மே 18 சிறி லங்கா அரசால் தமிழீழ மக்கள் மேல் 1917லிருந்துஆரம்பிக்கப்பட்ட இனப்படுகொலையின் உச்சக்கட்ட நாள், உலக புவியியல் அரசியலில் சில உலக நாடுகள் தமது சொந்த நலம் கருதி, தமிழ் மக்களின் அழிவை கண்டும் பார்வையாளர்களாக இருந்த நாள்.
ஆகஸ்ட் 6;. 2006யில் மூதூரில் பிரெஞ்சு மனித நேய அமைபிற்கு தொண்டர்களாக தமிழீழ மக்களுக்கு தொண்டு செய்த 17 தமிழீழ மக்கள் தொண்டர்கள் சிறி லங்கா இராணுவத்தால் ஒவ்வொருவராக தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டார்கள். மே 16 ஆம் திகதி வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்களை சித்திரவதை செய்து கொன்றார்கள்;. வன்னிப் பிரதேசத்தில் அக்டோபர் 2008ல் இருந்து ஜூன் 2009 வரை அந்த பகுதியில் வாழ்ந்த 146,679 தமிழீழ மக்கள் சிறி லங்கா அரசின் கணக்கெடுப்பின் படி காணவில்லை.
சிறி லங்காவில் நடந்தது இனப்படுகொலையா, தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்க இந்த உலக நாடுகளின் மக்கள் என்ன செய்யலாம் என்ற தலைப்பில் பிரான்சு, கிளிச்சி லா கரேன் மாநகரசபையில் சர்வதேச பிரிவு, அந்த நகரின் தமிழ் சங்கத்தின் ஆதரவுடன் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையினரால் விவாதமும், கலந்துரையாடலும் நடாத்தப்பட்டது.
ஆகஸ்ட் 6, 2006ல் மூதூரில் நடைபெற்ற படுகொலை பற்றி பிரெஞ்சு நாட்டு பத்திரிகையாளர் எடுத்த பிரான்சில் சிறந்த ஆவணப்படத்துக்கான பரிசை பெற்ற படத்தின் ஒளிபரப்புடன் இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பல பிரான்சு நாட்டு அரசியல் கட்சிகள், மனித நேய அமைப்புகளின் அங்கத்தவர்களும் இந்த ஆவணப்படத்தை பார்த்த பின் சில நிமிடங்கள் எதுவும் பேசமுடியாது இருந்தார்கள், தமிழர்களின் வரலாற்றை அறிய பல கேள்விகளை கேட்டார்கள் சிறி லங்கா போன்ற அரசு தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தமிழ் மக்களுக்கான ஆதரவை தாம் தருவோம் என்று கூறினார்கள்.
இன்று உலக மாற்றத்தில் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீன அரசை பிரகடனப்படுத்தும் செயலில் பல நாடுகள் இறங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி இரண்டு இனம் ஒரு நாடு என்ற கோட்பாட்டுப் படி பாலஸ்தீன அரசு அங்கீகரிக்க பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார், லிபியாவில் இருக்கும் விடுதலைக்காக போராடும் அரசுக்கு பிரான்சு ஆதரவு தெரிவித்து செயல் படுகிறது, கேர்னல் கடாபிக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவிறாந்து விட்டுள்ளது, இவை எமது உரிமை போராட்டத்துடன் ஒப்பிட முடியாவிட்டாலும் உலக மாற்றங்களுக்கு இடையே இன்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டு இருக்கும் அறிக்கையை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
இது இன்று எமது தாயாக மக்கள் எங்கள் கையில் தந்திருக்கும் கடமை. எமது விடுதலையை நாம் தான் பெற்றுத்தரவேண்டுமேயொழிய எமது உரிமையை எங்களுக்கு கொண்டு வந்து தர மாட்டார்கள்.
- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

இன்று பல அராபிய நாடுகளில் பல சர்வதேச நாடுகளால் பாதுகாப்பட்ட அரச தலைவர்களை மக்களின் போராட்டம் தூக்கி எறிந்து ஒரு புதிய உலக மாற்றத்தை அரேபியா நாட்டு மக்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள், அந்த மாற்றங்களுக்கு அமையவே இந்த உலக வல்லரசுகளும் தம்மை மாற்றி கொண்டிருக்கிறார்கள், அதே போல் தமிழ் மக்களும் போராட வேண்டும் என்று கூறினார்கள். இன்று தமிழ் மக்களுக்கு பல அரசியல் கதவுகள் திறந்து இருக்கிறது, இந்த கால ஓட்டத்துக்கு ஏற்ப தமிழ் மக்களின் அரசியல் அணுகல்களும் அதே நேரத்தில் மக்கள் போராட்டமும் இருக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுரிதியது ஓடு மட்டுமல்லாமல் இது போன்ற சந்திப்புகள், ஆய்வுகள் தொடர்து நடத்தும் படி கேட்டுக்கொண்டார்கள்.

Comments