கடந்த 12ம் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றில், இலங்கை குறித்த விவாதம் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி இருந்தனர். இதில் பேசிய பிரான்ஸ் நாட்டு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் டெய்லி கரிமா, இலங்கையில் இன அழிப்பு நடந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். அதனை எதிர்த்த அயர்லாந்தின் உறுப்பினர், சார்லஸ், இன அழிப்பு என்ற வார்த்தையை திருப்பப் பெறவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இருப்பினும் அதனை மீளப்பெற பிரான்ஸ் நாட்டு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் டெய்லி கரிமா மறுத்துவிட்டார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய, மற்றுமொரு அயர்லாந்து உறுப்பினர் இலங்கை அரசைப் புகழ்ந்ததோடு டெய்லி கரிமாவுக்கு எதுவும் தெரியாது என்றும், அவர் கூறும் தரவுகள் ஆதாரங்கள் அற்றவை எனவும் வாதிட்டார். சிறையில் இருந்த 2 லட்சம் தமிழர்களை இலங்கை அரசு வெளியே விட்டதால் அங்கே இன அழிப்பு நடைபெறவில்லை என அவர் வாதிட்டார். இருப்பினும் டெய்லி கரிமா அவர்கள், அதற்கு சரியான பதிலைக் கொடுக்கவில்லை. அடிப்படையில் இலங்கையில் ஒரு இன அழிப்பு நடைபெற்றுள்ளது என அவர் அறிந்து வைத்திருந்தாலும், அவரிடம் அதற்கான சரியான தரவுகள் இருந்திருக்கவில்லை. பிரான்ஸ் வாழ் தமிழர்கள் டெய்லி கரிமா அவர்களை அணுகி பல விடையங்களை எடுத்துச் சொல்லியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
அவருடைய மின்னஞ்சல் மற்றும் தொடர்புகளுக்கான இணையப் பக்கம் என்பன இங்கே தரப்பட்டுள்ளது. பிரான்ஸ் அமைப்புகளும், தமிழர்களும் நிச்சயம் அவரைத் தொடர்புகொள்வார்கள் என அதிர்வு இணையம் நம்புகிறது.
மின்னஞ்சல்: karima.delli@europarl.europa.eu
இணையம் : http://www.karimadelli.com/
Comments