இதற்கான துண்டுப் பிரசுரங்களை சிங்களவர்கள் அச்சடித்து, பிரித்தானியாவில் வினியோகித்தும் வருகின்றனர். இதனைச் தற்செயலாக ஒரு தமிழருக்கும் கொடுத்திருக்கிறார்கள். உலகமே கூடி முள்ளிவாய்க்காலில் பெரும் அழிவுகள் ஏற்ப்பட்டுள்ளது எனக்கூறி போர் குற்ற விசாரணைகளை முன்னெடுக்க முனையும் போது, சிங்கள இனவாதிகள் தமிழர்களைக் கொண்ற நாளை ஒரு வெற்றிநாளாகப் பிரகடனப்படுத்துவது படு கேவலமான அருவருக்கத்தக்க விடையாமாக உள்ளது.
பிரித்தானியத் தமிழர்களின் பலம் தெரிந்திருந்தும் இந் நிகழ்வுகளை நடத்தியே தீருவோம் என சில சிங்கள இனவாதிகள் ஆர்பரித்தவண்ணம் உள்ளனர்.
பின்வரும் இடத்தில்தான் இந் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இந்த கட்டிட உரிமையாளரை(HALL & HOTEL) எல்லோரும் தொடர்புகொண்டு உங்களது எதிர்ப்பைத் தெரிவியுங்கள். தொலைபேசி இலக்கம், மோபைல் இலக்கம், மற்றும் மின்னஞ்சல் முகவரிகளும் இங்கே இருக்கிறது. தமிழர்கள் மே 18 ஏன் அனுஷ்டிக்கிறார்கள், சிங்களவர்கள் எவ்வாறு தமிழர்களை கேவலப்படுத்த இந் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர் என்பது குறித்து இவர்களுக்கு தமிழ் மக்கள் நிச்சயம் விளக்கவேண்டும் !
Visit us at:
366A Stag Lane
Kingsbury
London
NW9 9AA
Telephone:
020 8206 1141
Fax:
020 8204 2852
Email: sales@rnbvenue.co.uk
Telephone Lines are open from 11:00 - 21:00
7 Days a week
Alternate Mobile Contacts:
079814652280
பிரித்தானிய இலங்கைப் பேரவை என்னும் அமைப்பு ஒன்று, மே 18ம் திகதியை சிங்கள வெற்றி நாளாகக் கொண்டாதத் திட்டமிட்டுள்ளது. இந் நிகழ்வுகள் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. லண்டன் கிங்ஸ்பெரியில் உள்ள ஹால் ஒன்றில் இதனைக் கொண்டாட ஏற்பாடாகியுள்ளது. 40,000 பொதுமக்கள் இறந்தும், மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல்போயும், உறவுகளை இழந்து தமிழர்கள் கதி கலங்கி நிற்கும் இம் மாதத்தில் சிங்கள இனவெறியர்கள் தமது வெற்றிக்கொண்டாட்டங்களை பிரித்தானியாவில் நடத்தவிருப்பது, தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்க்கும் விடையமாகவே கருதப்படுகிறது.
Comments