இலங்கை போர்க்குற்ற விசாரணை மாறி மாறி பந்தெறியும் ஐ. நா.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhQMoBeNWmnYHK95pXciINwcklgzZhkQtIUzOcnqxReJQyH7lUP8nNG6mSYMVUL8g5tIGNrh4Gw9fRVtqZVDrNvYa2_RiMRJERLiLpzP_B8JeOcGMK2M-s4PxKDdVLVbwkwqlRLs6QtxY/s1600/UN%252520panel%252520report.jpgஇலங்கை போர்க்குற்றம் தொடர்பில் அந்த அறிக்கையினை அடிப்படையாக வைத்து நடவடிக்கை ஒன்றினை ஆரம்பிக்குமாறு நிபுணர் குழு கேட்டுக்கொண்டது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் செயலரோ உங்களது பணி முடிந்துவிட்டது நீங்கள் வீட்டிற்கு போகலாம் என கூறி குழுவை கலைத்தார்.
.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பான் கி மூன் அவர்களின் பேச்சாலர் மாட்டின் நெர்ஸ்கி கூறுகையில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையோ அல்லது பாதுகாப்பு சபையோ கேட்டுக்கொண்டால் மாத்திரமே விசாரணை ஒன்றினை ஆரம்பிக்க முடியும் என கூறினார். மேலும் பான் கி மூனி அவர்களிற்கு போதிய அதிகாரம் இல்லை எனவும் கூறினார்.
.
காலம் கடந்து செல்கின்றது என மனித உரிமை அமைப்புக்கள் ஒரு பக்கம் விட்டபாடில்லை. இப்போ ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை குழு தலைவர் ஜோசேப் டைஸ் அவர்களிடம் இன்னசிற்றி பிறஸ் சில கேள்விகளை கேட்டது. அதாவது பான் கி மூன் பொதுச்சபை தன்னைக் கேட்டுக்கொண்டால் விசாரணைக்குழு ஒன்றினை அமைக்கலாமே என கூரியுள்ளாரே ஆகவே நீங்கள் ஏன் பான் கி மூன் அவர்களிடம் எதனையாவது கேட்கவுள்ளீர்களா என கேட்டது.
.
ஜோசேப் டைஸ் இதற்கு பதில் அளிக்கையில்; நாம் எதுவும் கேட்கமுடியாது ஆனால் பான் கி மூன் எம்மை விசாரணைக்குழு ஒன்றினை அமைக்க ஆலோசனை கேட்டால் நாம் பரிசீலிக்க முடியும் என கூறியுள்ளார்.
.
பிரச்சினை இதுதான்:
.
பான் கி மூன் கூறுகின்றார் பொதுச்சபை அல்லது பாதுகாப்பு சபைதான் முடிவு எடுக்க வேண்டும் என்று. ஆனால் ஐ. நா. பொதுச்சபை குழு சொல்கின்றது பான் கி மூன் தான் கருத்தை முதலில் முன் மொழிய வேண்டும் என்று.
.
என்ன நடக்கும்? எதுவுமே இப்போதைக்கு நடக்காது ஏனென்றால் ஐரோப்பாவிலும் ஆபிரிக்காவிலும் உலக தலைவர்கள் பிசியாக உள்ளார்களே.

Comments