அன்பார்ந்த உலத்தமிழ் மக்களே!
தாயக விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களினதும், மக்களினதும் அடியொற்றி தாயகவிடுத லைக்காக உழைக்கும் எம் உறவுகளே வணக்கம்!
யூன் முதலாம் நாள் அன்று ஐரோப்பியப் பாராளமன்றத்தில் சிறீலங்காவில் போர் முடிவ டைந்து இரண்டு வருடங்களின் பின் என்கின்ற தலைப்பில் GUE/NGL என்கின்ற அரசியல் கட்சியுடன் Tamil Solidarity Campaign மற்றும் அனைத்துலக மக்களவைகளும் இணைந்து நடாத்தியிருந்த ஒன்று கூடலானது மிகவும் காத்திரமானதாகவும், தமிழர் தரப்பின் அனைத்து வகையிலான எதிர்பார்ப்பும் நிறைவேறும் என்கின்றதொரு நம்பிக்கை ஏற்படுத் துவதாகவும் அமைந்துள்ளது. அக்கூட்டத்தில் Paul Murphy MEP (Socialist Party Ireland) அவர்கள் தலைமைப்பொறுப்பை ஏற்று நடாத்தியிருந்தார்.
தாயகத்திலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும் வருகை தந்திருந்த தமிழ் உணர்வாளர்களுடன் சர்வதேச மட்டத்திலே தமிழீழ விடுதலைக்காக உழைக்கின்ற அமைப்பின் பிரதிநிதிகள், மற்றும் தமிழினத்தின் நியாயத்திற்காகவும், நீதிக்காகவும் குரல் கொடுக்கின்ற வேற்றின சகோதரர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். அத்துடன் அவர்களால் முன்வைக்கப்பட் டிருந்த ஆவணங்கள், உரைகள் மிகவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாகவே அமை ந்திருந்தன.
சிங்கள அரசு மேற்கொண்டுவரும் தமிழினப்படுகொலை, தமிழினப்பிரச்சனையில் சர்வதே சத்தின் நிலைப்பாடு, சிறீலங்கா மேற்கொண்டிருந்த போர்க்குற்றஙகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அவை தொடர்பான அறிக்கை போன்ற விடயங்கள் பற்றியும் துன்பத்தில் வாழும் தமிழ்மக்களுக்குகென செய்யப்பட வேண்டிய புனர்வாழ்வு வேலைகள் பற்றியும், கருத் துக்கள் கூறப்பட்டிருந்தன.
அத்துடன் எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்குரிய வகையில் முதற்கட்டமாக பரிந்துரை ஒன்று தமிழர் தரப்பால் Paul Murphy அவர்களின் ஆதரவுடன் தயாரிக்கப் பட்டிருந்தது. அதில் சில விடயங்கள் மிகக்கவனத்துடன் திருத்தப்பட வேண்டுமென்பதை பேராசிரியர் நில்சன் அவர்கள் கூறியிருந்தார். அப்பரிந்துரையை ஏற்றுக்கொள்வதெனவும் குறிப்பிடப்பட்ட திருத்தங்கள் கருத்தில் எடுக்கப்படுமெனவும் கூறப்பட்டது.
சிறீலங்கா அரசின் ராஐதந்திர அழுத்தங்களுக்கு மத்தியிலும் சிங்கள அரசின் கோர முகத்தை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்கூறக் கூடியதாக ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் நடைபெற்றதாகவே இந்தக் கருத்தரங்கு அமைந்திருந்தது. அந்த வகையில் தமிழீழ மக்கள் அவைகள் அமைந்திருக்கும் நாடுகளிலும், சர்வதேச முன்றல்களிலும் எமது நியாயமான விடுதலைப்போராட்டத்தை ஏற்றுக்கொண்டு தனித்தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற அடிப்படையில் உழைப்போரை ஏற்றுக்கொள்ளுவதோடு அந்தவகையில் குரல் எழுப்பக் கூடிய அனைத்து அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றவே அனைத்துலக மக்களவை விரும்புகின்றது.
எமது மக்களினதும் போராளிகளினதும் மாபெரும் தியாகத்தால் வாழ்ந்த, வாழ்ந்து கொண் டிருக்கின்ற புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் எந்த சக்திகளினதும் நிகழ்சிநிரலில் வீழ்ந்து விடாது எமது விடுதலையை நோக்கி உழைப்போம் என உறுதி கொள்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்
சி.பிரதீபன்
இணைப்பாளர்
செயலகம் அனைத்துலக மக்களவைகள்
Comments