கிடைக்கப் பெற்ற முடிவுகளின் படி கண்சவேட்டிவ் கட்சி 165 ஆசணங்களையும் புதிய ஜனநாயகக் கட்சி 104 ஆசணங்களையும், லிபரல் கட்சி 34 ஆசணங்களையும், புளக் கியூபெக்குவா 2 ஆசணங்களையும் பெற்றது. பசுமைக் கட்சி 1 ஆசணத்தையும் தக்க வைத்துள்ளன.
ரொறன்ரோ பெரும்பாகத்தில் இடம்பெற்ற தேர்தலில் ஸ்காபரோ ரூச் ரிவர் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா சிற்பசபேசன் 17200 வாக்குகளை பெற்று புதிய ஜனநாயகக் கட்சியின் வாக்கு வங்கியை மேற்படி தொகுதியில் கணிசமாக அதிகரிக்க வைத்து இத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் 4900 வாக்குக்களைப் மாத்திரமே இந்தக் கட்சி பெற்றிருந்தது.
இதர பல தொகுதிகளிலும் புதிய ஜனநாயகக் கட்சி, கண்சவேட்டிவ் கட்சி, லிபரல் கட்சி ஆகியன மிக நெருக்கமான வாக்குகளைப் பெற்றிருந்ததுடன், நூற்றுக்கணக்கான வாக்குகளே வெற்றியை நிர்ணயித்தன.
இதேவேளை கண்சவெட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட கவன் பரஞ்சோதி அவர்கள் 11,039 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக புதிய ஜனநாயகக் கட்சி தெரிவாகியுள்ளது. இதன் பிரகாரம் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக் லெய்டன் எதிர்க்கட்த் தலைவராகியுள்ளார். புதிய ஜனநாயகக் கட்சி உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக தெரிவாவது இதுவே முதற்தடவை.
கண்சவேட்டிவ் கட்சி பெரும்பாண்மை அரசை அமைப்பது அகதிகளுக்கும் புதிய குடிவரவாளர்களிற்கும் பாதகமாக அமையும் என்பதும் கடுமையான சட்டங்களை கொண்டுவர வழிவகுக்கும் என்பதும் கருத்தாகவுள்ளது.
லிபரல் கட்சியின் சார்பில் தமிழர் ஒருவரை, ராதிகா போட்டியிட்ட தொகுதியில் நிறுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி பெற்றிருந்தால் தமிழர்களின் வாக்குப் பிரிந்து கண்சவெட்டிவ் கட்சியே இத் தொகுதியைக் கைப்பற்றி தமிழர் ஒருவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவாவதை, இவ்விடயத்தில் ஆழமாகச் சிந்தித்துச் செயற்பட்ட கனடியத் தமிழ்க் காங்கிரஸ் போன்ற அமைப்புக்களின் முயற்சி இவ்வாறான ஒரு நிலை தோன்றாமல் தவிர்த்தது.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை புதிய ஜனநாயகக் கட்சியே பெருமளவிலான வாக்குகளைக் கவர்ந்துள்ளது. 70 ஆசணங்களை மேலதிகமாக பாராளுமன்றத்தில் பெற்று இரண்டாவது பெரும் கட்சியாக வந்துள்ளது. அதுபோன்றே பசுமைக் கட்சியும் முதன்முறையாக பாராளுமன்றத்தில் ஒரு ஆசணத்தைப் பெற்றுள்ளது.
VOTE FOR
Rathika Sitsabaiesan
NDP Candidate Scarborough Rouge River
கனடாவின் ஸ்காபுறோ ரூஜ் ரிவர் தொகுதியில் என்டிபி கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் ராதிகா சிற்பசபேசன் ஈழத்தமிழர் பிரச்சனைகள் தொடர்பாக மட்டுமல்ல கனடாவின் தேசியப் பிரச்சனைகள் தொடர்பாகவும் மிகவும் கரிசனை கொண்டு செயற்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
http://www.youtube.com/user/rathikaTV
கடந்த புதன் கிழமையன்று மாலை அவரது தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ் மொழி மூலமான ஊடகங்களின் பிரதிநிதிகளை சந்தித்த கூட்டத்தில் உரையாடியபோதே இதை எம்மால் அவதானிக்க முடிந்தது.
என்டிபி கட்சியின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராகவும் ஈழத்தமிழர்களின் விடயங்கள் தொடர்பான என்டிபி கட்சியின்; பேச்சாளராகவும் விளங்குகின்ற ராதிகா சிற்சபேசன் ஈழத்தமிழர் பிரச்சனைக்ள தொடர்பாகவும் இலங்கையில் அரசாங்கத்தின் கெடுபிடிகளால் கஸ்டமான வாழ்வையும் உயிராபத்துக்களையும் எதிர்கொண்டு வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் உறவுகளின் விடிவிற்காக எதிர்காலத்தில் என்டிபி கட்சி உரத்துக் குரல் கொடுக்கும் வகையில் தான் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தபோது, ஏனைய கட்சிகளின்; பிரதிநிதிகள் நமக்கு அளித்த வாக்குறுதிகளிலும் பார்க்க இந்த செய்தி நமக்கு ஆறுதல் தருவதாக இருந்தது.
அத்துடன் கனடாவின் பல தேசியப் பிரச்சனைகள் தொடர்பாகவும் நமது என்டிபி வேட்பாளர் ராதிகா மிகுந்த தெளிவு கொண்டவராக காணப்படுகின்றார். கனடாவின் அனைத்து பிரஜைகளும் அனுபவிக்கும் வேலையில்லாப் பிரச்சனைகள் மற்றும் ஓய்வூதியப் பிரச்சனைகள், வீடில்லாப் பிரச்சனைகள், கனடாவிற்கு புதிதாகக் குடியேறும் குடிவரவாளர்களின் பிரச்சனைகள் ஆகியவற்றையும் நன்கு தெளிந்து விளங்கியபடி ராதிகா அன்றை பத்திரிகையாளர் சந்திப்பில் தெளிவாக உரையாற்றினார்.
தமது தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழ் வாக்காளர்களை சந்திக்கும் போது அவர் தெரிவிக்கும் கருத்துக்களும் அதே வேளையில் வேற்று இன மக்களை சந்திக்கும் போது அவர்களை கவரும் வகையில் அவர் தெரிவிக்கும் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களும் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் காணப்படுகின்றன. இது ராதிகாவின் வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும் என்று கட்டியம் கூறுகின்றது.
அவரது என்டிபி கட்சியின் தலைவர் ஒருவர் தான் கடந்த 2009 ம் ஆண்டு நமது தமிழ் மக்கள் வன்னியில் நமது மக்கள் இலங்கை அரசாலும் ஏனைய நாடுகளின் படைகளினாலும் கொல்லப்பட்டபோது ஒட்டாவா மாநகரில் நமது மக்கள் நடத்திய கவனயீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ராதிகா அவர்களோடு அடிக்கடி தொடர்பு கொண்டு நமது ஈழத்தமிழ் மக்களின் சிரமங்கள் தொடர்பாக தமது கட்சித் தலைவர் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். புதன்கிழமையன்று ராதிகா நடத்திய தமிழ் மொழி சார்ந்த ஊடகங்களுடனான பத்திரிகையாளர் மாநாடு மிகுந்த பலனுள்ளதாக அமைந்தது.
http://www.facebook.com/rathikaspagehttp://www.rathika.ca/
Comments