத மக்கள் ஆதரவும், என்டீபீக்கு 31 சதவீத மக்கள் ஆதரவும் உள்ளமை தெரியவந்துள்ளது. லிபரல் கட்சிக்கு ஆதரவு தொடர்ந்து குறைந்து தற்போது 22 சதவீதமாகியுள்ளது. ஆனாலும் இந்தக் கணக்கெடுப்புகள் அண்ணளவு ஆனது என்பதுடன் நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்றது.

கனடியத் தேசிய அரசியலில் பரபரப்பு காணப்படும் அதேவேளை, கனடியத் தமிழர் அரசியலிலும் பரபரப்பு இல்லாமல் இல்லை. ஏனெனில், தமிழர்கள் இருவர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பதினாலும் ஆகும்.

கனடியப் பொதுத்தேர்தலில் இம்முறைதான் முதன்முதலாக போட்டியிடுகிறார்கள் என்றுகூறுவதற்கில்லை. இதற்கு முன்னைய தேர்தல்களிலும் இருவர் போட்டியிட்டனர்.

டொன்வலி மேற்குத் தொகுதியில் என்.டி.பி. சார்பில் போட்டியிட்ட டேவிட் தோமஸ் 2004ம் ஆண்டுத் தேர்தலில் 4393 வாக்குகளையும் 2006ஆம் ஆண்டுத் தேர்தலில் 4902 வாக்குகளையும் பெற்றிருந்தார். கனடியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட முதலாவது தமிழ் வேட்பாளர் என்ற பெருமை இவருக்குரியது.

2006 ஆம் ஆண்டில் ஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியில் வின்சன் வீரசுந்தரம் கொன்சர்வேட்டிவ் கட்சியில் போட்டியிட்டு 10,017 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இவ்வருடம் ஸ்காபுரோ தென்மேற்குத் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளராக ராகவன் (கவன்) பரஞ்சோதியும், ஸ்காபரோ றுபஜ் றிவர் தொகுதியில் என்.டி.பி. சார்பில் ராதிகா சிற்சபேசனும் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் தமிழர்கள் என்பதனாலும், கனடிய மண்ணில் எங்கள் பலத்தை நிரூபிப்பதற்கும், தமிழர்கள் கனடிய தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து போவதற்குமாக இவர்களுக்கு வாக்களித்து இவர்களை வெல்ல வைக்க வேண்டியது இவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் தமிழ் வாக்காளர்களின் கடமையாகும். எனவே, தமிழர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்குடன் போட்டியிடும் தமிழ்வேட்பாளர்களுக்கு, கட்சி பேதமின்றி வாக்களிக்க வேண்டியது தமிழர் கடமையாகும்.

ஆனால், தேர்தல் ஒன்றில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் சுதந்திரம் அந்த மக்களின் உரிமை ஆயினும், கனடாவில் சிறுபான்மையினமாக இருக்கும் தமிழர்கள் ஒருமித்து எடுக்கும் முடிவே முழுத்தமிழ் மக்களுக்கும் நன்மையளிப்பதாக அமையும். நாம் எக்கட்சிக்கு வாக்களிக்கலாம் என்பதற்கு முன்ன,ர் கனடிய தேசிய அரசியலில் தமிழருக்கு எந்தெந்தக் கட்சிகள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தன, என்பது பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் தேர்தல் காலங்களில் இலங்கைத் தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தியது போல் கனடாவிலும் தேர்தல் காலத்தில் தமிழர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என்றே கூறலாம்.

2000ஆம் ஆண்டில் அப்போதைய லிபரல் அரசின் நிதி அமைச்சர் போல் மாட்டின் அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் மரிய மின்னா அவர்களும் கனடியத் தமிழரின் சங்கங்களின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர்.

இதனை அப்போது எதிர் கடசி வரிசையில் இருந்த கொன்சர்வேட்டிவ் கட்சி பெருமளவில் எதிர்ப்பிரசாரக் கருவியாகவே எடுத்துச் செயற்பட்டது. பயங்கரவாதிகளின் விருந்துபசாரத்தில் நிதி அமைச்சர் கலந்துகொண்டுவிட்டார் என, போல் மாட்டின் அரசு கவிழும் வரை ஓங்கி ஒலித்ததனை, போல் மாட்டினின் செல்வாக்கைக் குறைப்பதற்கு அல்லது லிபரல் அரசினை தோற்கடிப்பதற்கு கொன்சர்வேட்டிவ் கட்சி ஓர் ஆயுதமாகப் பாவித்தது நாடறிந்த விடயம்.

அதேவேளை, 2006ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் 'விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கம், இவர்களை இந்த நாட்டில் தடைசெய்தே தீருவோம்" என்று சொல்லி வந்த கொன்சர்வேட்டிவ் , தேர்தலில் வென்றதும் முதல் வேலையாக அதே ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்தது.

அதன் பின்னர் 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் உலகத் தமிழர் இயக்கத்தைத் தடை செய்தது. அப்போதும் கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பு பத்திரிகைகள், போல் மாட்டின் கலந்துகொண்ட விருந்துபசாரத்தை நினைவுபடுத்தத் தவறவில்லை. லிபரல் கட்சி ஆட்சியில் இருக்கும்வரை தமிழர் அமைப்புகள் எதுவும் தடை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லிபரல் அரசு பதவியிலிருந்த காலத்தில், “விடுதலைப் புலிகளைத் தடை செய்வீர்களா?” எனக் கேட்டதற்கு, இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும்போது, தடைசெய்வது பற்றி யோசிக்க வேண்டிய அவசியமில்லையென அதற்குப் பொறுப்பான லிபரல் அமைச்சர் ஒருவர் பதிலளித்திருந்தார்.
முதுகெலும்புள்ள ஈழத் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்இது யூரியுபினால் நீக்கப்பட்டதனால் வேறு தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கின்றோம்conservative Read More »
கனடா தேர்தலும் தமிழின விரோதமும் கடந்த வெள்ளியன்று கலைக்கப்பட்ட கனடாவின் எதிர்க்கட்ச...
முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குப் பின்னர் தமிழர்கள் நொந்து வெந்து இருக்கும் வேளையில் MVSun Sea என்ற கப்பலில் 495 தமிழ் அகதிகள் கனடாவுக்கு வரப்போகிறார்கள் என்றவுடனேயே, பூரணமாக அவர்களைப் பற்றி அறியாமலேயே பயங்கரவாதிகள் வருகிறார்கள் என்ற கொன்சர்வேட்டிவ் அமைச்சர்கள் கூறத் தொடங்கினர். தற்போதும் தேர்தல் காலத்திலும் MVSun Sea கப்பலையே தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துகிறது கொன்சர்வேட்டிவ் கட்சி.

1986ஆம் அண்டு நியூபவுன்லாந்தில் 155 தமிழ் அகதிகள் இரண்டு வள்ளங்களில் வந்தபோது அவர்களை வரவேற்று வாழ்வளித்தது அப்போதைய கொன்சர்வேட்டிவ் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போதைய பிரதமர் மதிப்புக்குரிய பிறையன் மல்றோனி; 80களில் நடுப்பகுதியில் இலங்கையிலிருந்து தமிழ் மக்கள் அகதிகளாக வந்த வேளை அவர்களை கூடுதலாக அங்கீகரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் தமிழ் இணையத்தளங்களிலும், ஊடகங்களிலும் பரவலாக காணப்பட்ட விடயம் தற்போதைய லிபரல் கட்சித் தலைவர் இக்னாட்டியவ் அவர்கள் பெண் கரும்புலிகள் பற்றி தான் எழுதிய புத்தகத்தில் மிகவும் கேவலமாக கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதியுள்ளார் என்பதாகும். அதில் கரும்புலிகள் பற்றி சிங்கள அரசாங்கத்தின் விமர்சனங்களை எல்லாம் விஞ்சுவதாகவே அது அமைந்திருந்தது. இது தமிழர் மனங்களை மிகவும் பாதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Is Ignatieff Trying to Convince Canadians He is a True Patriot?
என்.டி.பி. பொறுத்தவரை கனடிய நாடாளுமன்றத்தில் அக்கட்சிக்கு ஒருபோதும் ஆட்சிப்பீடம் ஏறவில்லை. ஆனால், இதுவரை தமிழர்களுக்குத் தேவையான நேரத்தில் குரல்கொடுத்து வருகின்றது. ஒருவேளை ஆட்சியைப் பிடித்தால் எப்படி இருப்பார்கள் என்பது அப்போதுதான் தெரியும்.

2004ஆம் ஆண்டு பொங்குதமிழ் நிகழ்வு ரொறன்ரோ குயின்ஸ் பார்க் திடலில் நடைபெற்ற வேளை ஏறக்குறைய ஒரு இலட்சம் மக்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் அந்நிகழ்வில் உரையாற்றிய ஒரேயொரு கட்சித் தலைவர் என்.டி.பி.யின் ஜக் லேய்ட்டன் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

2009ஆம் ஆண்டு வன்னியின் இராணுவத் தாக்குதல் உச்சக்கட்டம் பெற்றிருந்த காலத்தில் பெப்ரவரி 4ஆம் திகதி சிறிலங்காவின் 61ஆவது வருட சுதந்திர நாளினை துக்க நாளாகக் கடைப்பிடித்தும், கனடிய அரசு இலங்கை இனப்பிரச்சினையில் காத்திரமான பங்கு வகிக்க வேண்டும் எனவும் அனைத்துக் கட்சிகளை வேண்டி, கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் கவனயீர்ப்பு நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். இந்தக் கவனயீர்ப்பைத் தொடர்ந்து அன்று மாலை 6:30 மணிக்கு இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான கனடிய நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் இடம்பெற்றது. இந்த விவாதத்தினை நடத்தவேண்டுமென என்.டி.பி. தலைவர் ஜக் லேய்ட்டனே அனுமதி கோரியிருந்தார். அத்துடன் அவரே இந்த விவாதத்தை தமிழில் 'வணக்கம்" சொல்லி ஆரம்பித்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேநாள், கனடிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை தொடர்பாக அறிக்கை ஒன்றையும் விடுத்தார். இலங்கையின் இனப்பிரச்சினையை உள்விவகாரம் என்று கூறிவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அது தொடர்பான தீர்வில் கனடாவின் பங்களிப்பு தேவை என்றும் லிபரல் கட்சியைச் சேர்ந்த பொப்ரே தெரிவித்தார்.

2009 பெப்ரவரி நான்காம் திகதி நடைபெற்ற விவாதம்தான், கனடிய அரசியல் வரலாற்றில் கனடிய நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் பற்றி நடைபெற்ற முதலாவது விவாதம் எனலாம் அதன் பிற்பாடு வன்னியில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்காப் படைகளால்கொல்லப்பட்ட வேளை 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கடும் குளிரையும் பொருட்படுத்தாது 50,000இற்கும் அதிகமான மக்கள் கனடிய நாடாளுமன்றத்துக்கு முன்னால் திரண்டனர். இளையோர் பல மணிநேரமாக முழந்தாளிட்டு மன்றாடினர். கண்ணீர் விட்டு அழுதனர். ஆனால், என்.டி.பி. கட்சி ஜக் லேய்ட்டன் மட்டுமே அதில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்; என்பது குறிப்பிடத்தக்கது. வேறு எந்த கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை.

அதன்பின்னர் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐ.நா.வின் குழுவும் அறிக்கை விட்டாயிற்று. அமெரிக்கா உட்பட பல மேற்கத்தேய நாடுகள் போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டுமென அறிக்கைமேல் அறிக்கை விடுகின்றன. ஆனால், கனடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி அரசு இதுவரை இது தொடர்பாக ஆக்கபூர்வமான எந்த அறிக்கையும் விடவில்லை என்பதே உண்மை. லிபரல் கட்சயும என்டீபியும் வரவேற்பதாக பகரங்கமாகத் தெரிவித்துள்ளன. கனடியத் தமிழர்கள் கனடாவில் சொல்லக்கூடிய அளவில் மூன்று தசாப்தங்களாக வாழ்கின்றனர். ஆனால், இதுவரை நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு தமிழர்கூட nதிரவுசெய்யப்பட முடியாதிருப்பது ஏன்?

கனடிய கட்சிகளின் பார்வையில் தமிழர்கள் முக்கியமானவர்களாகத் தென்படவில்லையா?தமிழர்களை அக்கட்சிகள் தேவைக்கு மாத்திரம் பயன்படுத்துகிறார்களா? கனடாவில் தமிழர்எண்ணிக்கையில்; சிறிய தொகையினராக இருப்பது உண்மையே. எனவே, அரசியல் கட்சிகளில் முக்கியத்துவம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

இருப்பினும்;, ரொறன்ரோ பெரு நகரம், மிசிசாகா ,பிராம்ரன் மற்றும் மார்க்கம் பிரதேசங்களின்; பல தேர்தல் தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவிற்கு தமிழர் வாக்காளர்களாக உள்ளார்கள் என்பது உண்மை. எனினும்;, தமிழர்கள் தம்மை முக்கியத்துவப்படுத்தி அடையாளப்படுத்தாமல் வெறும் வாக்கு வங்கிகளாகவா கட்சிகளுக்குப் பயன்படுகின்றனர்.

பலர் சிதறுண்டு ஒருங்கிணைப்பின்றி அரசியல் கட்சிகளுக்கு வேலை செய்கின்றனர். இது கட்சிகளினால் அடையாளப்படுத்தப்படுவதற்குரிய சந்தர்ப்பம் குறைவு. எனவே, ஒருங்கிணைந்து சேவையாற்றுவது அவசியமாகும்.

நாம் சிறிய சமுகம் என்பதனால் ஒருங்கிணைந்து அனைத்துக் கட்சிகளுக்குள்ளும் செல்வாக்குச் செலுத்தக்கூடிய வகையில் பணியாற்றவேண்டியது அவசியம். அதேவேளை கட்சியில் ஒரு வேட்பாளராக தெரிவு செய்யப்படக்கூடிய தகமையுள்ளவர்களை முன்னிலைப்படுத்த வேண்டும். கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு தமிழர்களின் பலமும், அவர்களின் உதவயும்p அவசியம் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.

தமிழர் அரசியலைத் தலைமை தாங்கும் அமைப்புகள் இவற்றை உணர்ந்து செயற்பட வேண்டியது தலையாய கடமையாகும்.

ஆனால். 2000ஆம் ஆண்டளவில் தமிழர் அரசியல் நடவடிக்கைக்காக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு சிலரின் கைகளுக்குள் சிக்கித் தவிக்கின்றது.

பல கட்சிகளுக்குள்ளும் பன்முக ஆளுமையுடன் செயலாற்ற வேண்டிய அந்த அமைப்பு ஒரு கட்சி (அந்த அரசியல் கட்சியை நாம் குறைகூறவில்லை) சார்ந்து ஒரு சிலரின் நன்மைக்காக செயலாற்றுகிறது.

ஒரு கட்சியின் தலைவரை தமிழர் பண்டிகைக்குக் கூப்பிட்டுச் சாப்பாடு கொடுத்தால், அதுதான் அரசியல் வெற்றி என்று நினைக்கிறார்கள். அந்தக் கட்சித் தலைவர் ஆளும் கட்சிதானா என்றால் அதுவுமில்லை.

ஒரு கட்சிக்கு ஒரு இனம்சார் அமைப்பு பகிரங்கமாக ஆதரவளிக்கும்போது, அந்த குறிப்பிட்ட கட்சி தோல்வியடைந்தால் பாதிக்கப்படப்போவது அந்த இனமே அன்றி அந்தச் சிலர் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

தமிழர்களை வேட்பாளர்களாக ஒரு கட்சி தேர்தலில் நிறுத்தும்போது அவருக்குச் சாதகமான தொகுதியைத் தெரிவு செய்ய வேண்டும்;. ஆனால் இவ்விடயத்தில் அரசியல் சதிகள் இடம்பெறுவதுபோலத் தெரிகிறது.

தமிழர் ஒருவர் தாம் சார்ந்தn கட்சியில்; குறிப்பிட்ட ஒரு தொகுதியில் போட்டியிட்டால்வெற்றி பெற முடியும், என்று ஆயத்த நிலையில் இருக்கும்போது அவருக்கெதிராக இன்னோரு கட்சிய மற்றொரு தமிழரை நிறுத்துகிறது. இது தமிழ் சமூகத்தை பிளவுபடுத்தும் ஒரு செயல் இதற்குத் தமிழர்கள் இடமளிக்கக்கூடாது.

கனடாவில் எந்த ஒரு கட்சியும் தமிழர்களுக்கு இலகுவாக வெல்லக்கூடிய தொகுதியைவழங்குவதற்கு; இன்னமும் ஆயுத்தமாகவில்லை என்றே தோன்றுகிறது.

16000 வரையான தமிழரின் வாக்குகளையுடைய றூஜ்-றிவர் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் இரு தசாப்தத்திற்கு மேலாக பா.உ.ஆக இருந்த டெரிக் லீ அண்மையில் ஓய்வுபெற்றார். அந்தத் தொகுதியில் தமிழ் வாக்காளர்கள் அதிகமாக இருந்தும் தமிழர் தரப்பால் நிரப்ப அந்தக் கட்சி முன்வரவில்லை. வேற்றினத்தவர் ஒருவருக்கே அந்த இடம் வழங்கப்பட்டது. தமிழர் தரப்பில் சிலர் மனப்பால் குடித்ததே மிச்சம்.

இத்தொகுதியில் என்டீபி சார்பில் ராதிகா சிற்சபைஈசன் போட்டியிடுகின்றார். இங்கு 2008பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட டெரிக் லீ 23716 வாக்குகளைப் பெற்றிருந்தார். மூன்றாவது இடத்திற்கு வந்த ஏன்.டி.பி. வேட்பாளர் றையன் ஸ்லோன் 5954 வாக்குகளை பெற்றிருந்தார். இருவருக்கும் உள்ள வித்தியாசம் 17762 வாக்குகள்.. கடந்த தேர்தலில் கூடுதலான தமிழர்கள் லிபரல் கட்சிக்குத்தான் வாக்களித்திருப்பார்கள். என்பதை அறிய முடிகிறது. எனவே தமிழ்ச் சமூகத்தினர் முழுமையாக ராதிகாவுக்கு ஆதரவளித்தாலும், வெற்றி பெறுவதற்கு மற்றைய சமூகத்தினரையும் அணுகவேண்டும்.

இத்தேர்தலில் லிபரல் கட்சிக்கான ஆதரவு மிவும் குறைந்துள்ளது கொன்சாவேட்டிவ் கட்சிக்கான ஆதரவு அதிகரிக்கவில்லள ஆனால் என்.டி.பி.க்கான ஆதரவு அதிகரித்துள்ளது. இந்த சாதக நிலைமையை பயன்படுத்துவதற்கு கடுமையாக உழைக்கவேண்டிய தேவை தமிழ் சமூகத்திற்கு உண்டு.

ராகவன் பரஞ்சோதி போட்டியிடும் ஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியில் 2008 பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட மிசேல் சிம்சன் 15480 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். கொன்சர்வேட்டிவ் சார்பில் போட்டியிட்ட கிறேக் குறொம்ரன் 10900 வாக்குகளைப் பெற்று இரண்டாவதாக வந்தார். வித்தியாசம் 4580 வாக்குகள் தான்.

தற்போதைய தேர்தலில் லிபரல் கட்சியின் ஆதரவு குறைந்திருப்பதால் லிபரல் கட்சிக்கான வாக்குகள் குறைவடைய வாய்ப்புண்டு. இச்சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் இப்பகுதியில் வாழ்ந்த தமிழரில்; பெரு;பாலானோர் வேறு பகுதிகளிற்கு வாழச் சென்றுவிட்டனர் ஆத்துடன் கொன்ச்வேட்டிவுக்கான ஆதரவும் குறைந்து என்.டி.பிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.

ஓருங்கிணைந்த தமிழர்களின் அரசியற் செயற்பாடே வெற்றியைத் தேடித்தரும். அது ஈழத்தமிழ் மக்களின் துயரத்தையும் துடைக்கும். தமிழர் போட்டியிடும் தொகுதிகளில் கட்சி பேதமின்றி தமிழருக்கே வாக்களிப்போம். தமிழர் போட்டியிடாத தொகுதிகளில் தமிழருக்கு ஆதரவு அளித்தவரை அல்லது அதரவு அளித்த கட்சியை இனங்கண்டு அவ்வேட்பாளருக்கு வாக்களிப்போம்.

வாக்களி தமிழா வாக்களி!

நன்றி: கனடா உலகத்தமிழர்
- நெற்றிக்கண்

Comments