ஐம்பதாயிரத்திற்கு அதிமான தமிழர்கள் இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள ஐ.நாவின் அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசின் இனப்படுகொலையை விசாரணை செய்யக் கோரி டிவிட்டரில் கவன ஈர்ப்புப் பரப்புரை ஒன்று நடத்தப்படுகிறது.
இந்த பரப்புரையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ போர்க்குற்றவாளி என்றும் அவரை யுத்தக் குற்ற கூண்டிலில் நிறுத்தி விசாரணை செய்ய வேண்டும் என்றும் இனப்படுகொலைக்கு எதிரான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கைப் போரில் போர்க்குற்றம் இழைத்தமைக்கு காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி குறிப்பிட்டமைமையும் இந்த பரப்புரையில் கண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கவன ஈர்ப்புப்பரப்புரையில் பெருமளவானோர் ஆதரவளித்து கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். ஆதரவளிப்பவர்களின் தொகை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது.
http://www.facebook.com/pages/Srilanka-War-Crimes/192711584072439
Comments