வைத்தியர் சத்தியமூர்த்திக்கு உலக சுகாதார அமைப்பின் விருது

தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் போரின் போது மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் வன்னியில் போரில் காயமடைந்த மக்களுக்கு வைத்திய சேவைகளை வழங்கியதற்காக வைத்தியக் கலாநிதி ரி சத்தியமூர்த்திக்கு உலக சுகாதர நிறுவனம் 2011 ஆம் ஆண்டுக்குரிய மனிதாபிமானத்திற்கான அனைத்துலக விருதை வழங்கியுள்ளது.


சிறீலங்கா அரசின் தடைகளால் மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையாக இருந்தபோதும், தாக்குதல்களுக்கு மத்தியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு சேவையை வழங்கியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.


அவரின் சேவையை பாராட்டி பல ஐ.நா அமைப்புக்களும் அவருக்கு கௌரவங்களை அளித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திரு சத்தியமூர்த்தி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான வைத்தியப் பணிப்பாளராக பணியாற்றியது இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments