அதில் குத்துயிரும் குலையுமாக உள்ள பெண்போராளிகளை சிங்கள இராணுவம் மற்றைய இறந்த உடலங்களோடு தூக்கிப் போடுவதும், அப் பெண்களின் அங்கங்கள் குறித்து பாலியல்ரீதியாக தகாத வார்த்தைகளில் கதைப்பதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவில் உள்ள சில காட்சிகளை அதிர்வு இணையம் இங்கே இணைத்திருக்கிறது.
நடைபெற்ற இக் கூட்டத்தில் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளரும் முக்கிய உறுப்பினருமான திரு.சுரேன் சுரேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மனித உரிமைக் கழகத்தினர், சர்வதேச மன்னிப்புச் சபை உறுப்பினர்கள், பன் நாட்டு பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் இலங்கை அரசின் பிரதிநிதிகள் என மண்டபம் நிறைந்த இக் கூட்டத்தில் லிபியாவை உதாரணம் காட்டி திரு.சுரேன் சுரேந்திரன் அவர்கள் தொடுத்த கேள்விகளால் இலங்கைப் பிரதிநிதி மகிந்த சமரசிங்க திண்டாடியுள்ளார்.
லிபியாவில் நடந்த போர் குற்றங்களை விசாரிக்கும்படி அந் நாட்டு அதிபருக்கு நீங்கள் பரிந்துரை செய்வீர்களா என மகிந்த சமரசிங்கவை நோக்கி சுரேன் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க பிரதிநிதிகளும் இக் கூட்டத்தில் இருந்தால் இலங்கைப் பிரதிநிதிகள் இக் கேள்விக்குத் திண்டாடியுள்ளனர். இதனை அடுத்து போர்குற்ற விசாரணைகளை நடத்தும்படி நீங்கள் மகிந்தவிடம் கோரிக்கை விடுப்பீர்களா என்ற கேள்வியும் கேட்க்கப்பட்டுள்ளது.
இங்கே சனல் 4 தொலைக்காட்சியால் காண்பிக்கப்பட்ட போர் குற்ற ஆதார வீடியோக்கள் பலவற்றை உலகத் தமிழர் பேரவையே(GTF) வழங்கியுள்ளதாக அறியப்படுகிறது. பல மாதங்களாக இக் காணொளிகளைச் சேகரித்த உலகத் தமிழர் பேரவையினர், மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் இக் காணொளிகளை இலங்கையில் இருந்து ஐரோப்பாவுக்கு கொண்டுவந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கவிடையமாகும். புலம் பெயர் நாடுகளில் தமிழர்களுக்காக ராஜதந்திர ரீதியில் உயர்மட்டத்தில் பணி புரியும் அமைப்பாக GTF இருப்பதோடு, அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் ஒரு திறமை மிக்க அரசியல்வாதியாவும் உள்ளார்.
சோணியா காந்தியைச் சந்தித்ததால் தமிழ் மக்களிடையே சில விமர்சனங்கள் எழுந்தபோதும், அவர் அரசியல் நகர்வுகள் தேசியத்தை நோக்கிப் பயணிப்பதை அவதானிக்க முடிகிறதாக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நல்லிணக்க ஆணைக்குழு அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் என்ற விடையம் இலங்கை அரசின் பிரதிநிதியான மகிந்த சமரசிங்கவால் அக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. அதனை எதிர்த்த திரு.சுரேன் சுரேந்திரன் அவர்கள், எத்தனைபேர் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக உண்மைகளை மறைத்துள்ளனர் எனக் கேள்விகேட்டுள்ளார். இலங்கையில் சாட்சி சொல்பவர்களுக்கு பாதுகாப்பு உண்டா எனக் கேள்வி எழுப்பிய சுரேன், சாட்சிகள் சொல்வோரைப் பாதுகாக்க ஒரு அமைப்பாவது உள்ளதா என வினவியுள்ளார். இதேவேளை கே.ரி ராஜசிங்கம் புகைப்படம் பிடிக்க முற்பட்டவேளை அவர் தனது கைகளால் தன் முகத்தை மறைத்துக்கொண்டார் என அதிர்வு இணையம் அறிகிறது.
45 நிமிடமாகக் காண்பிக்கப்பட்ட இக் காணொளிக்கு பின்னர் மகிந்த சமரசிங்கவிடம் கேள்விகள் கேட்கலாம் என்று 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. முதலில் பேசிய அமெரிக்க பிரதிநிதி, இலங்கை அரசை முதலில் பாராட்டிப் பேச ஆரம்பித்து, பின்னர் மிக விரைவாக சாடத் தொடங்கினார். இலங்கை அரசு தன்னை சர்வதேசத்தில் இருந்து அன்னியப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். சீனா ரஷ்யா பாக்கிஸ்தான் மற்றும் மாலைதீவுப் பிரதிநிதிகள் இலங்கைக்கு ஆதரவாகப் பேசினர். பன் நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்ட இம் மாநாட்டில் கேள்விகளைத் தொடுக்க உலகத் தமிழர் பேரவைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
பிரித்தானிய தமிழ் மனித உரிமை ஆர்வலர் திரு டேவிட் ஜோசப் அவர்களும் இக் கூட்டத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தார். இக் கூட்டத்தில் கலந்துகொண்ட கே.ரி ராஜசிங்கம் நீண்ட நேரமாக உரையாற்றியதோடு, இலங்கை அரசையும் பாராட்டிப் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
போர்க்குற்றம் விசாரிக்கப்படாமல் போனால்…? அது தமிழ் மக்களிற்கு இழைக்கப்படும் துரோகம் - சனல் 4
உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம்பெற்ற போர்க்குற்றம் பற்றிப் பேசிவரும் ஐக்கிய நாடுகள் சபையும், அனைத்துலக சமூகமும் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் பற்றி பேசாமல் விட்டால் அது பாரிய தவறாக அமையும் என, பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
‘இலங்கையின் கொலைக்களம்’ என்ற விவரணப் படத்தைத் தயாரித்துள்ள சனல்-4 தொலைக்காட்சி எதிர்வரும் 14ஆம் நாள் இரவு 11:00 மணிக்கு அதனை ஒளிபரப்ப இருக்கின்றது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழ் புலிகளை வெற்றி கொண்டதற்காக சிறீலங்கா அரசாங்கத்திற்கு வாழ்த்துத் தெரிவித்து பிரேரணை நிறைவேற்றிய அதே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இந்தக் காணொளி இன்று காண்பிக்கப்பட்டுள்ளது.
இன்று குரல் (நிலமை) மிகவும் மாறியுள்ளது.
சாம் சரிபி (Sam Zarifi) - அனைத்துலக மன்னிப்புச் சபை
மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைக் கழைவதற்காகவே இரண்டாம் உலகப் போரின் பின்னர் இந்த அமைப்பு (ஐ.நா மனித உரிமைகள் சபை) உருவாக்கப்பட்டது. எனவே ஐ.நா நிச்சியம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
இப்பொழுது நடைபெற்றுள்ள இந்த நிகழ்வுகளுக்கு உலகம் என்ன செய்ய முடியும்????
அசிங்கத்தின் அடையாளமான நடுவிரலை காட்டிய இலங்கை அதிகாரி!
கடந்த 3ஆம் திகதி ஜெனிவாவில் சனல் 04 'இலங்கையின் கொலைக்களம்' என்ற பெயரில் சிறீலங்காவின் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தும் ஆவணப் படத்தை திரையிட்டது.
இந்த ஆவணப்படம் கூடியிருந்த உறுப்பினர்களை மட்டுமல்ல அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியதை நேரடியாகப் பார்க்க கூடியதாக இருந்தது.
பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள். பல உறுப்பினர்கள் இக் காணொளியை தொடர்ந்து பார்க்க முடியாமல் அரங்கைவிட்டு வெளியேறினர்.
சிறீலங்கா அரசின் இனப்படுகொலை காணொளியை பார்த்து ஆத்திரமுற்ற பார்வையாளர்களும் சில ஊடகவியலாளர்களும் கூடியிருந்த சிறீலங்கா பிரதிநிதிகளை நோக்கி தமது அதிருப்தியை தெரிவிக்க முனைந்தபோது கீழ்த்தரமான முறையில் அநாகரிமாக நடந்து கொண்டதையே நீங்கள் படத்தில் காண்கிறீர்கள்.
ஐநாவிற்கு அனுப்பப்பட்ட ஒரு பிரதிநிதியே இவ்வளவு கீழ்த்தரமாக ஐநா அரங்கில் நடந்து கொள்ளும்போது சிறீலங்கா இராணுவத்தினர் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை தனியாகச் சொல்லவும் வேண்டுமா என்று ஒரு சர்வதேச ஊடகவியலாளர் கருத்து வெளியிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
மனித இனமே வெட்கித் தலைகுனியும் ஈனச்செயல்களை சிறீலங்கா அரசு ஒரு இனத்திற்கெதிராக இழைத்ததை சனல் 04 ஆவணப்படுத்தியிருந்ததை பார்த்து பல நாட்டு உறுப்பினர்கள் அதிர்ந்து போயிருந்த தருணம் எந்தவித குற்றவுணர்வும் இன்றி சிறீலங்காவின் பிரதிநிதி ஊடவியலாளர்களையும் பார்வையாளர்களையும் பார்த்து இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டது சிறீலங்காவின் உண்மை முகத்தை ஐநா அரங்கில் வைத்து தோலுரித்திருக்கிறது
இது தொடர்பாக, கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளில் ஒருவரான சுகன்யா புத்திசிகாமணியிடம் ஓர் உரையாடல்.
சனல் 4 தொலைக்காட்சியால் நேற்று ஐ.நாவின் மனித உரிமை சபையின் கூட்டத் தொடரில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில் பெண் போராளிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்களின் கைகள், வாய், கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படும் காட்சி உள்ளடக்கப்பட்டுள்ளது
ஐ.நாவுக்குள் மட்டுமல்லாது அதற்க்கு அப்பாலும் சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கப் போகும் ஆவணப்படம் !
ஜெனீவாவில் இடம்பெற்றுவருகின்ற ஐ.நாவின் மனித உரிமை சபையின் கூட்டத் தொடரில், நேற்று வெள்ளிக்கிழமை (யூன்3) இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளில் ஒருவரான சுகன்யா புத்திசிகாமணியிடம் ஓர் உரையாடல்.
கேள்வி : திரையிடப்பட்ட ஆவணப்படம் பற்றிய ஒரு குறிப்பைத் தாருங்கள் ?
பதில் : ஆதரவுடன் பிரித்தானியாவின் சனல் 4 தொலைகாட்சின் ஆவணப்படமாக அது அமைந்திருந்தது.
அண்ணளவாக 50 நிமிடங்கள் ஓடக்ககூடியதாக அமைந்திருந்தது அந்த ஆவணப்படம்.
ஓரு அரசுக்குரிய கட்டுமானங்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழீழம் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டிருந்தது என்பதும், இன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன், தமிழீழம் எவ்வாறு உள்ளது என்பதாக ஆவணப்படக் காட்சிகள் விரிகின்றன.
சிறிலங்கா அரசினால் பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்டு, தஞ்சமடைந்து பொது மக்கள், சிறிலங்கா இராணுவம் எறிகணைகளை வீசி கொன்று குவிக்கப்பட்ட விடயங்கள். பிரதானமாக மருத்தவமனைத் தாக்குதலகள் தகுந்த ஆவணங்களுடன் பதிவு காட்சிகளாக விரிந்தன.
அத்தோடு வெள்ளைக் கொடியுடன் சென்றவர்கள் படுகொலை செய்யப்பட்டமை ,கேணல் ரமேஷ், இசைபிரியாவின் கொலை மற்றும் நிராயுத பாணிகளாக போராளிகள் படுகொலை செய்யப்படுகின்றமை உட்பட அதிர்ச்சியும் கவலையும் தரும் பல விடயங்கள் காட்சிகளாக ஆவணப்படத்தில் அமையப் பெற்றிருந்தன.
கேள்வி :ஆவணப்படத்தில் இதுவரை வெளிவராத காட்சிகள் உள்ளடக்கப் பட்டிருந்தனவா ?
பதில் : ஓம் !
அதில், பிரதானமாக பெண் போராளிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்களின் கைகள், வாய், கண்கள் கட்டப்பட்ட நிலையில், சிறிலங்கா இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகின்ற, மிக மோசமான காட்சிகளாக அது அமைந்திருந்நது.
கேள்வி :திரையரங்கில் யார் யார் எல்லாம் இருந்தார்கள் ?
பதில் : ஐ.நாவுக்கான நாடுகளின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மனித உரிமை அமைப்புக்கள், மற்றும் ஐ.நா அதிகாரிகள்.
முக்கியமாக சிறிலங்காவின் ஐ.நாவுக்கான பிரதிநிதிகள்.
கேள்வி :ஆவணப்படத்தின் பின்னர் அரங்கம் எப்படியிருந்தது ?
பதில் :அரங்கம் சுமார் பத்து நிமிடங்களுக்கு அமைதியாக இருந்தது. பலரது கண்களில் கண்ணீர் காணப்பட்டது. எல்லோர் முகத்திலும் ஒருவித கவலை, அதிர்ச்சி படர்ந்திருந்தது.
பின்னர், தமிழ் மக்கள் மீது ஒரு இனப்படுகொலை நடத்திருக்கின்றது என்பதனை பலரும் உரையாடிக் கொண்டதை கணக்கூடியதாகவும் இருந்தது.
கேள்வி :ஆவணப்படம் குறித்தான சிறிலங்கா தரப்பின் நிலைப்பாடு எப்படியிருந்தன ?
பதில் : பெரும் நெருக்கடிக்குள் சிறிலங்கா அரச தரப்பினர் உள்ளாகியிருந்தனர்.
ஐ.நாவுக்கான நாடுகளின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு, ஒரு தெளிவான பதிலை முன்வைக்க முடியாது சிறிலங்கா தரப்பினர் நிலைதடுமாறியிருந்தனர்.
உண்மையில் இந்த ஆவணப்படம், ஐ.நா மனித உரிமை சபையின் கூட்டத் தொடருக்குள் மட்டுமல்ல, அதற்கு அப்பாலும், சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியையும், அழுத்தத்தையும் கொடுக்கப் போகின்றது என்பது மட்டும் உறுதி.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Comments