கயல் என்ற கவர்ச்சிகரமான இளம் பெண்ணின் கொலையுடன் �ரூற்றிங் புரோட்வே� படம் ஆரம்பிக்கின்றது. படத்தில் வருகின்ற ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமே ஒவ்வொரு கதை இருந்த போதும், முன்னர் வன்முறைக் குழுவில் இருந்த அருண் என்ற இளைஞனின் கதையே இப்படமாக விரிகின்றது.
குறிப்பாக ஆபிரிக்க இனத்தவரிடையே காணப்படும் பல குழுக்களும், குழு மோதல்களைப் பற்றியுமே பலர் திரைப்படங்களை எடுத்துள்ளனர். ஆனால் முதல் முறையாக புலம்பெயர் தமிழ் சமூகத்தில் உள்ள தமிழ் இளைஞர் குழுக்கள் பற்றி படம் ஏன் எடுக்கப்படவேண்டும் என்ற கேள்விகள் தற்போது மேலோங்கியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் கல்வி, கலாச்சாரம், வணிகம் மற்றும் அரசியலில் என்று பல துறைகளில் முன்னேறியுள்ளனர். அதனை விடுத்து ஒரு சமூகத்தில் உள்ள சிலரது தகாத நடவடிக்கையை படமாக்கி, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கெட்டபெயரை ஏற்படுத்தும் வகையில் இப் படம் அமையபோகிறதா என்ற அசாமும் இங்கே நிலவுகிறது. இது குறித்து மக்கள் உங்கள் கருத்துகளைப் பதிவுசெய்வது நல்லது. உங்கள் பின்னூட்டங்கள் அனைத்தையும் நாம் படத் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பிவைப்போம் !
Comments