தமிழர்கள் பிரிந்து சென்று சுயாட்சியுடன் வாழ்வதற்கான பொது வாக்கெடுப்பு

அன்பின் ஜனாதிபதி ஒபாமா அவர்களே,

அண்மையில் தென் சூடானில் இடம்பெற்ற பொதுசன வாக்கெடுப்பில் சுதந்திர தென்சூடானை ஆதரித்துப் பொதுமக்கள் அமோகமாக வாக்களித்திருந்தனர். தென் சூடான் மக்களுக்கு இப் பொதுசன வாக்கு மூலம் சாத்தியமாகும் இறைமையை நாம் அங்கீகரித்து ஆதரிக்கின்றோம். இதனால் முக்கியமான இரு விடயங்கள் நிறைவேறுகின்றன.

முதலாவதாக தென் சூடான் மக்களுக்குத் தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பும் அமைதியும் கிட்டுகின்றது. இரண்டாவதாகப் பல வருடங்களாக நீடித்த பயங்கரப் போர் முடிவுக்கு வந்துள்ளது.

தென் சூடானில் இடம்பெற்றதைப் போன்றே இலங்கையிலும் ஓர் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப் பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். சூடானைப் போன்றே பல ஆண்டுகளாகத் தொடர்ந்த பயங்கரப் போரில் இலங்கை அரசு நாதியற்ற சிறுபான்மை இனத்தைக் கொடூரமாகத் தாக்கிக் கொன்றொழித்தது. தென் சூடானிய மக்களைப்போன்றே இலங்கைத் தமிழர்களும் பாதுகாப்புடன் சுதந்திரமாக வாழ இறைமையுடன் கூடிய தனி நாடு இன்றியமையாததாகும். எண்ணற்ற சிறுபான்மைத் தமிழ் இனத்தவரைக் கொன்றொழித்ததுடன் அவர்களைப் பல இன்னல்களுக்கும் ஆளாக்கியது.

இலங்கையில் யுத்த அனர்த்தம் சார்ந்த பொறுப்பேற்பு சம்பந்தமாக ஆராய ஐ.நா சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பெற்ற நிபுணர் குழுவின் அறிக்கை 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 25ந் தேதி வெளியாகியது. அவ்வறிக்கையில் இலங்கை அரசிற்கெதிரான மேல் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.



1. பரவலான சரமாரிக் குண்டு வீச்சுக்குப் பொது மக்கள் பலியாக்கப் பட்டது
2. மருத்துவ மனைகளும் மக்கள் சேவை மையங்களும் குண்டுவீசித் தாக்கப் பட்டமை
3. மக்களுக்கு மனிதாபிமான உதவி மறுக்கப்பட்டமை
4. இடம் பெயர்ந்த மக்களுக்கும் விடுதலைப் புலி உறுப்பினருக்கும் எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள்
5.போர்க்களத்திற்குப் புறத்தே பத்திரிகையாளர்களுக்கும் அரசிற்கு முரணானவர்களுக்கும் ஏதிரான மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டமை

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக சர்வதேச விசாரணை நடைபெறவேண்டுமென இவ்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கீழே கைச்சாத்திட்டிருக்கும் நாம் இலங்கையில் தமிழ் மக்களுக்குத் தங்கள் சொந்தப் பிரதேசத்தில் இறைமையுடன் கூடிய சுய ஆட்சி அமைய வேண்டுமா எனும் வினாவிற்கு விடை அளிக்கக்கூடிய பொதுசன வாக்nகுடுப்பு ஒன்று இடம்பெறுவதற்கு அமெரிக்காவின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.


எப்படி வாக்களிக்கலாம்?

Click here to sign the

“Petition to Support a Referendum in Sri Lanka Concerning Self-determination for Sri Lankan Tamils”


-------------

பத்துக் கோடிக்கும் அதிகமான தமிழர்கள் இருக்கையில் தமிழீழம் வேண்டும் என்று விரும்புவோர் வெறும் இரண்டாயிரம் பேரா ?

தமிழர்கள் பிரிந்து சென்று சுயாட்சியுடன் வாழ்வதற்கான சர்வதேச பன்னாட்டு கண்காணிப்புடன் கூடிய பொது வாக்கெடுப்பினை நடாத்தக் கோரி ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு நடாத்திவரும் இணையவழி வாக்குப்பதிவில் இதுவரை கலந்து கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கையினை ஆராயும் போது இந்தக் கேள்விதான் ஆச்சரியத்தோடு மனதில் எழுகிறது.

உலகெங்கினும் பத்துக் கோடிக்கும் அதிகமாக தமிழன் பரந்து வாழ்கையில் அதில் பல்லாயிரம் பேர் இணையத்தள பாவனையில் தினமும் பரிச்சயத்துடன் இருக்கையில் இன்று வெளியிடப்பட்ட வாக்குப்பதிவு இணைப்பினை பயன்படுத்தியோர் வெறும் இரண்டாயிரம் கூட இல்லை. ஏன் இந்த அலட்சியம் என்று புரிபடவில்லை?

தாமதிக்காது ஒவ்வொரு வினாடியும் வாக்குப்பதிவை ஒருவர் பயன்படுத்தினாலே விரைந்து ஆயிரங்கள் இலட்சங்கள் ஆகவும் இலட்சங்கள் கோடிகளாகவும் உயர்ந்து நின்று தமிழர்தரப்பின் விருப்பினை உலகின் முன் வெளிப்படுத்தி நிற்கும். செய்வீர்களா தமிழர்களே!?


எப்படி வாக்களிக்கலாம்?

Click here to sign the

“Petition to Support a Referendum in Sri Lanka Concerning Self-determination for Sri Lankan Tamils”


முழுக்க முழுக்க எமது நியாயமான கோரிக்கையினை வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் வாக்கெடுப்பாகும். இதில் அதீத ஆர்வம் காட்டி மகிந்தவின் முகத்திரை சர்வதேசத்தின் முன் கிழிந்து தொங்கியதைப் போன்று அவமதித்து விடாதீர்கள்.

அதாவது ஒருவர் பல்வேறு வாக்குகளை செலுத்தி முறைகேட்டினை செய்துவிடாதீர்கள். ஒருவரது மின்னஞ்சல் முகவரியை குறித்து உங்கள் குடும்ப அங்கத்தவர்களின் பெயர்களில் வாக்குகளை செலுத்துங்கள். ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் இருந்தால் அந்த ஐந்து பேரின் பெயரில் வாக்கினை செலுத்தலாம். இந்தத் தகவல்களை உங்கள் அறிமுகமானவர்களிடம் தெரிவித்து வாக்களிக்க செய்யுங்கள். இதுவும் தமிழீழத்திற்கான ஒரு போராட்டமே.

Comments