அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் இணைத்து ரொறன்ரோ நகர மத்தியில் உள்ள முக்கிய இடங்களில் கனடா தமிழ் இளையோர் அமைப்பு நடத்திய "G for Genocide" எனும் விழிப்புணர்வுப் போராட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.
பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பல தமிழ் மாணவர்கள் இதில் பங்குபற்றியிருந்தனர்.
ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் இனவழிப்பு, மானுடத்துக்கெதிரான குற்றங்கள் போன்றவற்றைக் கண்டித்தும், தமிழர் தாயகத்தில் தொடரும் அடக்குமுறைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியும் வேற்றினத்தவர்களுக்கு அறிவுறுத்தும் விதமாகவும் இப்போராட்டம் நடத்தப்பட்டிருந்ததுடன், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உடன் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரும் கையெழுத்துப் போராட்டமாகவும் இது அமைந்திருந்தது.
பல்லின மக்கள் பலரும் இதில் கையொப்பமிட்டது மட்டுமன்றி, சிறிலங்காவின் தற்போதைய நிலையை அறிந்துகொள்வதிலும் ஆர்வங்காட்டியிருந்தனர்.
கையெழுத்துகள் அடங்கிய இம்மனு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
![](http://athirvu.com/phpnews/images/can52.jpg)
![](http://athirvu.com/phpnews/images/can%202222222.jpg)

![](http://athirvu.com/phpnews/images/cannnn2.jpg)
Comments