எங்களையும் இப்படிச் சிதைந்து போக விடுவீர்களா ? அல்லது ஒன்று கூடி வருவீர்களா?


உலகில் எட்டுக்கோடி தமிழர்களாம் !
எத்தனை பேர் வருவீர்கள் இந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்த !
எத்தனை பேர் வருவீர்கள் இந்த கொலைகளைக்கண்டிக்க ?
எங்களுடைய எதிர்காலம் என்ன ?
எங்களையும் இப்படிச் சிதைந்து போக விடுவீர்களா ? அல்லது ஒன்று கூடி வருவீர்களா?
கட்டாயம் எல்லோரும் வாங்கோ!

இது படம் அல்ல நிஐம்,

இது விளம்பரம் அல்ல எம் குழந்தைகளின் விசும்பல்,

சென்ற எம் சந்ததியிடம் அடுத்த சந்ததி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாமல் நின்றார்கள், எமது அடுத்த சந்ததி எம்மிடம் அந்த கேள்வியை கேட்பதற்கு நாம் என்ன சொல்லப்போகின்றோம்.

தேசியத்தலைவனின் சுட்டுவிரல் திசையை நோக்கி பயணித்தவர்கள் நாம்.

தம் உயிரை கொடுத்து உலகிற்கு உண்மையை எடுத்து சொன்னவர்கள் அந்த உத்தமர்கள்
மே 18 போர் குற்றநாளும், இன அழிப்பு நாளும்

நாம் எல்லோரும் ஒன்றுகூடுவோம், ஒங்கிக்குரல் கொடுப்போம், தமிழன் என்ற உணர்வை உலகிற்கு காட்டுவோம்.

“ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ’’

தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் - பிரான்சு

Comments