ஐ.நா அறிக்கைக்கு ஆதரவாக கனடாவில் நடை பெற்ற மிகப்பெரும் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு ஆதரவாக கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை ரொறன்டோ நகரில் நேற்று நடத்தினார்கள்.

2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா அறிக்கை பரிந்துரை செய்துள்ளது. அங்கு பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.



ஐ.நா அறிக்கைக்கு ஆதரவான செயற்பாடுகளை அனைத்துலக சமூகம், குறிப்பாக அமெரிக்க மேற்கொள்ளவேண்டும் என தமிழ் மக்கள் தமது போராட்டத்தின் முக்கிய கோரிக்கை என்று கனடா தமிழர் பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதரகமும் அங்கு தான் அமைந்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் வன்னியில் போர் உக்கிரமாக நடைபெற்றபோதும் தமிழ் மக்கள் இந்த பகுதியில் தான் பெரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

Comments