நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் தமிழர் தரப்பின் அலட்சியமும்.?

முதன்மை எதிரியை எதிர்க்காமல்...

"நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் தமிழர் தரப்பின் அலட்சியமும்"...............?

".................................................நிபுணர் குழுவின் அறிக்கையை சிறிலங்காவுக்கு எதிரான பொறியாக மாற்றுவதில் தமிழர் தரப்பினால் எந்தளவுக்கு வெற்றி பெற முடியும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனென்றால், இந்த அறிக்கையை தோற்கடிப்பதற்காக சிங்கள அரசு இராஜதந்திர ரீதியாக செய்யும் வேலைகளில் ஒரு சிறு பங்கேனும் தமிழர் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படவில்லை.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்பதைவிட சிங்களத் தேசிய வாதப் பரப்புரைக்கும் நலன்களுக்குமே அது முக்கியத்துவம் கொடுக்கிறது. ஐலன்ட்டில் வெளியான அறிக்கையின் ஒரு பகுதியை வைத்துக் கொண்டு தான், மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் சிங்களவர்களை உசுப்பி விட்டுள்ளது.எதிர்ப்புப் பேரணிகளை நடத்தப் போகிறது.கையெழுத்து வேட்டைகளை தொடங்கியுள்ளது.

கூட்டங்களையும் சந்திப்புகளையும் நடத்தி ஆதரவு தேடுகிறது. ஆனால் தமிழர் தரப்பில் இருந்து இந்த அறிக்கை பற்றி என்ன அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று குரல் கொடுக்கப்படுகிறதேயன்றி, அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அழுத்தமாகக் கூறவில்லை. ஐ.நாவையும், பான் கீ மூனையும் செயலற்ற நிலைக்குள் தள்ள சிங்கள அரசு முனைகிறது.

அந்த முயற்சிகளில் சில முன்னேற்றங்களும் தென்படுகின்றன. இங்கே ஐ.நாவும்,பான் கீ மூனும் முடக்கப்படும் நிலை ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்படப் போவது என்னவோ தமிழர்கள் தான். தமிழர்களின் இனப்படுகொலைகள் இத்தகையதொரு கட்டம் வரை வந்திருப்பது பெரியதொரு விடயம் தான். இதுபோன்று தமிழர்கள் படுகொலைகள் முன்னெப்போதும் உலகின் கவனத்தை ஈர்த்ததில்லை. இந்த சாதகமான நிலையை நழுவ விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இந்த விவகாரத்தை அனைத்துலக நலன்களுக்கு பலிக்கடாவாக்குவதற்கு சிங்கள அரசு முனைகிறது. பான் கீ மூனின் தனிப்பட்ட நலன்களுக்கும் கூட இது பலியாக்கப்படலாம். இப்படி பல்வேறு நெருக்குவாரங்கள் உள்ள நிலையில் சிங்கள அரசின் எல்லாவிதமான முயற்சிகளையும் தோற்கடித்தே தமிழர்களால் நீதிப் பெற முடியும். அதற்கு உலகளாவிய போராட்டங்களை முன்னெடுக்க தமிழர் தரப்பு முன்வர வேண்டும்.

அது சிங்கள அரசின் எதிர்ப்பை வலுவிழக்கச் செய்யும் வகையிலானதாக மட்டுமன்றி - தமிழர் தரப்புக்கு நீதியை நிலை நாட்டுவதற்கானதாகவும் இருக்க வேண்டும்........................................."

 இந்த விவகாரத்தை அனைத்துலக நலன்களுக்கு பலிக்கடாவாக்குவதற்கு சிங்கள அரசு முனைகிறது. பான் கீ மூனின் தனிப்பட்ட நலன்களுக்கும் கூட இது பலியாக்கப்படலாம். இப்படி பல்வேறு நெருக்குவாரங்கள் உள்ள நிலையில் சிங்கள அரசின் எல்லாவிதமான முயற்சிகளையும் தோற்கடித்தே தமிழர்களால் நீதிப் பெற முடியும். அதற்கு உலகளாவிய போராட்டங்களை முன்னெடுக்க தமிழர் தரப்பு முன்வர வேண்டும். அது சிங்கள அரசின் எதிர்ப்பை வலுவிழக்கச் செய்யும் வகையிலானதாக மட்டுமன்றி - தமிழர் தரப்புக்கு நீதியை நிலை நாட்டுவதற்கானதாகவும் இருக்க வேண்டும்.........................................

“கேளுங்கள் தரப்படும் - தட்டுங்கள் திறக்கப்படும்- தேடுங்கள் கிடைக்கும்“ – இயேசு கிறிஸ்து

- இன்போ தமிழ் குழுமம் -

இனி,

உணருமா உலகத்தமிழினம்:

Comments