கனடா அறிவக நூலகத் திறப்பு விழா

கனடா அறிவக நூலகம் கடந்த யூன் 05ம் நாள் வெகு விமர்சையாகக் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கனடாவில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் மொழியை போதித்து வரும் கனடா அறிவகமானது தன்னகத்தே சுமார் மூன்றாயிரம் மாணவர்களை கொண்டுள்ளமை சிறப்பு அம்சமாகும்.

நூலகத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, சிங்கப்பூர் நன்யாங் தொழிநுட்பக் கல்லூரி இணைப் பேராசிரியர் கலாநிதி ஆர் சிவகுமாரன், கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன், மார்க்கம் யூனியன் வில் கல்விச்சபை உறுப்பினர் ஜொனிற்றா நாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் அறிவகத்தின் தமிழ்மொழி கல்வியூட்டும் பயணத்தில் இந்நூலகத் திறப்பானது, ஓர் மைல்க்கல்லாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நூலக முகவரி: 705, Progress Avenue # 101, Scarborough, Ontario

Comments