தனி தமிழீழம் ஒன்றே தீர்வு: சென்னை லயோலா கல்லூரி ஆய்வில் 64 சதவீதம் கருத்து

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தனி தமிழீழம் ஒன்றே தீர்வு குறித்து சென்னை லயோலா கல்லூரி தகவல் தொடர்பு மாணவர்கள் நடத்திய ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தும் அரசின் தீர்மானத்துக்கு 62.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.

81 சதவீதம் பேர் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரும் தீர்மானத்தை வரவேற்றுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் ராஜபக்சே போர் குற்றவாளி என தீர்மானம் கொண்டுவர 69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தனி தமிழீழம் ஒன்றே இலங்கை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு என 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments