என அனைத்துலக மக்களவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவ்வறிக்கையில்,
சிங்கள அரசினது இனவெறியின் உச்சக்கட்டம் தான் முள்ளிவாய்கலில் 146679 தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள முடியாமல் உள்ளது. சிறீலங்கா பேரினவாத அரசு மே 2009 இல் தமிழின அழிப்பை நடாத்தி ஓராண்டாகியிருந்த பின்னும் அனைத்துலகம் போர் குற்றங்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுத்திருக்காத நிலையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட தமிழினப்படுகொலையை உலகறியச் செய்யவும், அப்படுகொலையில் அநியாயமாகக் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரவும் என மே 18ம் நாளை "போர் குற்றவியல் நாள்" (War Crimes Day) என ஈழத்தமிழ்மக்கள் பிரகடனப்படுத்தியிருந்தார்கள்.
குறிப்பாக போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் அவை வெளிக்கொண்டுவந்துள்ள இவ்வேளையில் ஏப்பிரல், மே மாதங்களை தமிழினப் படுகொலையை நினைவுகூர்ந்து வெளிப்படுத்தும் மாதங்களாகவும், மே 18ம் நாளை போர்க்குற்றவியல் நாளாக உணர்வு ப+ர்வமான முறையில் நினைவு கூர்ந்து, வாழிட நாட்டு அரசுகளுடனானதும் அரச பிரமுகர்களுடனானதுமான தொடர்புகளைப் வலுப்படுத்தி, வெளிநிகழ்வுகள் மூலம் போர்க்குற்ற விசாரணை என்னும் நடவடிக்கைகளை அனைத்துலகம் முன்னெடுக்க ஊக்குவிப்பதற்கும், அவ்வாறு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மூலம் தமிழினப்படுகொலையை உலகறியச்செய்து தமிழினத்திற்கான நியாயமான தீர்வாக அமையக்கூடிய தமிழீழத்தை அனைத்துலகம் அங்கீகரிக்கக் கோரியும் தமிழ்மக்கள் இந்நாளை இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமென்பதை காலம் உணர்த்தி நிற்கின்றது.
தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனித்துப் போன நாள் முதல், தாயகத்தில் வாழுகின்ற
உறவுகளின் குரல் முற்றுமுழுதாக நசுக்கப்பட்டிருக்கின்ற சூழலில் புலம்பெயர்மக்கள்,
தமிழினப்படுகொலையை நினைவு கூருகின்ற ஏப்ரல்-மே மாதங்களிலும் போர்க்குற்றவியல்
நாளை முன்னிட்டும் பல்வேறுபட்ட கவனயீர்ப்பு, ஊர்வலங்கள், ஒன்றுகூடல்கள், உண்ணா
நோன்பு, மிதிவண்டிப் பயணம், பத்திரிகையாளர்கள் மாநாடு, கண்காட்சிகள், கருத்தரங்குகள்
போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
அந்த வகையில் மே முதலாம் நாள் 'நீதிகோரி 1000 கிலோமீற்றர்கள்" என்ற தலைப்பில்
டென்மார்க் நாட்டிலிருந்து செருமனியூடாக நெதர்லாந்து நாட்டில் உள்ள அனைத்துலக
குற்றவியல் நீதி மன்றத்தை நோக்கி தமிழினவழிப்புத் தொடர்பான விசாரணையை
முன்னெடுத்து தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரக்கோரி மிதிவண்டிப்பயண கவனயீர்ப்புப் போராட்டத்தை தொடங்கவுள்ளார்கள்.
மே 18ஆம் நாள் நெதர்லாந்து நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்து, அவ்விடத்திலே நீதிகோரி உரிமைப்போராட்டத்தை நடாத்துவதோடு, அனைத்துலக ரீதியாக சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களுடன் மனுவும் கையளிக்கப்படவுள்ளது என்பதை அனைத்துலக மக்களவைகள் அறியத்தருகின்றனர்.
அறிக்கையை பார்வையிட
Comments