போர் முடிந்தும் இரண்டு வருடங்கள் என்கின்ற தலைப்பில் ஐரோப்பிய பாராளமன்றத்தில் GUE/ NGL European united lift – Nordic green left europen parliament group என்ற அமைப்பினரால், அனைத்துலக மக்கள் பேரவையினராலும் ஒன்றுகூடல் ஐரோப்பிய பாராளமன்றத்திற்குள் யூன் 1ம் திகதி புதன்கிழமை பி.பகல் 14.00 முதல் 18.30 மணிவரை இடம்பெற்றிருந்தது.
தாயகத்திலிருந்து முன்னைநாள் பாராளமன்ற உறுப்பினர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி உறுப்பினர்கள் திரு.செல்வராசா கஐந்திரன், திரு.சின்னத்துரை வரதராஐன், திரு.விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரும், தமிழ்நாட்டில் இருந்து மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வை.கோ அவர்களும் விசேடமாக வந்து கலந்து கொண்டிருந்தனர்.
இவர்களுடன் உலகின் அனைத்து நாடுகளிலும் இருக்கும் தமிழ் மக்கள் பேரவையினர், ஏனைய தமிழர் அமைப்புக்கள் என 20 அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 200 பேர் வரையில் கலந்து கொண்டிருந்தனர்.
ஏற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் பி.பகல் 14.00 மணியில் இருந்து 14.50 தாயகத்தில் இருந்தும் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்களுடனான விசேட சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டது. சரியாக 13.55 மணி அகவணக்கத்துடன் ஓன்று கூடல் தொடக்கி வைக்கப்பட்டு விசேடமாக வருகை தந்தவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரெஞ்சு, இத்தாலி, டொச், ஆங்கிலம் மொழியினர் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கான மொழிபெயர்ப்பும் எமது வளர்ந்து வரும் இளைய சந்ததியினரால் செய்யப்பட்டிருந்தது.
தாயகத்தில் இன்று இருந்து வரும் பொருளாதரா கஸ்ரநிலமை பற்றியும், குறிப்பாக இளைஞர் யுவதிகளின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்பட்டுப் போய்யுள்ளமையும், அதற்கு ஒரு காரணமாய் வெளிநாட்டில் உள்ளவர்கள் ஒரு சிலரும் உடந்தையாய் இருந்து விடுவதும் ஒரு வேதனையான விடயம் என்றும், அதற்கு சில உதாரணங்களையும் கூறியிருந்ததோடு, பொருளாதாரத்தில் மிகவும் துன்பமாதொரு சூழ்நிலை எம்மவர்கள் எதிர்நோக்குவதையும் அதனை புலம் பெயர்ந்த தமிழ் மக்களே ஈடுசெய்ய வேண்டும் எனவும், தாயகத்தில் அத்தியாசியமான அபிவிருத்திகளை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். திரு.செல்வராசா கஐந்திரன் தனது கருத்துரையில் பொருளாதாரக்கஸ்ரம் தலைவிரித்தாடுவதாகவும், நிவாரணம் என்கின்ற விடயத்திற்காக எமது மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகளும், அதனால் எம்மவர்கள் தவறான வழிக்கு கொண்டு செல்கின்றதொரு நிலைக்கு தள்ளப்படுவதாகவும், தமிழர்கள் சிங்களவர்களால் வெற்றிகொள்ளப்பட்டு விட்டனர் என்கின்ற மனநிலையும், இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்படவேண்டும் என்றும் கூறியிருந்தார் சரியான நேரத்தை கடைப்பிடிக்க வேண்டியிருந்ததால் 14.50 மணிக்கு அவைத்தலைவரால் கேள்வி பதிலுக்கான நேரமும் ரத்துச்செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஐரோப்பிய பாராளமன்ற உறுப்பினர் Paul Murphy அவர்களின் தலைமையில் ஒன்று கூடல் 15.00 மணிக்கு ஆரம்பித்திருந்தன. கட்டம் கட்டமாக மாலை வரை ஐரோப்பிய பாரளாமன்ற உறுப்பினர்களும், மனிதவுரிமைகளுக்கு பொறுப்பான ஐரோப்பிய பாராளமன்ற உதவிப்பொறுப்பாளர்கள் முதலாவது கட்டத்தில் ஒன்றுகூடலை நடாத்தியிருந்தனர். நடுநிலமையாற்றிய Heidi Hautala (MEP) அவர்கள் உரையாற்றியிருந்தார். சர்வதேச நீதியே ஒட்டு மொத்தமான தமிழினப்பிரச்சiயை தீர்க்க வேண்டும் என்றும். சிறீலங்காவில் நடைபெற்ற இனப்படுகொலைக்கெதிராக கடந்த மே 12ம் நாள் ஐரோப்பிய பாராளமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டதாகவும், அதில் சில நாடுகள் சிறீலங்காவுக்கு ஆதரவு வழங்கியதும். ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் இனப்படுகொலை செய்தமைக்கு சிறீலங்காவை சர்வதேச நீதிமன்றத்துக்கு போவதற்கு பணிக்காமல், சில கோரிக்கைகளை கொடுத்து அதனை பின்பற்றுமாறு சொல்லியது தவறான முடிவுதான் என்றும், தற்பொழுது மீண்டும் ஒரு வாக்கெடுப்பிற்கு தயார் செய்யப்பட்டு வருகின்றது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாவும் தொடர்ச்சியாகவும், தமக்கேற்பட்ட பாதிப்புக்களை தெரியப்படுத்த வேண்டும் என்றும், அதற்குரிய உடனடியாக இல்லாவிட்டாலும் காலம் சென்றெண்டாலும் அதனால் பயனடைய முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இரண்டாவது அமர்வில் படுகொலைகள், அப்பாவி மக்கள் படுகொலைகள், போராளிகள் மீது பழிவுமத்தல் என்ற பல்வேறு விடயங்கள் பகிரப்பட்டன் இதில் குறிப்பாக Soren SONDERGAARD . MP Eu அவர்கள் குறிப்பிடும் போது ஐரோப்பிய யூனியன் கூட தமிழ் இனத்தின் அழிப்புக்கு ஒரு காரணகர்த்தாக்களாய் இருந்துள்ளார்கள் என்றும், சமாதான காலத்தில் சமாதான நேரத்தில் விடுதலைப்புலகள் அமைப்பினரை தடைசெய்தமையும், சிறீலய்கா அரசானது தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை விற்ப்பனை செய்யும் போது இதனை தடைசெய்யாதமையும், அதனால் பல்லாயிரம் மக்கள் கொல்லப்படுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு கண்டிக்காமல் இருந்து அதற்கு துணைபோனதும் தவறான விடயம் என்பதை தெரிவித்திருந்தார்.
மூன்றாவது கட்ட கலந்துரையாடலில் ஆசியாவுக்கான ஐரோப்பிய பாராளமன்ற திட்டமிடலுக்கான ஆலோசகரும், சர்வதேச சமூக வேலைகளுக்கான பிரதிநிதியும் பங்கு பற்றியிருந்தார். நடைபெற்ற இந்த மூன்று கட்ட கலந்துரையாடலில் ஒவ்வொரு கட்டங்களிலும் தமிழர் தரப்பு பிரநிதிகள் தமிழினத்தின் பூர்வீக வரலாற்றிலில் இருந்து முள்ளிவாய்கால் வரையும் காட்சிப்படுத்தலுடன் விளக்கம் கொடுக்கப்பட்டதும். அதன் பின்னர் முள்ளிவாய்க்காலின் நேரடிச்சாட்சியான, தமிழ்வாணியின் உரையும், தமிழினத்தின் ஆதரவாளர் மனிடவர்க்கத்தின் பகுதி விரிவுரையாளர் கலாநிதி பீற்றர் நெல்சன் அவர்கள், சிங்கள இன சகோதர அமைப்பின் செயலாளர் மகாத்பண்டா சிறிநாத் பெரேரா அவர்களும், லண்டனிலிருந்து ஐனனி அவர்கள், தாயகத்திலிருந்து செல்வராஐ கஐந்திரன், மற்றும் ஒவ்வாரு நாட்டின் பிரதிநிதிகளும் தமது அறிக்கைகளை வாசித்தளித்தனர்.
தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கான நீதியும், குற்றவாளிகள் கூண்டில் ஏற்றி தண்டிக்கப்பட வேண்டும் தமிழ் மக்களுக்கு தனியரசு உருவாக வேண்டும் அது தமிழீழமாகவே இருக்க வேண்டும். விடுதலைப்புலிகள் மேலான தண்டனையை ஐரோப்பிய ஒன்றியம் திரும்பப பெறவேண்டும். என்று பல்வேறு கோரிக்கைள் கலந்து கொண்ட அமைப்புகளை பிரதிநிதிப்படுத்துபவர்களால் எடுத்துக்கூறப்பட்டது.
தமிழ்நாட்டில் இருந்து வந்து கலந்து கொண்ட திரு. வைக்கோ அவர்கள் எட்டு நியாயமான கோரிக்களை ஐரோப்பிய ஒன்றியத்திடம் விட்டிருந்தார். அவருக்கு பிரத்தியேகமாக கொடுக்கப்பட்ட நேரத்தை கடந்து விட்டபோதும் அவரின் உரைக்கு மதிப்பளித்து மேலதிக நேரம் கெடுக்கப்பட்டதும் அவரின் உரைக்கு நன்றி தெரிவிப்பது போன்று அனைவராலும் எழுப்பப்பட்ட கரகோசவொலியானது அடங்குவதற்கு நான்கு நிமிடங்கள் வரை சென்றது.
நிகழ்வின் முடிவில் இதனை ஏற்பாடு செய்த Paul Murphy அவர்கள் தனது காத்திரமான, நம்பிக்கையை ஏற்படுத்துகின்ற தொகுப்பினை வழங்கியிருந்தார்.
இன்று நடைபெற்ற ஒன்றுகூடலானது தமிழ் மக்களின் வரலாற்றில் ஒரு முன்னேற்றகரமான தொரு பதிவாக பதிந்து விட்டதை எல்லோராலும் பேச்சுகளில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது.
நன்றி
அனைத்துலக மக்கள் பேரவை

Comments