இரத்தத்தை உறையவைக்கும் கணங்களின் பகிர்வு

string(1031) "Smarty error: [in evaluated template line 15]: syntax error: unrecognized tag: பின் அவரிடம் பணிவாக கேட்டோம் உங்கள் இழப்புக்களையும் வேதனைகளையும் ஞாபகப்பபடுத்தி வேதனைப்படுத்தியதட்கு மன்னிப்பு கேட்கிறோம்,ஆனால் உங்களுக்கு நடந்த கொடூரத்தை உலகிற்கு கொண்டுவருவதே எங்கள் பணி.தயவுசெய்து உங்களுக்கு நடந்த கொடூரத்தை உலகிற்கு வெளிக்கொண்டு வர உதவுங்கள் .என்று மீண்டும் கேட்டோம் .அவர் கண்ணைத்துடைத்து விட்டு தொடர்ந்தார் (Smarty_Compiler.class.php, line 446)" string(118) "Smarty error: [in evaluated template line 15]: syntax error: unrecognized tag '' (Smarty_Compiler.class.php, line 590)"

வன்னியிலே ஸ்ரீலங்கா இராணுவத்தால் 2009 ஆம் ஆண்டு அப்பாவி தமிழ் மக்கள் மீது நடாத்திய இன அழிப்பு நடவடிக்கையில் குறைந்தது நாப்பதாயிரம் அப்பாவி உயிர்கள் கொன்றோளிக்கப்பட்டுள்ளது .என ஐநா வெளியிட்டமை நாம் அறிவோம்.இன்று எஞ்சி இருக்கும் தமிழ் மக்களும் தற்பொழுது ஸ்ரீலங்காவின் ஆயுதக்குழுக்களாலும் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர், வன்னியில் இன அழிப்பின் உச்ச கட்டத்தின் போது ஸ்ரீலங்கா இராணுவத்தால் ஒரு குடும்பத்தில் எச்சமாக விடப்பட்ட ஒரு அப்பாவித்தமிழனின் குடும்ப உறவுகளின் பிரிவின் வலியின் பகிர்வை உங்களுக்கு நாம் கிழே தந்துள்ளோம் வாசித்துபாருங்கள்..........


கே .உங்கள் சொந்த இடம் எது

பதில்.நாங்கள் யாழ்ப்பாணம் .தொண்ணுராம் ஆண்டு வன்னிக்கு வந்தனாங்க பிறகு கிளிநெச்சியில இருந்தனங்க பிறகு கிளிநெச்சி பிரச்சினையால இடம் பெயர்ந்து விசுவமடுவில இருந்தனங்க.பிறகு கடைசியா நடந்த சண்டையால் இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து போனனங்க அதுக்கு பிறகு எத்தினதடவ இடம்பெர்ந்தம் எண்டு சொல்ல முடியாது ஏன் எனில் கணக்கு இல்லை.

கே.உங்கட பெயர் என்ன?

பதில்.ரகு (பெயர் மாற்றப்பட்டுள்ளது )வயது (24) என் குடும்பத்தில் நாலு பேர்.ஆண்கள் இரண்டு,பெண்கள் இரண்டு,முத்தது அண்ணா,அடுத்தது அக்கா,பிறகு நான் கடைசி தங்கச்சி

கே.நீங்க எப்பிடி வன்னியில் போரின் பிடியில் இருந்து வவுனியாவுக்கு வந்து சேர்ந்திர்கள்?

பதில்.நாங்க விசுவமடுவில் இடம் பெயர்ந்து இருந்து உடையார்கட்டு வந்து பின் புதுக்குடியிருப்பு போய்.பிறகு போக்கனைக்கு போய் அங்கு ஒருமாதம் இருந்தம்.


2௦.04 .2009 பொக்கனை சண்டை காரணத்தால் என் குடும்ம்பத்துடன் பொக்கனையை விட்டு இடம் பெயர்ந்துஆமி சுட்டுக்கொண்டு வரும் திசையை பார்த்து எதிர் திசையில் ஓட வெளிக்கிட்டம்,இரவு பன்னிரண்டு ஒரு மணியிருக்கும் கடற்கரை நோக்கி குடும்பத்துடன் ஓடினோம் , பின் அங்கு கடற்படையினர் கடலில் இருந்து கரைய நோக்கி மக்கள் போகும் வெளிச்சத்த பார்த்து சுட்டும்,ரோக்கேட்களை எங்கல நோக்கியும் தாக்கினான் நாங்க கடலுக்க விழுகிறதும் .பின் எழும்பி ஓடுவதும் இப்படி பலதடவை சுட்டனர் பின் கடுமையாக சுட்டதால் நாங்க ஒரு ஐ வங்கருக்கவிழுந்து யார்யார் இருக்குறெயல் எண்டு அப்பா கேக்க ஆள் ஆளுக்கு அப்பா நான் இருக்கிறேன் ,நான் இருக்கிறேன் என்று சொல்லும்போது எந்தன் தங்கையின் குரலை காணவில்லை என்று தேடும் பொழுதே பார்த்தேன் தங்கையை காணவில்லை ,ஐயோ என்று அம்மாவின் கத்தும் சத்தம் ஆரம்பித்தது .உடன் நானும் அப்பாவும் வந்த திசையை நோக்கி ஓடினோம் அங்கு என் தங்கை தலை இன்றி கிடந்ததை என்னால் பார்க்கவே முடியவில்லை, என்னால் ஒன்றுமே செய்யமுடியவில்லை கத்தமட்டுமே முடிந்தது என் தங்கை எங்களுடன் வருகிறாள் என்றுதானே நாம் நினைத்தோம்,யாருக்குத்தெரியும் அவள் இப்படி ஈனசசிங்களவனால் சவால் என்று.


அவள் நினைத்திருப்பால் நாங்கள் விட்டுவிட்டுவிட்டு ஓடி விட்டோம் என்று.அவளால் கத்தவும் முடியாமல் துடித்து துடித்து இறந்திருப்பால்......

(அவரால் கதைக்க முடியவில்லை அவரின் கண்ணிரே எமக்கு பதிலாய் கிடைத்தது,நாம் என்ன இரக்கமற்ற சிங்களவரா,எம் கண்களும் குளமாகியது )

பின் நானும் அப்பாவும் தங்கையின் உடலை தூக்கி கொண்டு அம்மா அக்கா,அத்தன்,பிள்ளைகள் இருக்கும் இடத்தை நெருங்கினோம் அப்பொழுது என் கால்களிடையே எதோ தடக்குப்பட நான் தங்கையின் உடலுடன் மண்ணில் சாய்ந்தேன்.அப்பொழுது என்னைத்தாண்டி ஒரு செல் பீஸ் விரைந்தது.பின் எழுந்து பார்த்தேன் என் காலில் தட்டுப்பட்டது தடி தண்டு இல்லை, ஒரு புதைத்து வெளிப்பட்ட சிறுவனின் உடல் என்று.


அவன் உடல் என் உயிரை காப்பாற்றியது.அப்பொழுது நினைத்தேன் இறந்து கிடந்த உடல் கூடஎன்னொரு உயிரைக்காக்கும் பொது ஏன் இந்த சிங்களவன் மட்டும் அப்பாவி பிச்சுகளை கொள்ளுகின்றான் என்று கத்தி அழுதேன் .பின் என் தங்கையின் உடலை பத்தே பத்து நிமிடம் என் குடும்பத்திடம் காட்டிவிட்டு நானும் அப்பாவும் என் தங்கையின் அந்த பிச்சு உடலை உப்பு மண்ணிலே புதைத்து விட்டு அருகில் அச்சிறுவனின் உடலை மீண்டும் புதைத்து விட்டு தங்கையின் உயிரை கொடுத்து விட்டு எம் உயிரை காக்க பாவி மனிதர்களாய் முள்ளிவாய்க்காளை நோக்கி ஓடினோம், காலை ஐந்து மணியளவில் போய்ச்சேர்ந்தோம்.அம்மாவோ மயங்கிய நிலையிலேயே இருந்தா. அம்மாவை ஒரு இடத்தில் வைத்து தண்ணி தெளித்து மயக்கத்தை தெளிப்பதட்கு ஆமி விடுகிறான் இல்லை பின்னால சுட்டும் குண்டு அடித்தும் வந்துகொண்டு இருக்கிறான் அதனால் அம்மாவை கிடைத்த முடியவில்லை,கால் இயலாத நானும் ,அப்பாவும் ,கால் இல்லாத அத்தானும் மாறிமாறி தூக்கி வருகின்றோம்.


அப்பொழுது அண்ணா,அண்ணி ,மாமாக்கள்,அனைவரும்.எமை கண்டவுடன் கத்திக் கொண்டு வந்தார்கள்அண்ணா அம்மாவுக்கு என்ன நடந்தது என்று கத்தி கொண்டு வந்தான் .என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.நான் அம்மாவுக்கு ஒன்றுமில்லை தங்கச்சிக்குத்தான் அண்ணா என்று காத்த அண்ணாவுக்கு விளங்கி விட்டது ஐயோ என்ற தங்கச்சி என்று காத்த எல்லோரும் காத்த தொடங்கினார்கள்.


பின் இப்படியே அம்மாவை மயக்கத்தில் இருந்து கஷ்ட்டப்பட்டு எழுப்பி தண்ணி கொஞ்சம் கொடுத்து உக்காரவச்சு,அம்மாவை சமாதானப்படுத்தி அம்மாவை மெதுவா என்றாலும் நடக்க செய்வம் என்றால், அம்மா கண் விழிச்சா என்ரபிள்ளை என்று கத்திய படி மயங்குவ பிறகு என்ன செய்வது மினக்கடகூடாது ஆமியும் வந்து கொண்டு இருக்க்கிறான் அம்மாவை அண்ணா தனிய தோளில் துக்கிகொண்டுஅண்ணியிடமும் மாமாவிடமும் அண்ணா சொன்னான் அம்மாக்களை ஒரு இடத்தில் வங்கர் வேட்டிக்கொடுத்துவிட்டு வருகிறேன் என்று குறி விட்டு நடக்க ஆரம்பித்தான்.நாங்க வட்டுவாகளைநோக்கி நடந்தோம் அங்கு மக்கள் அனைவரும் வசிக்கின்றனர் என்று தெரிந்தும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தொடர்ச்சியாக செல்தாக்குதல் விமானத்தாக்குதல்.கொத்துக்குண்டு,எறிகுண்டு ராக்கெட்த்தாக்குதல்,பல்குழல் எறிகணைகள்,என்று உயிரை அழிப்பதற்கான எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தி அப்பாவிபொதுமக்களை கொண்ருகொவித்துக்கொன்று இருந்த நேரம் அது.


நாங்கள் அம்மாவை ஒருஇடத்தி கிடத்திவிட்டு நானும் அண்ணாவும் சின்ன ஐ வங்கர் வெட்ட மண்வெட்டியை வாங்கி வெட்ட வேளிக்கிட்டம்.எம்மால் மண் வெட்டியை பிடித்து வெட்ட முடியவில்லை ஏன் என்றால் இரண்டு நாளாக சாப்பாடுஇல்லை,

மண்வெட்டிதரையில் பட்டுத்தேரிக்குது ஒருபக்கம் ரவுன்ஸ் ,செல் பீஸ் அங்கும் இங்கும் சீறுகின்றது.ஆனால் நாம் அதை எல்லாம் பார்க்க முடியாது ஏன் இனில் அம்மா,அப்பா,அக்கா ,அத்தன், பிள்ளைகள்,அனைவரும் ஒரு பாதுகாப்பு இன்றி மரத்தின் கீழ் இருக்கிறார்கள் நாங்கள் இருவரும் மாறி மாறி ஒருவர் ஒருவராக எழுமான அளவுக்கு வேகமாக வெட்டினோம், ஓரளவுக்கு ஆல்ப்பமாக வெட்டியதும் பின் அனைவரையும் அதில் இருத்திவிட்டு அருகில் என்னொன்று வெட்ட ஆரம்பித்தோம்


அபொழுது ஆமி கடுமயாகத்தாக்க செல்த்தாக்குதாலை செய்யத்தொடங்கினான் அம்மா அப்பா ,அக்க அத்தன் ,பிள்ளைகள் , அண்ணா,அண்ணி , அனைவரும் வெட்டிய வங்கருக்கையும் இருந்தவங்க, ,நான் வெட்டிக்கொண்டு இருந்த வங்கருக்க படுத்திட்டன் கடுமையாக அருகில் செல் விழ வெளிக்கிட்டுட்டு நான் அம்மா ஒருத்தரும் தலைய வெளியில் துக்கதிங்க நான் வங்கருக்க படுத்திருகிறேன்.அப்படியே தலைகளை உள்ளுக்கு வச்சிருங்க, என்று சொல்லும் போதே என் குடும்பத்தை அழிப்பதற்கு எண்டு ஈன சிங்களவன் ஒருசெல்லை அனுப்பியது எனக்குத்தெரியாது. தெரிந்திருந்தால் நானும் அவர்களுடன் இருந்திருப்பேன், அச்செல் எனது குடும்பத்தை இவ்வுலகில் இருந்து அனுப்பிவிட்டது.


சில நிமிடம் நான் என்னையே மறந்தேன்.நான் கத்தினேன் யாராவது வாங்க.. யாராவது வாங்க... என்று. யார் வாருவார் அந்த செல் மழையில். அம்மவைப்பிடித்து அழுவதா? அல்லது என் அப்பாவை பிடித்து அழுவதா?அல்லது என் அண்ணாவை பிடித்து அழுவதா? அல்லது குடும்பமாக செத்துக்கிடக்கும் என் அக்காவை பார்ப்பதா?அல்லது சின்னச்சிறு பச்சிளம் பாலகர்களை துக்கி அழுவாத?யாரைத்துக்கிவைத்து அழுவது என்னால் எதுவுமே செய்யமுடியாமல் புழுவாயத்துடித்தேன், அப்பொழுது ஒரு சின்ன அனுங்கள் சத்தம் கேட்டது யார் என்று அழுவதை நிறுத்திவிட்டு பார்த்தேன்.என் அக்காவின் மகன் நெஞ்சிலே காயத்துடன் மயக்கத்தில் இருந்திருக்கிறான் தன் தாயின் இரத்ததம்வடிந்து அவனது முகத்தை நனைக்கும் பொழுது மயக்கம் தெளிந்து இருக்கு அதனால் அவன் அனுங்கிஇருக்கிறான்.அதை வைத்தே நான் கண்டு பிடித்தேன் அவன் இறக்கவில்லை என்று, இல்லை என்றால் அவனும் இறந்துவிட்டான் என்று விட்டு இருப்பேன்,அவனுக்கு நெஞ்சில் காயம் என்பதை நான் உணர்ந்தேன் அவனை நான் எனது சரத்தைக்கொண்டு காயத்தைக்கட்டிவிட்டு அவனை தோளிலே போட்டேன்,, அதன் பின்னே முடிவு எடுத்தேன் யாரும் உயிருடன் இருப்பார்கள் என்று தூக்கி தூக்கி பார்த்தேன் யாருமே உயிருடன் இல்லை, பிறகு என்னால் அழுவதற்கு என்னிடம் கண்ணீரும் இல்லை வலுவும் இல்லை என்பதை உணர்ந்தேன். நான் சாகக்கூடாது என முடிவெடுத்தேன் ஏன் எனில் என்னை நம்பி ஒரு பச்சிளம் பாலகன் இருக்கிறான் என்பதை உணர்ந்தேன்.உடன் என்அம்மாவை கட்டி அனைத்து கொஞ்சிவிட்டு அப்பாவையும் அம்மாவையும் தடவி அழுதுவிட்டு என் அக்கா அத்தன் பிள்ளை அனைவரையும் கட்டி அழுது விட்டு அந்த வங்ககருக்குள் அனைவரையும் அடுகிவிட்டு என் கையாலேயே மண்வெட்டியால் அறையும் குறையுமாய் மூடிவிட்டு,என் அக்காவின் மகனைத தூக்கிக்கொண்டு மக்களோடு மக்களாக வட்டுவாகல் பாலத்தை நோக்கிநகர்ந்தேன்,என்மருமகன் கடுமையான மயக்கத்தில் இருக்கிறான் என்பதை உணர்ந்தேன் எவ்வளவு வேகமாய் போக முடியுமோ அவ்வளவுக்கு வேகமாய் நடந்தேன்.


வட்டுவாகல் பாலத்தில் அனைவரையும் மறித்து வைத்திருந்தார்கள் இராணுவத்தினர். நான் இவனையும் இழக்கக்கூடாது என்று.வேகமாக மக்களிடம் கேட்டுகேட்டு பாலத்தின் முன் பகுதியை அடைந்தேன் அதன் பின் அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டேன்.


அங்கு என் அக்காவின் மகனுக்கு காயங்கள் மாறியதும் ஆனந்தசுவாமி முகாமுக்கு அனுப்பபட்டேன்.அங்கு என் அண்ணியையும் மாமாக்களையும் கண்ட்டேன் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் நிலை தெரியாது ஆனால் நான் சொல்லாமல் இருக்கவும் முடியாது.ஏன் என்றால் அண்ணா எங்கு என்று கேட்டல் நான் சொல்லத்தானே வேண்டும்.


சொன்னேன் அண்ணி மயங்கி விழுந்துவிட்டா நான் நடந்தவற்றை மாமாக்களிடமும் சொன்னேன் .அண்ணி என் கையை பிடித்துகொண்டு உன்ர அண்ணா அம்மா பாவம் அம்மா பாவம் என்று அடிக்கடி சொல்லுவேறே,அம்மவோடையே என்னை தனித்து விட்டுட்டு போயிட்டாரே... என்று அண்ணி சொல்லி அழ நானும் அழுவதைத்தவிர வேறு என்னத்தை நான் செய்வது..

(என்று சொல்லி முடித்தார்)


கே .நீங்க உலகிற்கு எங்கள் உடாக என்ன சொல்லவிரும்பிகின்றிர்கள்

பதில் .நான் சொல்லி மக்கள் அறியவேண்டியது என்று ஏதும் இல்லை. ஆனால் அனைத்து தமிழ் மக்களுக்கும் சொல்கின்றேன்.நீங்கள் யாரையும் நம்பதிர்கள்,வெளிநாடுகள் எங்களை காப்பாற்றும் என்று நம்பிய லட்சக்கணக்கான அப்பாவித்தமிழ் மக்கள் அன்று ஸ்ரீலங்கா இராணுவத்தால் வட்டுவாகல் பாலத்துக்கு முன் கொலைசெய்யப்பட்டனர், பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு பின் சுட்டுக்கொல்லப்பட்டும், சிறுவர்கள் பசியால் துடிதுடித்தும் இறந்தனர் ஆனால் வெளிநாடுகள் எல்லாம் தங்கள் ஆயுதங்களை விற்கவும் அந்த ஆயுதங்களால் தமிழர்கள் எப்படி சாகின்றார்கள் அவர்களின் இரத்தங்களை சிங்களம் எப்படி குடிக்கிறது என்று பார்க்கத்தான் சரி அவர்கள்.இல்லையென்றால் ஒரு வெள்ளக்காரன்,அல்லது முஸ்லீம் செத்ததால் பார்த்துக்கொண்டு இருப்பார்களா?

நாங்கள் பாவித்தமிழர்கள் எங்களுக்கு என்று நாடு இல்லை கேட்பதற்கு யாரும் இல்லாதவர்கள் என்பதால் தானே ஈன இரக்கம் இன்றி கொல்ல பார்த்துக்கொண்டு இருந்தவர்கள். உலக நாடுகளே இலங்கையில் இருக்கும் தொன்னுரயிராம் விதவைகள் என்ன பாவாம் செய்தவர்கள் உங்களுக்கு?


நான் அனைத்து புலம்பெர்ந்து வாழும் தமிழ் மக்களிடமும் கேட்டுக்கொள்வது என்ன வென்றால் நீங்கள் உங்கள்நாடுகளில் இன்றைய மே-18 அன்று உரத்து குரல் கொடுங்கள் எங்களுக்கு தீர்வு ஒன்றை தாங்கள்.கொல்லப்பட்ட நாப்பதாயிரம் தமிழ் உயிர்களுக்கு பதில் சொல்லச்சொல்லுங்கள் என்று.... -இல்லையேல் தமிழர் உலகத்தில் எங்கும் தலை குனிந்து நிம்மதி இன்றி வாழவேண்டித் தான் வரும்-

Comments