கடைசி நேரத்தில் பிரபாகரனை காப்பாற்ற அமெரிக்கா முயன்றதாக சிலர் நம்புகின்றனர். ஆனால் பிரபாகரனின் மரணத்துக்கு அமெரிக்கா பல வழிகளிலும் உதவியுள்ளது

2001 செப்ரெம்பர் 11 இல் பின்லேடனின் அல்கெய்டா அமைப்பினர் நடத்திய தாக்குதல் தான் புலிகளினதும், பிரபாகரனினதும் வீழ்ச்சிக்குக் காரணமாக மாறியது. இதன் பின்னர் தான் உலகத்தின் போக்கில் முற்றிலும் மாறுபட்ட சுழற்சி ஒன்று ஏற்பட்டது. ஆயுதப்போராட்டம் நடத்தும் அமைப்புகளினது கொள்கைகள் கருத்தில் எடுக்கப்படாமல், எல்லாமே பயங்கரவாதப் போராட்டம் என்ற முத்திரைக்குள் கொண்டு வரப்பட்டது.

இது தான் புலிகளின் வீழச்சியின் தொடக்கம்.அவர்களை உலகநாடுகள் ஒதுக்கி வைத்து, ஓரம்கட்டி இலங்கை அரசின் பொறியில் சிக்கவைக்கக் காரணமாகியது. இந்தவகையில் புலிகளின் அழிவுக்குப் பின்லேடன் ஒருவகையில் காரணமாக அமைந்தார் என்பதில் சந்தேகம் இல்லை. இருவரினது மரணம் பற்றியும் சரியானதும் தவறானதுமான செய்திகள் ஊடகங்களில் வந்தாலும்,இருவருமே ஊடகங்களில் இடத்தை நிறைத்துள்ளனர். அதுமட்டுமன்றி இவர்கள் இருவராலும் உருவாக்கப்பட்ட அமைப்புகளினதும் எதிர்காலமும் என்பது கேள்விக்குறியாகவே மாற்றப்பட்டு விட்டது. இதுவும் கூட மற்றொரு ஒற்றுமைதான். ஆனால் பின்லேடன் தனது மனைவிகள், குழந்தைகளுக்கு தனக்குப் பின் யாரும் அல்கெய்டாவுடன் இணைந்து ஆயுதப்போராட்டம் நடத்தக் கூடாது என்று உயில் எழுத்திக் கொடுத்து விட்டு மரணித்துள்ளார். ஆனால் பிரபாகரன் தான் சார்ந்த கொள்கைக்காக குடும்பத்தோடு உயிர்துறந்துள்ளார்.

- இன்போதமிழ் குழுமம் –

இனி,


பிரபாகரன் பின்லேடன் மரணங்களின் ஒப்பீடு

* சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ஒரு நிகழ்வும்,கடந்தவாரம் நடந்தேறிய ஒரு நிகழ்வும் பரவலாக ஒப்பிட்டுப் பேசப்பட்டு வருகின்றன.

ஒசாமா பின்லேடனின் மரணமும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணமும் பற்றியே இந்த ஒப்பீடுகள் ஊடகங்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கை இராணுவத்தினரின் முற்றுகையில் சிக்கி அங்கு நடந்த சண்டையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் முக்கிய தளபதிகளும் நந்திக்கடலின் ஓரத்தில் மரணத்தை தளுவினர்.

இது நடந்தது 2009 மே 19ம் நாள்.

கடந்த மே 2ம் நாள் அதிகாலை அமெரிக்கப் படையினரின் அதிரடித் தாக்குதலில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்.

இந்த இருவருமே யார் என்று விளக்கம் கூறத் தேவையில்லை என்பதால் நேரடியாக விவகாரத்துக்கு வருவோம்.

இவர்கள் இருவரினதும் மரணம், செயற்பாடுகள் என்பனவற்றுக்கு இடையில் பல ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் உள்ளன.

கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக், பின்லேடனுக்கும், பிரபாகரனுக்கும் இடையில் எந்த வேறுபாடுகளும் இல்லை இருவரும் இரக்கமற்ற பயங்கரவாதிகள் தான் என்று கூறியிருந்தார்.

இது இந்த இருவர் பற்றிய அவருடைய அமெரிக்காவினுடைய நிலைப்பாடு.

இலங்கையில் ஒருவித காய்ச்சல் அண்மைக்காலமாக பரவியுள்ளது.

* அதாவது, பிரபாகரனைக் கொன்றதை அங்கீகரிக்க அமெரிக்கா போன்ற நாடுகள் தயங்குவதான ஒருவித கருத்து வலுவடைந்து வருகிறது. கடைசி நேரத்தில் அவரைக் காப்பாற்ற அமெரிக்கா முயன்றதாகவும் சிலர் நம்புகின்றனர். ஆனால் பிரபாகரனின் மரணத்துக்கு அமெரிக்கா பல வழிகளிலும் உதவியுள்ளது என்பது ஆட்சியில் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் அதை ஏனோ வெளியே சொல்வதில்லை. பின்லேடனைக் கொல்ல வேண்டும் என்பதில் அமெரிக்கா எந்தளவுக்கு உறுதியாக இருந்ததோ அதேயளவுக்கு புலிகள் இயக்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதிலும் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருந்தது. அதனால் தான் புலிகள் பற்றிய ஏராளமாக இரகசியத் தகவல்களை அது இலங்கையுடன் பகிர்ந்து கொண்டது.

புலிகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்கள் கொடுத்து அவர்களை முடக்க முனைந்தது.

அதாவது அமெரிக்காவே புலிகளுக்கு எதிரான போரை உலகளாவிய ரீதியாக மேற்கொண்ட முதல் நாடு.

புலிகளுக்கு எதிரான சர்வதேச வலைப்பின்னலை உருவாக்கியது அமெரிக்கா தான்.

அந்த சர்வதேச வலைப்பின்னலின் முடிவுரை தான் முள்ளிவாய்க்காலில் எழுதப்பட்டது.

இதெல்லாம் கொழும்பின் அரசியல்வாதிகளுக்குத் தெரியாத ஒரு விடயம் அல்ல.

ஆனால் அதையெல்லாம் அவர்கள் மறைத்துக் கொண்டு அமெரிக்கா மீது குற்றங்களை அடுக்கிக் கொள்கின்றனர்.

அரசின் மீதான போர்க்குற்ற அழுத்தங்களை விலக்கிக் கொள்வதற்கு இப்படியொரு குற்றச்சாட்டை அவர்கள் தொடுக்கின்றனர்.

இதுதான் இந்தக் குரல்களின் அடிப்படை நோக்கம் என்பதில எவ்வித சந்தேகமும் இல்லை.

அமெரிக்காவின் பார்வையில் பிரபாகரனுக்கும், பின்லேடனுக்கும் இடையில் வேறுபாடுகள் இல்லையென்றாலும், இலங்கை அரசுக்குள் அப்படியான கருத்து இருக்கிறது என்று கூறமுடியாது.

ஏனென்றால் பின்லேடன் மீதான தாக்குதலை பிரதமர் எ.எம். ஜெயரட்ண வேறொரு கண்ணோட்டத்துடன் கூறியுள்ளார்.

மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானாவின் கருத்து பின்லேடனின் மதிப்பை உயர்த்தும் வகையிலும், அவரை நியாயப்படுத்தும் வகையிலும் வெளியாகியுள்ளது.

பிரபாகரன், பின்லேடன் இருவருக்கும், இவர்களின் கொள்கைகளுக்கும் மக்களாதரவு இருந்த ஒற்றுமையை யாராலும் மறுக்க முடியாது.

பின்லேடனைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய மக்கள் பலரிடம் அவர் இன்னமும் ஹீரோவாகவே இருக்கிறார் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

அதேவேளை, பிரபாகரனுக்கும் உலகளாவிய ஆதரவு தளம் இருந்ததை யாரும் மறுக்க முடியாது.

* அவர்கள் இருவரினது மரணமும் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தே நிகழந்துள்ளது என்ற ஒற்றுமையையும் இங்கு கவனிக்கத்தக்கது.

பின்லேடனின் மரணத்துக்குப் பின்னர் வெளியிடப்பட்ட படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதுபோன்ற சர்ச்சையைத் புலம்பெயர் தமிழரின் ஒருபகுதியினர் பிரபாகரனின் மரணத்தின் பின்னரும் எழுப்பியிருந்தனர்.

இன்னமும் கூட இலங்கை அரசு வெளியிட்ட படங்கள் போலியானது என்று வாதிடுவோர் உலகில் இருக்கத் தான் செய்கின்றனர்.

இப்போது பின்லேடலின் மரணத்தின் பின்னர் வெளிவரும் செய்திகளை,பிரபாகரனின் மரணத்துக்குப் பின்னர் புலம்பெயர் சமூகத்தினரிடையே காணப்படும் ஒருவித குழப்ப நிலையை போன்ற நிலையை உருவாக்கும் எத்தனிப்பாகவே கருத வேண்டியுள்ளது.

அதாவது பின்லேடனின் கொள்கையைப் பின்பற்றுபவர்களின் வீரியத்தைக் குறைக்க அமெரிக்கா கையாளும் உத்தியாகவே தெரிகின்றது.

இது ஒருவகையில் இலங்கையிடம் இருந்து அமெரிக்கா கற்றுள்ள பாடம் என்பதையும் மறுக்க முடியாது.

இன்னொரு பாடத்தை இலங்கையிடம் இருந்து அமெரிக்கா கற்றுள்ளது.

பிரபாகரனின் சடலத்தை அடையாளம் கண்ட இலங்கை அரசு அதை எரித்து சாம்பலைக் கடலில் கரைத்து விட்டதாக அறிவித்தது.

அது எங்கே நடந்தது என்ற விபரத்தைக் கசிய விடவே இல்லை.

அதேபோன்று தான் பின்லேடனின் சடலம் கடலில் எங்கோ அடையாளம் கூறப்படாத இடத்தில் புதைக்கப்பட்டு விட்டதாக அமெரிக்கா கூறுகிறது.

இந்த விடயத்திலும் இருவருக்கும் இடையில் தொடர்புகள் இருந்துள்ளன.

பின்லேடனின் அல்கெய்டாவுக்கும், புலிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக இலங்கை அரசாங்கம் அவ்வப்போது சில கதைகளைக் கூறியிருந்தாலும் அதை நிரூபிக்க எந்த சான்றும் கிடையாது.

ஆனால் பின்லேடனின் நடவடிக்கைகள் பிரபாகரனின் செயற்பாடுகளுக்கும், கொள்கைக்கும் பெரும் இடையூறாக மாறியது உண்மை.

2001 செப்ரெம்பர் 11 இல் பின்லேடனின் அல்கெய்டா அமைப்பினர் நடத்திய தாக்குதல் தான் புலிகளினதும், பிரபாகரனினதும் வீழ்ச்சிக்குக் காரணமாக மாறியது.
இதன் பின்னர் தான் உலகத்தின் போக்கில் முற்றிலும் மாறுபட்ட சுழற்சி ஒன்று ஏற்பட்டது.

ஆயுதப்போராட்டம் நடத்தும் அமைப்புகளினது கொள்கைகள் கருத்தில் எடுக்கப்படாமல், எல்லாமே பயங்கரவாதப் போராட்டம் என்ற முத்திரைக்குள் கொண்டு வரப்பட்டது.

இது தான் புலிகளின் வீழச்சியின் தொடக்கம்.

அவர்களை உலகநாடுகள் ஒதுக்கி வைத்து, ஓரம்கட்டி இலங்கை அரசின் பொறியில் சிக்கவைக்கக் காரணமாகியது.

இந்தவகையில் புலிகளின் அழிவுக்குப் பின்லேடன் ஒருவகையில் காரணமாக அமைந்தார் என்பதில் சந்தேகம் இல்லை.

பின்லேடனுக்கும், பிரபாகரனின் நடவடிக்கைளுக்கும் இடையில் பல ஒற்றுமை வேற்றுமைகள் இருந்தாலும், அவர்களுக்கு இடையில் நேரடித் தொடர்பு இல்லை.

பின்லேடனின் செயற்பாடுகள் பிரபாகரனை வீழ்ச்சி வரை கொண்டு சென்றது.

அதேவேளை பிரபாகரனின் மரணம் மற்றும் அதைச் சார்ந்த நிகழ்வுகள், பின்லேடனின் மரணத்தின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவுக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

கொள்கை,கோட்பாடுகள் மீதான விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நேரடித்தொடர்புகள் இல்லாது போயினும், இந்த இருவருக்கும் இடையில் ஏதோ ஒருவித பிணைப்பு இருந்துள்ளது.

இதனால் தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிழ்ந்த பிரபாகரனின் மரணத்தை இப்போது பின்லேடனின் மரணம் நினைவு கூர வைத்துள்ளது.

இதுபற்றி இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் உள்ள ஊடகங்கள் எழுதுகின்றன.

இருவரினது மரணம் பற்றியும் சரியானதும் தவறானதுமான செய்திகள் ஊடகங்களில் வந்தாலும்,இருவருமே ஊடகங்களில் இடத்தை நிறைத்துள்ளனர்.

அதுமட்டுமன்றி இவர்கள் இருவராலும் உருவாக்கப்பட்ட அமைப்புகளினதும் எதிர்காலமும் என்பது கேள்விக்குறியாகவே மாற்றப்பட்டு விட்டது.
இதுவும் கூட மற்றொரு ஒற்றுமைதான்.

ஆனால் பின்லேடன் தனது மனைவிகள், குழந்தைகளுக்கு தனக்குப் பின் யாரும் அல்கெய்டாவுடன் இணைந்து ஆயுதப்போராட்டம் நடத்தக் கூடாது என்று உயில் எழுத்திக் கொடுத்து விட்டு மரணித்துள்ளார்.

ஆனால் பிரபாகரன் தான் சார்ந்த கொள்கைக்காக குடும்பத்தோடு உயிர்துறந்துள்ளார்.

இது இந்த இருவரினது மரணங்களிலும் உள்ள முக்கியமான வேற்றுமை.

கட்டுரையாளர் ஹரிகரன் இன்போதமிழ் குழுமம்

Comments