பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு நேற்று (18-05-2011) மாலை 6:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் இடம்பெற்றது.
அக வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில், ஈகச்சுடரை கப்டன் நாவலன் அல்லது நிதியரசன் என அழைக்கப்படும் சிவானந்தம் ராஜனிகாந்தின் சகோதரர் சுரேஸ் ஏற்றி வைத்தார்.
அரங்க நிகழ்வுகள் இடம்பெற்ற அதேவேளை, முள்ளிவாய்க்கால் உட்பட தாயகத்தில் இடம்பெற்றுவரும் இனவழிப்பில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான மலர் வணக்கம் இடம்பெற்றது. இவற்றுடன் பாடசாலை சிறுவர்கள் மற்றும் திருமதி றூபி குமார், திருமதி நிவேதா உதயராஜன், மற்றும் ஜெயவாணி அச்சுதன் ஆகியோர் வழங்கிய அரங்க நிகழ்வும் இடம்பெற்றது.
நிகழ்வுகளின் நடுவே அரங்கத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த ஈகச்சுடர் ஏற்றப்பட்டு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் மீது உறுதி எடுக்கப்பட்டதுடன்,முள்ளிவாய்க்கால் பாடல் ஒன்றும் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
தமிழர் இனவழிப்பு நினைவுநாளாகிய நேற்றைய நிகழ்வில் பல தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்து தமது ஆதரவுகளை வழங்கியதோடு பல செயற்திட்டங்களை பொறுப்பேற்றும் செய்திருந்தனர்.
பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பாக லலிந்திக்கா விஜயநாதன் ஆங்கிலத்தில் ஆரம்ப உரை நிகழ்த்திருந்தார்.
பிரித்தானிய தமிழ் இளையோர் சார்பாக ஆர்.பைரவி, மனித உரிமையாளர் ஹியூகோ சால்ரன், பிரித்தானிய அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சியான தாராண்மைவாதக் கட்சியின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சைமன் ஹியூஸ், பிரித்தானிய தேசிய ஆசிரியர் சங்க உயர்மட்ட உறுப்பினர் மார்டின் பவல் டேவிஸ், லண்டன் அதிகார சபையைச் சேர்ந்த றோஜர் ஈவான்ஸ், அக்ட் நவ் அமைப்பின் இயக்குனர் ரிம் மார்ட்டின், மற்றும் டெபோறா லெங், போரை நிறுத்துவதற்கான பரப்புரை அமைப்பின் உறுப்பினர் ஜோன் றைஸ், ஹார்லோ தொகுதி ஆளும் மரபுவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் றொபேட் ஹாபொன், ஈலிங் நாடாளுமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மாவின் நாடாளுமன்ற செயலரும், ஈலிங்; நகரசபை உறுப்பினருமான ஜூலியன் பெல், லண்டன் தொகுதியைச் சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களான தொழிற்கட்சியின் குளோட் மோர்ஸ், தாராண்மைவாதக் கட்சியின் பரோன்ஸ் லுட்போர்ட், ஈஸ்லிங்ரன் வடக்கு தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரமி கோர்பன், பசிட்லோ பிரதேச தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மான், கிங்ஸ்ரன் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக அரசியல் மற்றும் மனித உரிமைகளுக்கான விரிவுரையாளர் அன்றூ கிக்கின்பொட்டம், சவுத் என்ட் பிரதேச சபை உறுப்பினர் கலாநிதி றொபின், இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பின் ஜனனி ஜனநாயகம், பிரித்தானியா தமிழர் பேரவை சார்பாக ரவிக்குமார், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ்,ஜே.இம்மானுவேல் அடிகளார் ஆகியோர் உரையாற்றினர்.
இதேவேளை, அனைத்துலக போர்க்குற்ற சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் வகையில் பிரித்தானிய தமிழர் பேரவை முன்னெடுக்கவுள்ள பரப்புரையை, ஆளும் மரபுவாதக் கட்சியின் இல்போர்ட் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் ஆரம்பித்து வைத்து உரையாற்றி இருந்தார்.
நிறைவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரனின் உரை ஒலி வடிவில் ஒலிபரப்பப்பட்டது.
- முள்ளிவாய்க்கால் வெளியில் மூச்சாக கலந்த ஆயிரம் ஆயிரம் எம் சொந்தங்கள் மீது உறுதி!
- அடக்குமுறை ஆக்கிரமிப்பின் கீழ் மாற்றுவலுவுள்ளோர் ஆக்கப்பட்டு தவிக்கும் ஆயிரம் ஆயிரம் எம் சொந்தங்கள் மீது உறுதி!
- அன்னை, தந்தை இழந்து இளமையிலே தனிமையாக்கப்பட்ட ஆயிரம் ஆயிரம் எம்மினக் குழந்தைகள் மீது உறுதி!
- சிங்கள ஆக்கிரமிப்பால் நாதியற்றோராகி சொந்த நாட்டில் தவிக்கும் எம் சொந்தங்கள் மீது உறுதி!
- தாய் மண் மீட்கும் புனிதப் பணியில் விதையாகிய எம் வீர மறவர்கள் மீது உறுதி!
எம் தாய் மண்ணின் விடுதலை கிடைக்கும்வரை எம்மினத்தின்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்தும் போராடுவோம். இது அந்த முள்ளிவாய்க்கால் மண் மீது உறுதி!
"தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்"
என அனைத்துமக்களும் ஒருமித்த குரலில் உறுதியேற்றனர்.
International probe into Sri Lanka’s war crimes urged at British rally
[TamilNet, Thursday, 19 May 2011, 02:56 GMT]A vigil in London commemorating the tens of thousands of Tamils massacred two years ago by Sri Lanka’s forces in the final months of the island’s war was addressed Wednesday by parliamentarians from all three major political parties and representatives of leading UK trade unions, rights and peace campaigns, as well as representatives of several Tamil Diaspora organisations, with many speakers calling for an international investigation into the atrocities and recognition of Tamil self-determination and Tamil Eelam. The British Tamil Forum (BTF), with the support of other diaspora groups has organised the Mu'l'livaaykkaal Remembrance event. Braving rains, over twelve thousand people attended the Trafalgar Square event in the course of the evening, the organizers said, citing police liaison officers.
Tamil expatriates and non-Tamil supporters converged on Trafalgar Square between 6 and 8.30 p.m., crowding into its central well and the steps to the National Gallery.
Many brought with them the Tamil Eelam flag and streamers in the Tamil colours of red and yellow, which stood out against the dark clothing worn by the crowd.
The central theme of the vigil was the need for an international investigation into Sri Lanka’s war crimes, crimes against humanity, and genocide, organizers said, the importance of which they said had been underscored by recently released report by United Nations expert panel.
The event began with a minute’s silence to remember all those who had died in Sri Lanka’s genocide. A mother of two fallen Tamil freedom fighters lighted the Flame of Sacrifice at the event accompanied by the singing of a powerful and stirring song composed specifically for the London event echoing across Trafalgar square and the surrounding streets.
Amongst the speakers representing Tamil Diaspora organisations were Father S. J. Emmanual of Global Tamil Forum (GTF), Ravi Kumar of the British Tamils Forum (BTF) Bairavi Ratnabal of Tamil Youth Organisation (TYO) and Jan Jananayagam of Tamils Against Genocide (TAG).
Early in the event Lalinthika Vijayanathan explained the BTF’s purpose. Jeyavani Atchuthan of the Transnational Government of Tamil Eelam (TGTE - Democrats) organized and managed the stage events while Bharathy Maheswaran of TYO translated the Tamil speeches into English.
Pre-recorded speeches of Pazha Nedumaran, the veteran Tamil nationalist leader of Tamil Nadu and of V. Rudrakumaran of TGTE were also broadcast on the occasion.
Wednesday’s event was also meant to underline the Tamil nation’s unity in defiance against Sri Lanka’s oppression and in the pursuit of justice for Colombo’s mass atrocities, organizers said.
British parliamentarians who addressed the vigil included Robert Halfon (Conservative), Lee Scott (Conservative), Jeremy Corbyn (Labour), John Mann (Labour), Adrian Bailey (Labour and Cooperative) and Simon Hughes (Liberal Democrat), as well as Members of the European parliament Claude Moraes (Labour) and Baroness Ludford (Lib-Dems).
[The Conservative and Liberal Democrat parties are Britain’s ruling coalition; the Labour Party is the main opposition. Some MPs are endorsed by both the Labour and Cooperative parties and use the joint title, though many more Labour MPs, including its leader Ed Miliband, are also members of the Cooperative party, but are not endorsed as representatives by both].
Notably, the Tamil vigil was addressed by representatives of the Stop the War Coalition and the National Union of Teachers (NUT), both of which are amongst the most prominent social movements in Britain, [The former is one of the largest peace movements; the latter is an important trade union], as well as Campaign Against Criminalising Communities (CAMPACC).
The Conservative MPs, Halfon and Scott, both of whom are also members of Britain’s Jewish community, expressed their outrage at Sri Lanka’s genocide of the Tamils and its militarized internment camps, making pointed reference to their Jewish heritage. They also signed the BTF’s petition calling for an international investigation and urged their parliamentary colleagues to do the same.
Britain’s particular role in Sri Lanka’s crisis drew comment from several of the speakers.
While Father Emmanuel welcomed Britain’s recent support for accountability for mass atrocities, other speakers recalled London’s longer-standing support for Colombo’s practices and policies.
John Rees, co-founder of the 'Stop The War Coalition', pointed out that world powers routinely prioritized their interests over the suffering of ordinary people and noted how they had refused to intervene as Sri Lanka was carrying out mass slaughter in 2009, despite the mass protests of Tamils.
Dr. Andrew Higginbottom, Principle Lecturer in Human Rights at Kingston University, was even harsher, blasting Britain’s Imperial rule as well as its inaction during the mass killings of 2009.
In a strident speech, he reminded the crowd that Trafalgar Square is a monument to British colonial slaughter; pointing to a statue of Major-General Sir Henry Havelock under whom tens of thousands of Indians were killed during British rule.
Jan Jananayagam said 2009 was a particularly British failure, as it was the colonial British state, which also established Sinhala dominance over the Tamils and set in train the events which culminated in the mass slaughter.
Noting that those at the vigil had gathered to commemorate 40,000 lives that were each precious to the Tamil people, she reaffirmed Tamil determination to ensure justice was served for them all.
To further mark the second anniversary of Mu'l'livaaykkaal slaughter, BTF also launched at the event a new campaign, titled the ‘I-campaign’, to build support for an International Independent Investigation (or 3 ‘Is’, hence the name), using the slogan “Open your Is on Sri Lanka.”
John Rees also urged support for the ‘Boycott Sri Lankan Cricket’ campaign recently launched by TYO and which has escalated with the Sri Lankan team’s arrival for a tour of England.
Martin Powell Davies, of the National Union of Teachers, focused particularly on the plight of Tamil children during the final months at Mu'l'livaaykkaal and the psychological and physical damage inflicted by Sri Lanka’s offensive.
Pledging the NUT’s continued support, he called on other British trade unions to support the Tamils’ struggle for freedom, and urged Tamils in turn to support the unions in their campaigns for the rights of workers.
Tim Martin, director of campaign group ‘Act Now’, meanwhile announced a stepping up of its awareness campaign using celebrity endorsement to highlight Sri Lanka’s atrocities. He warned that despite the release of the UN report recognizing Sri Lanka’s atrocities against the Tamils, this was not a time for complacency, but an escalation of pressure for international pursuit of justice.
As the vigil progressed, and the speakers addressed the gathering, those participating were able to place flowers before photographs of some of the 40,000 people killed in Mu'l'livaaykkaal in 2009.
Comments